தஞ்சை

41 ஆண்டுகளுக்கு முன் தத்து கொடுக்கப்பட்ட மகனை சந்தித்த தாய் !! மொழி புரியாமல் பரிமாறிய ...

Quick Share

40 ஆண்டுகளுக்கு முன்னர் தத்து கொடுத்த பெற்றோரை தேடி அ லைந்த டென்மார்க் மகன் தற்போது தாயைக் கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்த நிகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி, தனலட்சுமி தம்பதிகளின் மகன்கள் டேனியல் ராஜன் மற்றும் டேவிட் சாந்த குமார்.

குடும்ப வருமையின் காரணமாக கடந்த 1979ம் ஆண்டு சென்னைக்கு குடியெர்ந்த தம்பதி பல்லாவரத்தில் உள்ள காப்பகத்தில் இரண்டு மகன்களையும் சேர்த்துள்ளனர்.இதனையடுத்து குறித்த இரண்டு பேரையும் டென்மார்க்கை சேர்ந்த தம்பதிகள் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். தனது மகனின் சிறுவயது புகைப்படத்தினை வைத்து கலியமூர்த்தி தம்பதிகள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் டேவிட் தனது தாயும், தானும் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தினை வைத்துக்கொண்டு இந்தியாவில் பல இடங்களில் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் தத்தெடுத்துச் சென்ற குடும்பத்தினர் டேவிட் சாந்த குமார் என்ற பெயரை டேவிட் கில்டென்டல் என்று மாற்றியதுடன் மகனை நன்றாக படிக்க வைத்து அவரை பங்கு சந்தை நிறுவனத்தில் வேலைக்கும் அமர்த்தியுள்ளனர்.

டேவிட் திருமணம் செய்து இரண்டு மகள்களுடன் டென்மார்க்கில் வசித்து வந்த நிலையில், சென்னையில் தனது நண்பர் ஒருவரை காண்பதற்கு வந்துள்ளார். வந்த இடத்தில் தனது உருவஅமைப்பு தமிழர்கள் போல் இருப்பதை உணர்ந்த டேவிட் தனது வளர்ப்பு பெற்றோரிடம் விசாரித்த பின்பு உண்மை தெரியவே, இந்தியாவிற்கு வந்துள்ளார்.

இந்தியா வந்த பின்பே தனது அண்ணனும் டென்மார்கில் தான் தத்துகொடுக்கப்பட்டுள்ளார் என்பதையும் அறிந்த டேவிட் இரண்டு பேரை தேடி அ லைந்ததுடன் கையில் இருந்த புகைப்படத்தினையும் வெளியிட்டிருந்தார்.
தனது அண்ணனைக் கண்டுபிடித்த நிலையில் தற்போது தனது தாயினைக் கண்டுபிடித்த டேவிட், பாசத்தில் க ண்ணீர் மல்க கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டுள்ளது காண்பவர்களின் கண்களை குளமாக்கியுள்ளது. மொழி புரியாமல் தாயும், மகனும் பேசிய உணர்ச்சிப்பூர்வமான காட்சியினை அக்கம்பக்கத்தினர் கண்டு கண் கலங்கியுள்ளனர்.

7 பேர் வாழ்வில் ஒளியேற்றிய தஞ்சைப் பேராசிரியை உடலுறுப்பு.

