கோவை

நடத்தையில் சந்தேகம்.. திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவியை குத்திக் கொன்ற கொடூரன்!

Quick Share

கோவையில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் கூறுகையில் கோவை சுந்தராபுரம், காந்திநகர் 3வது வீதியை சேர்ந்தவர் நாகார்ஜுனன் (வயது 30). இவர் ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சர்மிளா (27). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். 

இந்த நிலையில் நாகார்ஜுனனுக்கு குடிபழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் காதல் மனைவியின் நடத்தையிலும் நாகார்ஜுனன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த நாகார்ஜுனன், அங்கு கிடந்த கத்தியால் காதல் மனைவி சர்மிளாவை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, மார்பு, வயிறு உள்பட 8 இடங்களில் பலத்த கத்திக்குத்து விழுந்ததில் சர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து வீட்டைவிட்டு நாகார்ஜுனன் தப்பிச்சென்றுவிட்டதால் சர்மிளா வீட்டில் இறந்து கிடந்தது யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையில் இரவு 8 மணியளவில் நண்பர்களுடன் மீண்டும் மதுகுடித்த நாகார்ஜுனன், மனைவியை கத்தியால் குத்தி கொன்றதாக கூறியுள்ளார். அதன்பின்னர் தான் மற்றவர்களுக்கு தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதுங்கியிருந்த நாகார்ஜுனனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சர்மிளாவுக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணை நடந்து வருகிறது. நடத்தையில் சந்தேகம் காரணமாக திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவியை கணவர் குத்திக்கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் !

Quick Share

கோவையில் குடும்ப தகராறில் பெண் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டீ மாஸ்டர்
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் நேரு பூங்கா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கணேசன் (வயது 55). இவர் சிங்காநல்லூர் திருச்சி சாலை சந்திப்பில் உள்ள ஒரு பேக்கரில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பொன்னுத்தாய் (46). இவர்களுக்கு மதன்குமார் (24), அருண்குமார் (18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

மதன்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் அருண்குமார் சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கணேசனுக்கும் அவருடைய மனைவி பொன்னுத்தாயிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் கணேசன் கடந்த 2 வாரமாக சரிவர வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நேற்றும் வழக்கம்போல் கணேசன் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பொன்னுத்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பொன்னுத்தாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர் கணேசன் அங்கு இருந்து தப்பி சென்றார். இதற்கிடையே வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மகன் மதன்குமார், அங்கு தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்தனர்.
கணவர் கைது
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த கணேசனை கைதுசெய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர். குடும்ப தகராறில் மனைவியை கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக சிங்காநல்லூர் பகுதியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2 மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர்! மாணவிகள் இருவரையும்...

Quick Share

கோவையில் இருந்து குமரி வரை காதல் வேட்டை நடத்தி 2 மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சேலம் ஆத்தூர் அருகே உள்ள தெடாவூர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது40). அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக 2019-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் நிதி நிறுவனம் தொடங்கி, பொதுமக்களிடம் பணம் மோசடி செய்ததால் மணிமாறன் மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

மாணவிக்கு டியூசன்

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதற்காக அந்த பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் 11-ம் வகுப்பு படிக்கும் தனது 16 வயது மகளை கணித பாடம் கற்றுக்கொடுக்கும்படி மணிமாறனிடம் டியூசனுக்கு அனுப்பியுள்ளார். அந்த மாணவியிடம் மணிமாறன் தனது மன்மத சேட்டையை காட்டினார். இதையடுத்து தனது வலையில் சிக்கிய அந்த மாணவியை மணிமாறன் கடத்தி சென்றார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

மேலும் மணிமாறனை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டது. மாணவியுடன் பல்வேறு இடங்களில் சுற்றிய மணிமாறன் போலீசார் கண்களில் சிக்காமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தார்.

பின்னர் அந்த மாணவியுடன் குமரி மாவட்டம் சுசீந்திரத்துக்கு சென்றார். அங்கு இருவரும் புதுமண தம்பதி என்று கூறி ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கல்லூரி மாணவியையும் வீழ்த்திய காதல் மன்னன்

இந்த நிலையில் அவர்கள் இருவரும் குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரின் மகளான 2-ம் ஆண்டு கல்லூரி மாணவியை மணிமாறன் காதல் வலை வீசி மயக்கினார். அந்த மாணவியையும் கடத்தி மணிமாறன் தலைமறைவானார்.

இதற்கிடையே கல்லூரி மாணவி காணாததால் அவரின் பெற்றோர் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி சுசீந்தரம் போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே அந்த 2 மாணவிகளையும் கடத்திய மணிமாறன் பல்வேறு இடங்களுக்கு அவர்களை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

திருப்பதியில் கைது

இந்த நிலையில் மணிமாறன் ஆந்திரமாநிலம் திருப்பதியில் தங்கியிருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் தனிப்படையினர் திருப்பதி சென்று மணிமாறனை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த 2 மாணவிகளையும் மீட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர்.

