தமிழகம்

கூகுளில் இவற்றை தேடினால் கட்டாயம் ஜெயில் தான்

Quick Share

இந்தியாவில் உள்ள ஐடி விதிமுறைகள் மற்றும் அரசாங்க வழிகாட்டுதல்களின்படி, கூகுளில் சிறுவர்களின் ஆபாச வீடியோ அல்லது புகைப்படம் குறித்து தேடுவது குற்றமாகும். இப்படி கூகுளில் தேடினால் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். மேலும் வெடிகுண்டு தயாரிக்கும் முறைகளை கூகுளில் தேடுவது கடுமையான குற்றமாகும். ஹேக்கிங் முறைகளைத் தேடி போலீசில் பிடிபட்டாலும் பல ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

மகனின் இழப்பால் ஓடும் ரயிலில் இருந்து குதித்த தந்தை!

Quick Share

தமிழக மாவட்டம் தென்காசியில் மகன் இறந்த துக்கம் தாங்காமல், தந்தை தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியின் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். எனினும் காயங்களுடன் உயிர்தப்பிய அவரை மீட்ட ரயில்வே பொலிஸார், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், வீடு திரும்பிய செல்வகுமார் மீண்டும் உயிரை மாய்த்துக்கொள்ள விஷம் குடித்து இறந்தார். அவரது உடலை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் செல்வகுமாரின் 8 வயது மகன் அசோக், பாடசாலையில் மதிய உணவை சாப்பிட்ட பின் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

மகனின் இறப்பினால் சோகத்தில் மூழ்கியிருந்த செல்வகுமார் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.

குரங்கு காய்ச்சல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய தமிழக அரசு!

Quick Share

உலக சுகாதார நிறுவனம், குரங்கு காய்ச்சல் நோயை சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC – Public Health Emergency of International Concern) அறிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் சுகாதார வசதிகளின் தயார்நிலையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கண்காணிப்பின் நிலை தனிமைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறை குறித்து விவாதித்தார்.

குரங்கு காய்ச்சலைப் பரிசோதிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட மையமாகச் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் மத்திய அரசால் இனம் காணப்பட்டுள்ளது. இருப்பினும், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிகழ்வேதும் இதுவரை மாநிலத்தில் பதிவாகவில்லை. 

மேலும் கண்காணிப்பு நெறிமுறையை மேம்படுத்தவும், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடத்தவும் மருத்துவத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நோய் பரவல் குறித்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.

அதோடு தமிழக மருத்துவத் துறையும், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி இந்நோய் குறித்துத் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் தேசிய சுகாதார நலக்குழுமத்தின் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அரவிந்த், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பிற உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

‘இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழகம்’ – முதல்வர் பெருமிதம்!

Quick Share

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லம் – வடகால் கிராமத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 18 ஆயிரத்து 720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் 706.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா இன்று (17.08.2024) மாலை 05.45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு குடியிருப்பு குடியிருப்பு வளாகத்தைத் திறந்து வைத்து பெண் பணியாளர்களுக்குச் சாவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தையும்விட தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. அதாவது 42 விழுக்காடு என்ற அளவில் இருக்கிறது. 

அந்த வகையில், இந்த நிறுவனத்தின் சமத்துவ நோக்கத்தைப் பாராட்டுகிறேன். வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எடுத்துக்காட்டாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’. அது மட்டுமல்லாமல், இன்னும் பல புதுமையான திட்டங்களைப் பெண்களுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது.

பணிக்குச் செல்லும் தாய்மார்களின் நலன் கருதி. சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்கனவே 63 குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. மேலும், சிப்காட் நிறுவனம் நேரடியாகக் குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்த முடிவெடுத்து இருக்கிறது. அதை ஊக்குவிக்கும் அரசுப் பெண்களைத் தொழில் முனைவோராக உருவாக்க, இளம் வயதிலேயே வகையில், பள்ளிகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்காக. உலக வங்கி உதவியோடு தமிழ்நாடு அரசு வி சேப் (WE SAFE) திட்டத்தைத் தொடங்கி, பயிற்சி அளித்துக் கொண்டு வருகிறது.

திராவிட மாடல் அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமல்லாமல், தெற்கு ஆசியாவிலேயே முன்னணி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று இலட்சிய இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் வெற்றியும் பெற்று வருகிறோம். நிதி ஆயோக் அமைப்பின் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி ஆகிய குறியீடுகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருக்கிறது. பத்து குறியீடுகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 13 குறியீடுகளில் தமிழ்நாடு 11-ல் தேசிய சராசரியைவிட அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறது.

