தமிழகம்

இன்று மாலைதான் ஃபெங்கல் புயல் கரையை கடக்கும்… நேரம் மாறுகிறது.., வானிலை ஆய்வு மைய...

Quick Share

ஃபெங்கல் புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று கூறிய நிலையில் கரையை கடக்கும் நேரம் மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

வானிலை ஆய்வு மையம் 

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தீவிர புயலாக மாறியது. இது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 140 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

ஃபெங்கல் புயல் மணிக்கு 7 கி.மீ நகர்ந்த நிலையில் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், ஃபெங்கல் புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தற்போது இன்று மாலை கரையைக் கடக்கலாம் என்று கணித்துள்ளது. 

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல, டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன    

இன்று பொதுப்போக்குவரத்து நிறுத்தம்: ‘ஃபெங்கல்’ புயல் எதிரொலி!

Quick Share

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு ‘ஃபெங்கல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரைச் சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயல் இன்று (30.11.2024) பிற்பகல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த புயல் காற்றழுத்த தாழ்வாக கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கணிப்புகள் பொய்யாகும் நிலையில் புயல் சின்னம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உருவாகியுள்ள ‘ஃபெங்கல்’ புயலானது புயலாகவே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை சென்னை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சி பூங்காக்கள், கடற்கரைகள் அனைத்தும் நாளை மூடப்பட இருக்கிறது. அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு அறிவுரை வழங்கியுள்ளது. பொது இடங்களுக்கு அத்தியாவசிய தேவை இல்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசிஆர், ஓஎம்ஆர் சாலையில் நாளை புயல் கடக்கும் நேரத்தில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்பொழுது (29/11/2024) இரவு 8 மணி நிலவரம் படி சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. புயலின் வேகமானது 13 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து அதிகரித்து 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகரும் பெங்கல் புயல்.., 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏ...

Quick Share

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெங்கல் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான பெங்கல் புயல் சென்னைக்கு அருகில் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

நாகையிலிருந்து தென்கிழக்கே 260 கி.மீ, புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 270 கி.மீ, தொலைவில் ஃபெங்கல் புயல் மையம் கொண்டுள்ளது.

இதனால், புயல் உருவாகியதன் எதிரொலியால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதன்படி, பாம்பன், தூத்துக்குடியில் திடீர் காற்று மற்றும் மழை உருவாவதை எச்சரிக்கும் விதமாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பதை எச்சரிக்கும் விதமாக 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில், துறைமுகத்தின் வலதுபக்கமாக புயல் கரையை கடக்கும் என்பைத தெரிவிக்கும் விதமாக 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில், துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கும் விதமாக 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.       

3 -வது கணவருடன் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ள அன்னபூரணி அரசு அம்மா

Quick Share

தன்னை அம்மன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய அன்னபூரணி அரசு அம்மாவிற்கு மூன்றாவது திருமணம் நேற்று (நவம்பர் 28) நடைபெற்று முடிந்துள்ளது.

3 -வது திருமணம் 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர், தன்னை ஆதிபரா சக்தி என்று கூறி மக்களுக்கு ஆசி வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பில் ஆசிரமம் நடத்தி மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். இவருக்கு, முதல் திருமணம் நடந்து பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, கணவர் மற்றும் குழந்தையை விட்டுவிட்டு அவர் பிரிந்தார். பின்னர், அரசு என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

அரசு என்பவர் இறந்த பிறகு ‘அன்னபூரணி அரசு அம்மன்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக, “நானும் அரசுவும் திருமணம் செய்து கொண்ட நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று அறிவித்தார்.அதன்படி நேற்று நவம்பர் 28 -ம் திகதி அன்று, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் ரோகித்தை திருமணம் செய்து கொண்டார்.இந்த திருமணம், தெய்வீக திருமணம் என அறிவிக்கப்பட்டு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், வருங்காலத்தில் இருவரும் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.    

மக்களே உஷார்!! ஃபெஞ்சல் புயல் ஆட்டம் எப்படி இருக்கும்? ரெட் அலர்ட் வந்தாச்சு.. வேகம் பட...