மணிமாறன் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம், மிரட்டல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் மணிமாறன் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவர் என்பதும், அந்த பெண்கள் கருத்து வேறுபாடு காரணமாக மணிமாறனை பிரிந்து சென்றதும் தெரியவந்தது. மாணவிகளை கடத்தி சென்று சுற்றியபோது போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மணிமாறன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வந்துள்ளார்.

வீதி, வீதியாக டீ விற்ற கல்லூரி மாணவி

மணிமாறன் திருப்பதியில் தங்கி இருந்தபோது கல்லூரி மாணவி வீட்டில் இருந்து எடுத்து வந்த பணம், நகைகள் விரைவாக காலியானது. இதனால் செலவுக்கு பணம் இன்றி தவித்த மணிமாறன், கல்லூரி மாணவியை டீ விற்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். வேறு வழியின்றி அந்த கல்லூரி மாணவியும் சைக்கிளில் வீதி, வீதியாக சென்று டீ விற்பனை செய்து உள்ளார். இதனிடையே பணத்தேவை காரணமாக மாணவிகள் இருவரையும் விபசாரத்தில் தள்ள மணிமாறன் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளக்காதலியுடன் வந்த கணவன்…! மனைவியும் மகனும் கொலை செய்...

Quick Share

கோவை  மாவட்டம் ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது55). தச்சுதொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நாராயணசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் மனைவி ராஜேஸ்வரிக்கும், நாராயணசாமிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று  மூத்த மகன் ராஜ்குமாரின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் நடைபெற்று உள்ளது. அங்கு தனது கள்ளக்காதலியுடன் நாராயணசாமி வந்துள்ளார். இதனை கண்டு மனைவி ராஜேஸ்வரியும் மகன் ராஜ்குமாரும் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
இதனால் கோவிலில் இருந்து நாராயணசாமி வீட்டுக்கு சென்று உள்ளார்.  அப்போது மனைவி ராஜேஸ்வரி, மகன் ராஜ்குமாரும் வீட்டுக்கு சென்றனர்.
வீட்டில் தனியாக இருந்த நாராயணசாமியை மகனும் மனைவியும் கண்டித்து உள்ளனர். இதனை நாராயணசாமி கேட்பதாக தெரியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவியும் மகனும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து நாராயணசாமியை சரிமாரியாக வெட்டியும் குத்தியும் உள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே நாராயணசாமி உயிரிழந்து உள்ளார். 
பின்னர் இது குறித்து அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது உயிரிழந்த நாராயணசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மகனை கைது செய்தனர்.
கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவனை மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கடத்தி கொலை செய்ய திட்டமிடும் பெற்றோர்கள் !

Quick Share

கோவை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை காரில் கடத்தி கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை நகரில் மிக முக்கியமான சாலை அவினாசி சாலை. இந்த ரோட்டில் தான் விமான நிலையம் உள்ளது. மேலும் சென்னை, சேலம், திருப்பூர் செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் தான் பயணிக்கும். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே இயங்கி கொண்டிருக்கும்.

நேற்று இரவு அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் சிக்னலில் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.

இதுதவிர சிவப்பு சிக்னல் விழுந்ததால், அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன.

அப்போது சிக்னலில் நின்றிருந்த ஒரு காரில் இருந்து வாலிபரும், இளம்பெண்ணும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பியபடி காரை திறந்து வெளியே குதித்தனர்.

காரில் இருந்த மற்ற நபர்கள், அவர்களை வெளியே செல்ல விடாமல் தடுத்ததுடன் உள்ளே இழுக்க போராடினர்.

இதனை அங்கு சிக்னலில் நின்றிருந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து, காரின் அருகே சென்று, வாலிபரையும், இளம்பெண்ணையும் காரில் இருந்து இறக்கி விசாரித்தனர்.

அப்போது நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணம் பெற்றோருக்கு பிடிக்காததால், அவர்கள் எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். கைகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்துள்ளனர்.

எங்களை கொல்ல பார்க்கிறார்கள். நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என காதல் ஜோடியினர் தொடர்ந்து கூறிய படியே இருந்தனர்.

சிக்னல் விழுந்தும் வாகனங்கள் செல்லாததாலும், சாலையில் கூட்டமாக பயணிகள் நின்றதை பார்த்த அங்கு பணியில் இருந்த காவலர் சம்பவ இடத்திற்கு வந்தார்.

அவரை பார்த்த காதல் ஜோடியினர் அவரது காலில் விழுந்து தங்களை காப்பாற்றுமாறு கதறினர்.