2023-2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.19 விழுக்காடு பங்களிப்போடு தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்று இங்குக் குறிப்பிடுவது அவசியம் என்று நினைக்கிறேன். இந்தியாவிலேயே பன்முகத்தன்மையோடு தொழில் துறைக்குச் சாதகமான எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கி வருகிறது” எனத் தெரிவித்தார்.

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Quick Share

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

நித்யானந்தாவுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..ஆதிபராசக்தியின் அடுத்த உருவம்..!!

Quick Share

 சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது சாமியார் அவதாரம் எடுத்திருக்கும் அன்னபூரணி என்ற அன்னபூரணி அரசு அம்மா நித்யானந்தாவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு சத்சங்கம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் உலக பேமஸ் ஆக வேண்டும் என்பதால் தான் பேசிய சொல்வதெல்லாம் உண்மை வீடியோவை அதிகம் பரப்ப வேண்டும் என தம்பிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் மிகவும் பிரபலம் ஆன அன்னபூரணி அரசு அம்மா எனும் பெண் சாமியார், தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வப்போது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அட்வைஸ் கொடுத்து பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திடீரென சாமியார் அவதாரம் எடுத்தார். அப்போது முதல் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் அதனை கண்டு கொள்ளாமல், ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார்.

தற்போதைக்கு நித்தியானந்தாவுக்கு அடுத்த வரிசையில் தமிழகத்தில் அதிக அளவு மக்களால் பேசப்படும் நபராக இருப்பவர் அன்னபூரணி அரசு அம்மா. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் அவதாரம் தான் எனக் கூறி திடீரென பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குவதாக விளம்பரம் செய்து வருகிறார். இதற்காக தனியாக இடமும் வாங்கி சாமி படங்களில் வருவது போல் வீடியோ எடுத்து பட்டி, டிங்கரில் செய்து கிரீடம், சூலாயுதம் சகிதமாக தினமும் ஃபேஸ்புக்கில் வருகிறார். அவரது சேலை மேக்கப்பை பார்ப்பதற்காகவே பெண் பக்தைகள் நூற்றுக்கணக்கில் வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், நீங்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று பார்த்தால் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டும் அவரை போற்றிப் புகழ்ந்து கமெண்ட் செய்திருப்பார்கள். பலரோ காமெடியாகவே கமெண்ட் செய்திருப்பதைப் பார்க்க முடியும். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக அன்னபூரணியை நெட்டிசன்கள் மறந்துவிட்டனர் போல.. இதனால் தனக்கு நெகட்டிவ் விளம்பரம் கூட கிடைக்கவில்லையே என நினைத்தாரோ என்னவோ, மீம் கிரியேட்டர்களை தம்பிகளே எனக் குறிப்பிட்டு ஒரு அன்புக் கோரிக்கை வைத்துள்ளார் அன்னபூரணி அரசு அம்மா.

இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பேசியுள்ள அவர்,”என்னைக் குறித்து சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யும் தம்பிகளே உங்களுக்கு இன்னும் ட்ரெயினிங் பத்தவில்லை. சொல்வதெல்லாம் உண்மை வீடியோவை இன்னும் அதிகமாக பரப்புங்கள். நீங்கள் நினைப்பது போல சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடந்தது சாதாரணம் கிடையாது. அது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அந்த வீடியோவின் மூலமாகத்தான் நான் வெளி உலகத்திற்கு தெரிய வரவேண்டும் என்பதற்காகவே அது ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் அரசு கலந்து கொண்ட பிறகு அவரிடம் தீட்சை பெற நிறைய பக்தர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் நிகழ்ச்சியை விட உங்கள் தைரியம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது என்று தான் சொன்னார்கள். இந்த வகையில் இன்னும் பலருக்கு நான் தீட்சை வழங்க வேண்டி இருக்கிறது. அதற்காக உலகம் முழுவதும் நான் தெரிய வேண்டும் எனவே அனைவரும் சொல்வதெல்லாம் வீடியோவை பரப்புங்கள்” என பேசி இருக்கிறார்.

அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக இருந்து நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்தது. நிலையில் கடந்த சில நாட்களாக அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. ஃபேஸ்புக்கில் ஆள் வைத்து கமெண்ட் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் தான் மீண்டும் பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை அன்னபூரணி போட்டு இருக்கிறார் என கிண்டல் செய்கின்றனர் நெட்டிசன்கள்.

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை! அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

Quick Share

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிற்கு பொது விடுமுறை நாளாகும். இந்த ஆண்டு சுதந்திர தினமானது வியாழக்கிழமை வந்துள்ளது. அடுத்த நாளான வெள்ளிக்கிழமை வேலை நாளாகும்.