Quick Share

தஞ்சாவூரில், சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியை கனிமொழி என்பவரின் உடல் உறுப்புகள், 7 பேருக்கு தானம் செய்யப்பட்ட நிலையில் கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. `சின்ன வயசிலிருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர், இன்று தன் உடல் உறுப்புகளையும் தானமாகக் கொடுத்துவிட்டு, எங்களை விட்டுச் சென்றுவிட்டார்’ என்று கண்ணீர் வடித்தார், கனிமொழியின் அண்ணன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தைச் சேர்ந்தவர், இளங்கோ. இவர், அரசுப் பேருந்தில் நடத்துநராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் கனிமொழிக்கு 25 வயது ஆகிறது. இவர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி, தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரே உள்ள தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கார் மோதி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக கனிமொழியை மீட்டு, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி கனிமொழி மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதிசெய்து, அவரின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கனிமொழியின் உடல் உறுப்புகளைத் தானமளிக்க, அவரது பெற்றோர்கள் முன்வந்தனர்.ஒரு சிறுநீரகம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள், தஞ்சை அரசு பொதுமருத்துவமனைக்கும் என மொத்தம் 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்குக் கொண்டுசென்று, அங்கிருந்து விமானத்தில் மதுரை மற்றும் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இது குறித்து கனிமொழியின் அண்ணன் சதீஷ்குமாரிடம் பேசினோம். “கனிமொழி எங்க வீட்டு இளவரசி. அவள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முதல் பெண் தொல்பொருள் ஆய்வு நிறைஞர். யாரையும் ஏமாற்றவோ, எதையும் லஞ்சம் கொடுத்து சாதிக்கவோ பிடிக்காது. லஞ்சம் என்ற வார்த்தையைக்கூட அவள் உச்சரித்தது கிடையாது. படித்த இடங்களிலும் சரி, வேலை பார்த்த இடங்களிலும் சரி, எல்லோருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வந்தார்.

எங்களுக்கு மட்டுமல்ல எங்க ஊருக்கே பெருமை தேடித் தந்தவர். சின்ன வயசிலேயே தொல்பொருள் அறிஞராக வர வேண்டும் என நினைத்தார். அதன்படி, தான் நினைத்ததைத் தன் கடின உழைப்பால் சாதித்தார். இன்னும் சாதிக்கவேண்டிய பொண்ணு. அதற்குள் இந்த விபத்து, அவர் கனவில் மட்டுமல்ல எங்கள் எல்லோர் மனத்திலும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. வாழ்கையில் பெரும் உயரத்திற்குச் செல்லக்கூடியவளை, இவ்வளவு சீக்கிரமே இறைவன் அழைத்துக்கொண்டு, எங்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளான். இதை எப்படி நாங்க தாங்கப் போகிறோம் எனத் தெரியவில்லை.சிறு வயசிலிருந்தே எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருந்தவள், தன் உடல் உறுப்புகளைப் பலருக்குத் தானமாகக் கொடுத்து, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிருக்கிறாள். அன்பால் எங்களைக் கட்டிப்போட்டவள், இளவரசியாக வீட்டில் துள்ளிக் குதித்தவள், இன்று எங்களுடன் இல்லை. இது ஒரு கனவாக இருக்கக் கூடாதா என மனது கிடந்து தவிக்கிறது” என்று கண்ணீர் வடித்தார்.

அலைமோதும் கூட்டம்….23 ஆண்டுகள் பின்னர் கோலாகலமாக நடைபெறும் தஞ்சை பெரிய கோவில் குட...

Quick Share

உலக பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வயது 1010 இந்த கோவிலின் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பின் இன்று புதன்கிழமை “05-02-2020” நடைபெறுவதால் தஞ்சை நகரம் முழுக்க மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தஞ்சாவூர் செல்வதற்காக பல்வேறு ஊர்களிலிருந்தும் 250க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. 5000க்கும் அதிகமான காவலர்கள், ஊர் காவல் படையினர், ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர், ஸ்கேனர் ஆகியவற்றின் மூலம் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

காலை 9.30 மணிக்கு விமானத்தில் உள்ள கலசத்தில் புண்ணிய நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. கங்கா, யமுனா, காவிரி ஆகிய நதிகளின் நீரைக் கொண்டுவந்து அபிஷேகம் செய்யப்பட்டது. கலசத்தில் ஊற்றப்படும் நீர் தங்கள் மேல் விழ வேண்டும் என்பதற்காக மக்கள் முண்டியடித்து வருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க புனித சொட்டு நீர் மூலம் அனைவரின் மீதும் விழுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாக கால பூஜைகள் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நேற்று ஆறாம், ஏழாம் யாக கால பூஜைகள் நடைபெறுகின்றன. இன்று காலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பக்தர்கள் குவியத் தொடங்கிவிட்டதால் நகரில் பெரும்பாலான விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டு நிரப்பிவிட்டன. கூட்ட நெரிசல் காரணமாக தஞ்சாவூர் நகருக்குள் பேருந்துகள் செல்ல அனுமதியில்லை அதற்கு பதிலாக நகருக்கு வெளியே தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.




You cannot copy content of this Website