Quick Share

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இது சென்னையில் இருந்து தென்கிழக்கில் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. புதுவையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கில் 270 கிலோமீட்டர் தூரத்திலும், நாகையில் இருந்து கிழக்கில் 260 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை பிற்பகல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கவுள்ளது.

அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும். கனமழை கொட்டி தீர்க்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 6ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று இரவு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. எஞ்சிய வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், மேற்கு மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் (நவம்பர் 30) விடப்பட்டுள்ள எச்சரிக்கையில்,

தற்போது ஃபெஞ்சல் புயலின் வேகம் 10 கிலோமீட்டரில் இருந்து 13 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருந்த இடையூறுகள் நீங்கியிருப்பதால் அடுத்து வரக்கூடிய நேரங்களில் புயலின் வேகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே புயலின் பேண்ட்ஸ் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மீது விழத் தொடங்கிவிட்டன.

இதனால் மழைப்பொழிவு இருக்கும். நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரிக்கும். அதேசமயம் புயலின் கண் பகுதி எப்போது கரையை தொடுகிறதோ, அப்போது தான் கரையை கடக்க தொடங்கி விட்டதாக அர்த்தம் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசின் லோகோ.. ரேஸ்க்கு தயாராகும் அஜித்.. குவியும் தமிழக ரசிகர்களின் வாழ்த்து!!!

Quick Share

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ உடன் நடிகர் அஜித் கார் ரேஸுக்கு தயாராகும் கார் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் அஜித் தற்போது “விடாமுயற்சி” மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. வரும் பொங்கல் தினத்தில் ’குட் பேட் அக்லி’ திரைப்படமும், அதனை அடுத்து சில மாதங்களில் ’விடாமுயற்சி’ படமும் வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐரோப்பியாவில் நடைபெறும் கார் ரேஸில் அஜித் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அவர் போர்ஷே 911 GT3 RS என்ற காரை தயார் நிலையில் வைத்துள்ளார்.

அந்தக் காரில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவும் உள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அஜித் பெயரில் ஒரு அணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணி அஜித் தலைமையில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் நாளை மறுநாள் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

Quick Share

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (30 ஆம் திகதி) ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.., நேற்று (27.11.2024) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28.11.2024) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது இலங்கை – திரிகோணமலையிலிருந்து கிழக்கு – வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில், காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே 30ஆம் திகதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.

அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 28ஆம் திகதி மாலை முதல் 29ஆம் திகதி காலை வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் பொழுது புயலாக வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது. 

அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (29.11.2024) ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவ30 ஆம் திகதி) அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் நாளை மறுநாள் (நவ.30) அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே இந்த 8 மாவட்டங்களுக்கு அன்றைய தினம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை: சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை!

Quick Share

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அடுத்து வரும் 4 நாட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (29.11.2024) டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர் தஞ்சாவூர், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30 ஆம் தேதி (30.11.2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், வேலூர். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி (01.12.2024) நீலகிரி கோவை ஈரோடு திருப்பூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பயணிகளுக்கு அறிவுறுத்தல்கள் கொடுப்பதற்காக சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் வானிலை அறிக்கைகளின் அடிப்படையில் விமான சேவைகளை இயக்குவது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் நேரத்தில் சிறிய ரக விமானங்கள் வானில் பறப்பது பாதுகாப்பானது இல்லை எனவே சிறிய ரக விமானங்களை இயக்குவது குறித்து தீவிரமாக விமான நிலைய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி, சேலம், திருச்சி, மதுரை, யாழ்ப்பாணத்திற்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் சிறிய விமானங்களை இயக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.

வங்கக்கடலில் நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல்!

Quick Share

வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (25-11-2024) காலை 08.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த புயல் சென்னை அருகே கரையைக்கடக்ககூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதிகபட்ச மழையை பதிவு செய்த மாவட்டம்: வெளியான தொடர் அறிவிப்பு!

Quick Share

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்பதால், சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே நாளை ஒருநாள் புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலூர், மயிலாடுதுறையில் (27/11/2024) கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாகை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? – வெளியான அறிவிப்பு

Quick Share

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்பதால், சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு (27/11/2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, கஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

Quick Share

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (நவ.26) வலுப்பெறும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.26) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யலாம். 




You cannot copy content of this Website