தமிழகம்

கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Quick Share

அரியலூர் மாவட்டம் குனமங்கலத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 84 மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று (09.09.2024) பள்ளிக்கு அருகில் உள்ள கள்ளிச்செடியில் இருந்த கள்ளிப்பாலைச் சுவைத்துள்ளார்.

இதனையடுத்து இந்த மாணவர் இன்று (10.09.2024) மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை மதிய உணவு இடைவெளியின் போது கள்ளிப் பாலை சுவைக்கச் சொல்லியுள்ளார். அதன்படி மூன்றாம் வகுப்பு மாணவர்களும் கள்ளிப்பாலைச் சுவைத்துள்ளனர். மேலும் கள்ளிப்பாலை விளையாட்டாகச் சாப்பிட்டதாக, ஆசிரியரிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த ஆசிரியர்கள் கள்ளிப்பால் சாப்பிட்ட 5மாணவர்களையும் குணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை!

Quick Share

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

இதனால், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுயுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, நாமக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் உருவாகும் புயல் சின்னம் – வானிலை மையம் தகவல்!

Quick Share

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ளது.

ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திலிருந்து கிழக்கே சுமார் 310km தொலைவிலும், 260km கிழக்கு-தென்கிழக்கே ஒடிசா கோபால்பூர், பாரதீப்க்கு தென்-தென்கிழக்கே 290km மற்றும் மேற்கு வங்கம் திகாவிலிருந்து 410km தெற்கே காற்றழுத்த தாழ்வு மையம் உள்ளது.

இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

அதன்பிறகு வடக்கு- ஒடிசா-கங்கை மேற்கு வங்காளம் வழியாக மேற்கு- வடமேற்கு நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பெண்ணின் வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு.., கருக்கலைப்பு மாத்திரையால் விபரீதம்

Quick Share

கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்திய இளம்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

பெண்ணின் வயிற்றுக்குள் எலும்புக்கூடு

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயதான இளம்பெண்.

இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.

ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத அப்பெண் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் இளம்பெண்ணுக்கு பாதி அளவு கரு கலைந்தது. 

இதனால் கடந்த மூன்று வருடங்களாக அந்த இளம்பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடை அகற்றியுள்ளனர்.

தற்போது இளம் பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.          

பாரா ஒலிம்பிக்கில் கலக்கிய தமிழக வீராங்கனைகள்!

Quick Share

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனையிடம் 21க்கு17, 21க்கு10 என்ற செட் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் டென்மார்க் வீராங்கனையை 21க்கு 12, 21க்கு8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதன் மூலம் பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாராலிம்பிக்ஸில் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றதில் பெருமையின் ஒரு தருணம் ஆகும். அவரது வெற்றி பல இளைஞர்களை ஊக்குவிக்கும். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அவருக்கு வாழ்த்துக்கள். அதே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸின் முயற்சி சிறப்பானது ஆகும். அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இந்த நம்பமுடியாத சாதனைக்கு வழிவகுத்தது. அவருக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாரா ஒலிம்பிக்ஸில் குறிப்பிடத்தக்க வகையில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள். உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களைப் பற்றி நம்பமுடியாத அளவிற்குப் பெருமைப்படுகிறோம். வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸுக்கு வாழ்த்துகள். உங்கள் மன உறுதி தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. ஜொலித்துக் கொண்டே இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாகத் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் பாரா பேட்மிட்ட்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கும் தங்கைகள் இருவருக்கும் நம் பாராட்டுகள்.

தமிழ்நாடு அரசின் எலைட் திட்டம் மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பயன்பெற்று வரும் இவ்விரு வீராங்கனையருக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான போதே தலா ரூ.7 லட்சத்தைச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தினோம். இன்றைக்குப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ள அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். நம் வீராங்கனையரின் சாதனைப் பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

குவியும் பாராட்டு.. இரவில் படிப்பு, பகலில் சமோசா விற்பனை: நீட் தேர்வில் சாதனை படைத்த ம...

Quick Share

தினமும் 5 மணி நேரம் சமோசா விற்று வேலை செய்து கொண்டே மாணவர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவை சேர்ந்த மாணவர் சன்னிகுமார்(18). இவர் 12 -ம் வகுப்பு படித்து வந்து பகுதி நேரமாக சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார். இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்ததால் நீட் தேர்வுக்கும் படித்து வந்தார். அதன்படி கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினார்.

தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இரவு முழுவதும் படித்து விட்டு காலையில் சமோசா விற்பனை செய்து இந்த சாதனையை எட்டியுள்ளார்.

குறிப்புகளை காகிதங்களில் எழுதி வைத்து அதனை சுவரில் ஓட்டிவைத்து படித்து வந்தார். இதுகுறித்து மாணவர் சன்னிகுமார் கூறுகையில், “மருந்துகளை பார்க்கும் போது எனக்கு எம்பிபிஎஸ் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. மக்களை நோய்களில் இருந்து காப்பேன்.

எனது படிப்பை சமோசா தொழில் பாதிக்காது. அதனை நான் தொடர்ந்து செய்வேன்” என்றார்.

இதனிடையே, ‘பிஸிக்ஸ்வாலா’ என்ற நீட் தேர்வு பயிற்சி மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலேக் பாண்டே என்பவர் சன்னிகுமாருக்கு மருத்துவக் கல்லூரி கட்டணமாக ரூ.6 லட்சம் நிதியை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அலேக் பாண்டே, “பிஸிக்ஸ்வாலா நடத்தும் நீட் தேர்வு பயிற்சியை டெலிகிராம் ஆப் மூலம் சன்னிக்குமார் படித்துள்ளார். அவருக்கு எங்களது ஆதரவு உண்டு” என்று கூறியுள்ளார்.