உடனடியாக அவர் ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து காதல்ஜோடியிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள், மணியகாரம் பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்வர்(22), சரவணம்பட்டியை சேர்ந்த ஸ்நேகா(19) என்பதும் தெரியவந்தது.

போலீசாரிடம் ஸ்நேகா கண்ணீர் மல்க கூறியதாவது:- நாங்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். முதலில் எங்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியாமல் இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு எங்களது காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவந்தது. நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் இருவீட்டிலும் எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் நாங்கள் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தோம். அதன்படி வீட்டை விட்டு வெளியேறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம்.

எங்களது பெற்றோர் தேடுவதை அறிந்து, நேற்று காலை சரவணம்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தோம்.

போலீசாரும் எங்கள் 2 குடும்பத்தினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவீட்டாருமே காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் எங்களை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும், எனது தந்தை, எங்களிடம் நீங்கள் உறவினர் யாரும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டீர்கள். நம்முடைய சொந்த ஊரான தேனிக்கு சென்று, அங்குள்ள குலதெய்வ கோவிலில் வைத்து சாமி தரிசனம் செய்து விட்டு வரலாம் என அழைத்தார்.

நாங்களும் உண்மையிலேயே அவர் எங்களை சேர்த்து வைப்பதாக நினைத்து அவருடன் வீட்டிற்கு சென்றோம்.

இரவில் காரில் நான், எனது கணவர் மற்றும் எனது தந்தை ஆகியோர் காரில் புறப்பட்டோம். அப்போது எங்களுடன் மேலும் 4 பேர் இருந்தனர். அவர்கள் யார் என்று கேட்டதற்கு உறவினர்கள் என தந்தை கூறினார்.

இதையடுத்து நாங்கள் காரில் தேனியை நோக்கி பயணித்தோம். அப்போது என்னுடைய உறவினர்கள் என்று கூறியவர்களை நான் இதுவரை பார்த்ததில்லை என்று கணவரிடம் தெரிவித்தேன்.

எங்களை பிரிக்க தான் தேனிக்கு அழைத்து செல்கிறார்கள் என சந்தேகித்தோம். இதனால் அவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நினைத்தோம்.

கார் லட்சுமி மில் சிக்னலில் நிற்கவும் இதுதான் சமயம் என நினைத்து, காரில் இருந்து இறங்கி ஓடி தப்பிக்க முயன்றோம் என போலீசாரிடம் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடம் சரவணம்பட்டி என்பதால் ரேஸ்கோர்ஸ் போலீசார் காதல் ஜோடி பற்றி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் வந்து, காதல்ஜோடி மற்றும் அவர்களுடன் சென்றவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இளம்பெண் நான் பெற்றோருடன் செல்ல மாட்டேன். கணவருடன் தான் செல்வேன். எங்களை இவர்கள் பிரிக்க நினைக்கிறார்கள் என்றார். இதுதொடர்பாக போலீசார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.

தொடர்ந்து அவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய உதவி கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து காதல் ஜோடியினர் அவர்களது வக்கீல்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று காதல் ஜோடி மற்றும் பெற்றோரிடம் போலீசார் விசாரிக்கிறார்கள்.

முகப்பரு இருந்ததால் சேர்ந்து வாழ மறுத்து மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவர்!

Quick Share

முகப்பரு இருந்ததால் சேர்ந்து வாழ மறுத்து மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 32), சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும் கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அந்த பெண் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் அந்த பெண்ணின் முகத்தில் திடீரென்று முகப்பரு ஏற்பட்டு உள்ளது. எனவே பிச்சைமுத்து அவருடன் சேர்ந்து வாழ மறுத்ததாக தெரிகிறது.

இதற்கிடையே பிச்சைமுத்து தனது மனைவியை ஆபாசமாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து உள்ளார். இதையடுத்து கடந்த 25-ந் தேதி பிச்சைமுத்து தனது செல்போனில் உள்ள மனைவியின் ஆபாச படத்தை காட்டி அவரை அடித்து உதைத்ததுடன், வெளியே சொல்லக் கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.

இதற்கு பிச்சைமுத்துவின் தந்தை செல்லதுரை, தாயார் ஜெயலட்சுமி, சகோதரி மகேஸ்வரி, சகோதரர் முத்துக்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர். இது தவிர பிச்சை முத்து தனது மனைவியின் ஆபாச புகைப்படத்தை குடும்பத்தினர் சிலருக்கும் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

கணவர் தாக்கியதில் காயம் அடைந்த அந்த பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்ததும் அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக அவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தாக்குதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிச்சைமுத்துவை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக செல்ல துரை, ஜெயலட்சுமி, மகேஸ்வரி, முத்துக்குமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முகப்பரு இருந்ததால் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்து அவரின் ஆபாச படத்தை காட்டி மிரட்டிய கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

Quick Share

மதுரையை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா (வயது 35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். இவரும், அவரது நண்பரான மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்த்த சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா (45) என்பவரும் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்திய யூடியூப் சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக அந்த பெண்ணை தகாத முறையில் விமர்சித்தனர்.

