தமிழகம்

நீண்டநேர உடற்பயிற்சி: குளிக்கும்போது மூக்கில் ரத்தம் வழிந்து இறந்த நபர்

Quick Share

தமிழக மாவட்டம் சேலத்தில் உடற்பயிற்சிகூட உரிமையாளர், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீண்ட நேரம் உடற்பயிற்சி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உடற்பயிற்சிகூடம் வைத்து நடத்தி வந்தவர் மகாதீர் முகமது. 35 வயதான இவர் தினமும் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த மகாதீர், பின்னர் நீராவி குளியல் எடுத்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகாதீர் வெளியே வராததால், அவரது ஓட்டுநர் குளியல் அறையின் கதவை தட்டியுள்ளார். 

மயங்கி விழுந்து மரணம் 

பதில் ஏதும் வராததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மகாதீர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மகாதீர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மகாதீரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.     

ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவு: உடல் நசுங்கி உயிரிழந்த ஊழியர்!

Quick Share

பீகார் மாநிலத்தில் பரவுனி என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் லக்னோ-பரவுனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்கை (COUPLING) பிரிக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரயில் ஒட்டுநர் ரயில் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்குப் பதிலாகப் பின்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ரயில் பெட்டிக்கும், ரயில் எஞ்சினுக்கும் இடையே எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் சிக்கிக் கொண்டார். இதில் அமர் குமார் ராவ் உடல் நசுங்கிப் பலியானார். இதனைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலிலிருந்து உடனடியாக இறங்கி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமர் குமார் ராவ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. பீகாரில் இரு ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கி ரயில்வே ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் உயிருடன் எழுந்த பெண்!

Quick Share

இந்திய மாநிலம் கர்நாடகாவில் யோகா ஆசிரியை ஒருவர், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின்னர் மூச்சுப் பயிற்சி மூலம் உயிருடன் எழுந்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு, யோகா ஆசிரியை அர்ச்சனா என்பவரை காரில் கும்பல் ஒன்று அழைத்துச் சென்றுள்ளது. அங்கு அவரை கடுமையாக தாக்கிய அந்த கும்பல் குழி தோண்டி, சேறு மற்றும் கிளைகளால் மூடி அர்ச்சனாவை புதைத்துவிட்டு, அவரது பொருட்களை திருடி தப்பிச்சென்றுவிட்டது.

அதன் பின்னர் மூச்சு பயிற்சியினால் தாக்குப்பிடித்த அர்ச்சனா, குழியில் இருந்து வெளியேறி கிராம மக்களின் உதவியுடன் தப்பியுள்ளார்.

பின்னர் அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிந்து (34) என்ற பெண்தான் இதற்கு காரணம் என தெரிய வந்தது. தனது கணவருக்கும் அர்ச்சனாவுக்கும் உறவு இருக்குமோ என பிந்து சந்தேகமடைந்துள்ளார். 

இதனால் சதீஷ் என்ற துப்பறியும் நபரின் உதவியை அவர் நாடியுள்ளார். அவர் அர்ச்சனாவிடம் யோகா பயிற்சி கற்றுக்கொள்ள சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரின் நம்பிக்கையை பெற்ற சதீஷ், கடந்த அக்டோபர் 23ஆம் திகதி அர்ச்சனாவை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் சதீஷின் நண்பர்கள் சிலர் காரில் ஏறியுள்ளனர். 

காட்டுப்பகுதியில் அர்ச்சனாவை அவர்கள் தாக்கியபோது, மூச்சுப்பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற அவர் இறந்துபோல் நடித்துள்ளார். அதனால் அவர்கள் புதைத்துவிட்டு சென்றதும் அர்ச்சனா அங்கிருந்து தப்பித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் பிந்து, சதீஷ் உட்பட ஐந்து பேரை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் இருந்தது பணம் மற்றும் நகைகளை மீட்டனர்.

ஆங்கிலப்படமான ‘கில் பில்’யில் கதாநாயகியை உயிருடன் மண்ணில் புதைத்துவிடுவார்கள். அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தப்பிப்பார். அதேபோல் யோகா ஆசிரியையும் தப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் எச்சரிக்கை!

Quick Share

தமிழகத்திற்கு இன்று மற்றும் 7, 8, 9 ஆகிய திகதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதைப்போல நாளை, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ 7ஆம் திகதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

விஜயை மறைமுகமாக தாக்கி பேசும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Quick Share

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்தவகையில் நேற்று விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர், மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகள் வழங்கினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், “ஒடுக்கப்பட்டோரின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம்.

தமிழக மக்களின் மொத்த கோரிக்கைக்கும் மத்திய அரசு பணிந்து போகும். பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளோம்.

மேலும், புதியதாக கட்சி தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம்!

Quick Share

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

மேலும் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டு இளைஞரை கரம்பிடித்த பிரான்ஸ் பெண்! பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்

Quick Share

பிரான்ஸைச் சேர்ந்த இளம்பெண் மரியம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கரம்பிடித்தார். 

கிறித்துவ முறைப்படி பிரான்சில் திருமணம்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது உயர் படிப்பிற்காக பிரான்சிற்கு சென்றுள்ளார். 

அங்கு மரியம் என்ற இளம்பெண்ணை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகி பின் காதலில் விழுந்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, மரியத்தின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கிறித்துவ முறைப்படி, இருவரும் கடந்த மே மாதம் பிரான்சில் திருமணம் செய்துகொண்டனர்.  

தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம்

இந்நிலையில் காதல் ஜோடி இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டியில் இவர்களின் திருமணம் தமிழர் பாரம்பரிய முறைப்படி மீண்டும் நடந்தது.