பெற்றோர்களே எச்சரிக்கை.. நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி!

Quick Share

திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடிமெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (01-09-240 இரவு சிறுமி வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவர் கண் விழிக்காததால் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் விழிக்காததால் பதற்றம் அடைந்தனர். பின்னர் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜான் ஜுடிமெயில் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறுதி சடங்கு செய்வதற்குரிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி இறப்பில் சந்தேகம் உள்ளது என அரியமங்கலம் போலீசாருக்கு மர்ம நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற பொழுது, ஜான் ஜுடிமெயில் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் செய்வதறியாது விழித்த அரியமங்கலம் போலீசார் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சட்டரீதியாக பிரேதத்தை கைப்பற்ற முடிவு எடுத்தனர். பின்னர், அவர்களது உறவினர்களிடம் சுமுகமாக பேசி, ‘எங்களுக்கு புகார் வந்துள்ளது, அதன் அடிப்படையில் நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும். இன்று மாலை 5 மணிக்குள் மருத்துவமனையில் கொண்டு சென்றால்தான் சிறுமியின் உடலை உங்களுக்கு பிரேத பறிசோதனை செய்து கொடுக்க முடியும்’ எனக் கூறி அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இது குறித்து அவரது உறவினர்கள் நம்மிடம் தெரிவிக்கையில், ‘சிறுமிக்கு நூடுல்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டதால் அடிக்கடி நூடுல்ஸ் வாங்கி தானே சமைத்து சாப்பிடுவார். அந்த வகையில் தான் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் போட்டு வாங்கி நேற்று இரவு சமைத்து சாப்பிட்ட பிறகு குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தினார். அதன் பின்னர் அவர் படுக்கைக்கு சென்று விட்டார். விடிந்து பார்த்தபோதுதான் அவர் பிரேதமாக இருந்ததை அறிய முடிந்தது. 

பின்னர், எங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது தான் போலீசார் எங்களது பெண்ணின் உடலை பறித்து சென்றனர்’ என்றனர். இதுகுறித்து அப்பகுதியில் சிலர் தெரிவிக்கையில், ‘சிறுமியை நேற்று இரவு பார்க்கும்போது நல்ல நிலையில் திடகாத்திரமாக இருந்தார். காலையில் அவர் இறந்து விட்டார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறுமி குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதனால் இவர் உயிரிழந்திருக்கலாம்’ என அச்சம் எங்களுக்கு என தெரிவித்தனர்.

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Quick Share

வடக்கு வங்கக்கடலில் நேற்று புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரக்கூடும். இதையடுத்து, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி திருப்பத்தூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை!

Quick Share

கிழக்கிந்திய வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்திற்கு அதிக மழையை எதிர்பார்க்க முடியாது, லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து லேசான மழை பெய்தது. மேலும், மேக மூட்டத்துடன் மழை தூறல் இருக்கிறது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, “சென்னையில் மேக மூட்டத்துடன் லேசான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தில் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Quick Share

முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று (27.08.2024) இரவு 9 மணியளவில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இதற்காகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்குக் கிளம்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழியெங்கிலும் திமுக தொண்டர்கள் நின்று வழியனுப்பி வைத்தனர். அதே போன்று முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் சிறக்க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் எனப் பலரும் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். அமெரிக்கா செல்லும் முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “அரசுப் பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு, வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி திரும்பி வருகிற மாதிரி பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க இது போன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். 

ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்திருக்கிறது. இந்தப் பயணங்கள் மூலமாக 18 ஆயிரத்து 521 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 10 ஆயிரத்து 882 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இந்த அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க வாழ் தமிழர்களைச் சந்திக்க இருக்கிறேன். எல்லோருடைய வாழ்த்துகளோடும் இந்தப் பயணம் நிச்சயமாக வெற்றிகரமானதாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அடுத்த மாதம் திருமணம்: உயிரைவிட்ட இளம்பெண் – தெரிய வந்த காரணம்!

Quick Share

தமிழக மாவட்டம் சேலத்தில் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் சூரங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது இரண்டாவது மகள் கார்த்திகாவுக்கு திருமண நிச்சயம் நடந்துள்ளது. ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதால், தங்கவேல் திருமண அழைப்பிதழை அச்சடித்து கடந்த ஒரு வாரமாக உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தங்கவேல் தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்க சென்ற இருவரும், இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். 

வீட்டிற்குள் சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மகள் கார்த்திகா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார். 

இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கார்த்திகா திருமணம் பிடிக்காததால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்!

Quick Share

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள நடுக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ஜெயப்பிரியா. கர்ப்பிணிப் பெண்ணான இவர் கடந்த கடந்த 21ஆம் தேதி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்தக் கசிவு இருந்ததாகவும், அடுத்த நாள் ரத்தக் கசிவு அதிகமாக இருந்ததனால் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் ஜெயப்பிரியாவிற்கு இரத்தபோக்கு அதிகம் இருந்த காரணத்தினாலும், சிறுநீர் வெளியேறுவதிலும் காணப்பட்ட பிரச்சனை காரணமாக அவரது அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து நான்கு நாட்களாகச் சிகிச்சையில் இருந்து வந்தார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் போது செவிலியர்கள், மருத்துவர்கள் மருத்துவர்கள் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி குமுளி – மதுரை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.




You cannot copy content of this Website