ஆகஸ்ட் 17 ,18 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். அதன் காரணமாக பெரும்பான்மையான கம்பெனிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் வெள்ளிக்கிழமையை விடுப்பு எடுத்துக்கொண்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இவ்வாறாக வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையை பெற்று தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர முடிவு செய்துள்ளனர்.

ஒரு சில தனியார் கம்பெனிகள் வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவித்து தொடர்ந்து நான்கு நாட்கள் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இந்தத் தொடர் விடுமுறை நாட்களை தமிழக அரசானது கருத்தில் கொண்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு சில முன்னேற்பாடுகளில் செய்துள்ளது.

தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை எடுத்து பணியாளர்கள் தங்களின் ஊருக்கு செல்வார்கள் என்பதால் புதன்கிழமை மாலை முதலே பல ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 14ஆம் தேதி அன்று 470 பேருந்துகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வெள்ளி, சனிக்கிழமைகளில் 365 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் புதன்கிழமை அன்று 70 சிறப்பு பேருந்துகள் பல ஊர்களுக்கு அனுப்பப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்ல உள்ளதால் கூட்ட நெரிசலில் அவர்கள் பாதிக்க கூடாது என்பதால் தமிழக அரசு தனது https://www.tnstc.in இணையதளத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தொடர் நான்கு நாட்கள் சுதந்திர தின விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களது டிக்கெட் புக் செய்து பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவர் நியமனம்!

Quick Share

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கடந்த ஓராண்டுக் காலத்திற்கும் மேலாக காலியாக இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் உத்தரவின்படி தமிழக அரசு செயலர் கே.நந்தகுமார் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 316 பிரிவு 1வது உட்பிரிவின் கீழ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்படுகிறார். இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆறு வருட காலத்திற்கு அல்லது அவர் 62 வயதை அடையும் வரை, எது முந்தையதோ அது வரை இந்த பதவியில் இருப்பார். தமிழக ஆளுநர் மூலம் இந்த நியமனம் செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 2028ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார். டிஎன்பிஎஸ்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பிரிவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகர் தற்போது தமிழக அரசின் வருவாய் நிர்வாகத் துறை ஆணையராகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 1989 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ரவுடியின் வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி: போலீசார் தீவிர விசாரணை!

Quick Share

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெ.பெரியாங்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அடிதடி மற்றும் கொலை என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழலில் தான் இவர் முத்தாண்டி குப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளார்.

இவரின் வங்கிக் கணக்கில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2.5 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதாவது பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ. 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் என ஒரே மாதத்தில் 2.5 கோடி ரூபாய் இவரின் வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கனரா வங்கி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரவுடி அசோக் குமாரின் வங்கி கணக்கை கனரா வங்கி முடக்கி உள்ளது. அதே சமயம் இது குறித்து தகவல் அறிந்த ரவுடி அசோக் குமார் தனது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை 7 பேருக்கு அனுப்பியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து இவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே அசோக் குமார் தலைமறைவாகியுள்ளார். கடலூரில் சரித்திர பதிவேடு ரவுடி வங்கிக் கணக்கில் ஒரே மாதத்தில் ரூ. 2.5 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நண்பரை பார்த்துவிட்டு காரில் ஊர் திரும்பிய மாணவர்கள்…லாரி மோதி ஐந்து பேர் பலி!!கத...

Quick Share

தமிழக மாவட்டம் திருவள்ளுவரில் கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் ஒன்று, எதிரே வந்த லொறி மீது மோதியதில் ஐவர் பலியாகினர். 

காரில் திரும்பிய மாணவர்கள்

சென்னையில் தனியார் கல்லூரியில் பயின்று வந்த 7 மாணவர்கள், தங்கள் நண்பரை காண ஆந்திர மாநிலத்திற்கு சென்றுள்ளனர். 

பின்னர் காரில் அவர் சென்னைக்கு திரும்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி பகுதியில் அவர் பயணித்த கார் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லொறி மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. 

உடல் நசுங்கி பலி

இதில் கார் பலத்த சேதமடைந்ததையடுத்து உள்ளே இருந்த 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். 

மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் புதிய வழக்கு!

Quick Share

யூடியூபர் சவுக்கு சங்கர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த மே மாதம் 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் இந்த கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் உள்ளிட்ட 5 பேர் மீது தேனி மாவட்ட பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இத்தகைய சூழலில் சி.எம்.டி.ஏ. (CMDA) அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார்.

சவுக்கு சங்கர் தற்போது மதுரையில் உள்ள மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதற்கான நகலை சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் வழங்கியுள்ளனர்.

10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

Quick Share

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி இரவு 7 மணி வரை தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




You cannot copy content of this Website