இது தொடர்பாக அந்த பெண்ணும், அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்தனர். அதன்பேரில், ரவுடி பேபி மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மதுரை அருகே பதுங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா, நண்பர் சிக்கந்தர்ஷாவை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சிக்கந்தர்ஷாவை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இதேபோல் ரவுடி பேபி சூர்யாவையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய கலெக்டர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் தற்கொலை !

Quick Share

தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சோக  சம்பவம் நடந்துள்ளது.

கோயம்புத்தூரின் கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ், இவரது மனைவி சரண்யா, இவர்களுக்கு 15 வயதில் ஷ்யாம் என்ற மகன் இருந்தான்.

கடந்த டிசம்பர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட ஷ்யாம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் அழுது புலம்பியுள்ளனர் சத்யராஜ்- சரண்யா தம்பதியினர்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர், இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டியே இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு அளித்த தகவலின் பேரில், பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது

சம்பளம் கேட்ட காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பேர் !

Quick Share

கோவையில் சம்பளம் கேட்ட காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மதுரை தெற்கு மாசி வீதியை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 76). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை பிரிந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் ராமநாதபுரத்தில் இயங்கி வந்த எஸ்.எஸ். செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தார்.

அந்த நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக ரத்தினவேலுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் உரிமையாளர் திலிப்குமார், அதிகாரி ஜான் ஆகியோரை தொடர்பு கொண்டு சம்பளம் கொடுக்கும்படி கேட்டார். அதற்கு அவர்கள் நவஇந்தியா அருகே வருமாறு கூறினர். இதனையடுத்து ரத்தினவேலு அவர்கள் அழைத்த இடத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த நிறுவனத்தில் உரிமையாளர் திலிப்குமார், அதிகாரி ஜான் ஆகியோர் உங்களின் வங்கி கணக்கிற்கு சம்பளத்தை அனுப்பி விட்டோம் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு கூறினர். இதனால் மனவேதனை அடைந்த ரத்தினவேலு நிறுவனத்தில் உரிமையாளர் மற்றும் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து ரத்தினவேலுவை தாக்கினர். பின்னர் அவரை காரில் ஏற்றி கொடிசியாவுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து காவலாளி ரத்தினவேல் மீது திலிப்குமார் பெட்ரோலை ஊற்றினார். அதிகாரி ஜான் தீ பற்ற வைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். திலிப்குமார், ஜான் ஆகியோர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தீ காயத்துடன் உயிருக்கு போராடிய ரத்தினவேலுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ரத்தினவேலு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பளம் கேட்ட காவலாளியை எரித்துக் கொன்ற திலிப்குமார், ஜான் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

கார்- லாரி மோதிய விபத்தில் காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை உள்பட...

Quick Share

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் பிரசாத் (28). இவருக்கும் சுவாதி(24) என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் காதலர் தினத்தன்று திருமணம் நடைபெற்றது. 
இந்நிலையில், இன்று காலை ஷியாம் பிரசாத், அவரது மனைவி சுவாதி, தந்தை சவுடையன் (62) மற்றும் தாய் மஞ்சுளா(55) ஆகிய 4 பேரும் காரில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

சுந்தராபுரம் சிட்கோ பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் உருக்குலைந்து இடிபாடுகளுக்குள் 4 பேரும் சிக்கி கொண்டனர். 
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 4 பேரையும் மீட்டனர். விபத்தில் ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
ஆனால் செல்லும் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சவுடையன் மற்றும் அவரது மருமகள் சுவாதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம்

Quick Share

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறார். 
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) கோவைக்கு வருகை தரும் கமல்ஹாசன், மாலை 4 மணிக்கு கோவையில்காய்கடை பகுதி, புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் தெற்கு தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஓட்டு கேட்டார். வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு அடுத்தபடியாக ஓட்டுகளை பெற்றார். தற்போது கோவையில் அவர் பிரசாரத்திற்கு வருவது, கட்சியினர் இடையே சுறுசுறுப்பை ஏற்படுத்தி உள்ளது

அழுகிய நிலையில் கிடந்த கர்ப்பிணி பெண் !

Quick Share

இந்தியாவில் கர்ப்பிணி ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் செல்லும் பைபாஸ் சாலையோரம் இருக்கும் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதனால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸ் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் திருச்சி பகுதியில் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் அந்தப் பெண் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனையடுத்து பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் யாராவது கொலை செய்து பெண்ணின் சடலத்தை முட்புதரில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   




You cannot copy content of this Website