கலைராஜன்-மரியம் இருவரின் குடும்பத்தினரும் ஒன்றாக மணமக்களை வாழ்த்தினர். திருமணம் குறித்து மரியம் கூறுகையில்,

“கலைராஜனும், நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இந்தியாவிற்கு வந்து தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் குடும்பத்தில் நானும் ஒருவர் என்பது மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.    

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடிற்கு சென்ற தொண்டர்கள் விபத்தில் சிக்கி பலி…

Quick Share

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு இன்று விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு தொண்டர்கள் விபத்தில் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில், இன்று கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்ததால் மாநாட்டு திடல் பரபரப்பாக உள்ளதோடு, இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் மணல் லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, மணல் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியதால், தடுமாறி விழுந்த இளைஞர்கள் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாநாட்டுக்கு வரவிருக்கும் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது என விஜய் அறிவுறுத்தியிருந்த போதிலும், அதைக் மதிக்காமல் வந்ததால் இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது

இதற்கெல்லாம் ஆதார் அட்டை செல்லாது: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!

Quick Share

தற்போதைய காலத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான சேவைகளுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஆதார் அட்டை தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதாவது, ஆதார் அட்டையானது வயதை நிரூபிக்க சரியான ஆவணம் அல்ல என்று கூறியுள்ளது.

பொதுவாகவே நாம் முகவரிச் சான்று மற்றும் வயதுச் சான்றுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், 2015-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் இழப்பீடு வழங்கிய விவகாரத்தில் அவரது உறவினர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், “உயிரிழந்தவருக்கு ரூ.19.35 லட்சம் MACT இழப்பீடாக வழங்கியது. ஆனால் பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம், MACT அவருடைய வயதை தவறாக கணக்கிட்டுள்ளதாகக் கூறி, அந்த இழப்பீட்டு தொகையை ரூ. 9.22 லட்சமாக குறைத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், “ஒருவருடைய வயதை ஆதார் அட்டையின் அடிப்படையில் கணக்கீடு செய்ய கூடாது எனவும், அவரின் பள்ளி சான்றிதழை வைத்து தான் கணக்கீடு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளது.

இறந்தவரின் ஆதார் அட்டையை நம்பி அவரது வயது 47 என உயர் நீதிமன்றம் மதிப்பிட்டுள்ளது. இதனால், ஆதார் அட்டையின் அடிப்படையில் இறந்தவரின் வயதை நிர்ணயம் செய்வதில் உயர்நீதிமன்றம் தவறு செய்துவிட்டதாக குடும்பத்தினர் வாதிட்டனர்.

ஏனெனில் அவரது பள்ளி விடுப்புச் சான்றிதழின்படி அவரது வயதைக் கணக்கிட்டால், இறக்கும் போது அவரது வயது 45 ஆக இருந்துள்ளது.

உருவான புதிய காற்றழுத்த பகுதி: இந்திய வானிலை மையம் விடுத்த அடுத்த எச்சரிக்கை!

Quick Share

வடகிழக்கு பருவமழை தொடங்கிய அதே சமயத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் தென்கிழக்கு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாகவும், முதல் நாளிலியே அது தீவிரமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய அதே சமயத்தில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் நிலவி வருகிறது.

இது, தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 24 மணிநேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்கிறது.

பின் வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர கடற்கரை பகுதி, ராயலசீமா, மற்றும் கேரளாவில் அதிகனமழை வரை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

‘மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு…’ – வெளியான முக்கிய அறிவிப்பு!

Quick Share

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக நாளை (15.10.2024) முதல் 3 நாட்களுக்கு ( 17.10.2024 வரை) கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கனமழை நேரத்தில் சென்னை மக்களுக்குத் தடையற்ற போக்குவரத்தை அளிக்கும் வகையில் கூடுதலாக மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதாவது முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்குப் புறப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாகச் செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் மேற்கண்ட நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பச்சை வழித்தடத்தில் இருந்து விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோவில் மாறி விமான நிலையம் மெட்ரோவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இருப்பினும், மேற்கூறிய அட்டவணைகள் அனைத்தும் வானிலை அறிவிப்பைப் பொறுத்து வழக்கமான சேவைக்கு மாற்றியமைக்கப்படும். முந்தைய அனுபவத்தின்படி, கனமழை காரணமாகத் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்களில் (குறிப்பாக பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ) பயணிகள் தங்கள் வாகனங்களை 15.10.2024 முதல் 17.10.2024 வரை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவைப்பட்டால் வானிலை அறிவிப்பைப் பொறுத்து தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். எனவே மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!

Quick Share

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதோடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டது.

அதே சமயம் தமிழகத்தின் கோவை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கோவையில் உள்ள சுரங்கப் பாதைகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து சுரங்கப் பாதைகளில் மோட்டார்கள் வைத்து தண்ணீர் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்டம் ரத்தினபுரி என்ற இடத்தில் ரயில்வே சுரங்கப் பாதை ஒன்று உள்ளது. அங்கு மழை நீர் தேங்கி இருந்த நிலையில் அப்போது அந்த வழியாக 20 பயணிகளுடன் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அரசு பேருந்து ஒன்று வழியாக வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கப்பாதையில் உள்ள வெள்ளத்தில் பேருந்து சிக்கிக் கொண்டது இதனையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்பு படையினர் உடனடியாக பேருந்தில் இருந்து பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். முன்னதாக நேற்று இந்த சுரங்கப்பாதையில் தனியார் பேருந்து சிக்கியது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website