Uncategorized

குரூப்-4 தேர்வில் முறைகேடு, தரவரிசையில் முன்னிலையில் உள்ள 40 பேரிடம் வலுக்கும் விசாரணை !!!

Quick Share

குரூப்-4 தேர்வில் குறிப்பிட்ட இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மீது எழுந்த தேர்வு முறைகேடு சந்தேகத்தால் தற்போது 40 பேர்களிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தீவிர விசாரணை தொடங்கியுள்ளது.

2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2018- 2019, 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரிதண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் போன்ற 9398 காலிப்பணியிடங்களை கொண்ட தேர்வில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் செப்டம்பர் 1ம் தேதி தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெற்றியடைந்த தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதி தேர்வுமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதால், இந்த இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இத்தனைபேர் எப்படி தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளனர் என்ற சந்தேகம் எழுந்ததால், அங்கு எதாவது முறைகேடு நடந்திருக்குமா என விசாரனையை மேற்கொண்டனர் அதிகாரிகள்.

இதன் காரணமாக ராமநாத புறம் கிழக்கை தேர்வு மையங்களில் நேரடியாக சென்று அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது, அந்த தேர்வு இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதிய சுமார் 57 பேருக்கு TNPSC சாரிபில் சம்மன் அனுப்பப்பட்டது. அதில்முதற்கட்டமாக நேற்று 20 பேர் விசாரணைக்காக சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திற்கு வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு எழுதியவர்களிடம் TNPSC செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் அதிகாரிகள் பல சுற்றுகளாக தனித்தனியாக விசாரித்தனர். அப்போது அவர்கள், சொந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் இருக்கும் போது நாமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் என் தேர்வு எழுதினீர்கள் ? எப்படி தேர்வில் தேர்ச்சி பெற்றீர்கள் ? நிலவரம் என்ன? , தேர்வு எழுத யாராவது உதவினார்களா ? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டு பிழிந்தெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் அந்த 20 பேருக்கும் புது வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு புது தேர்வுகள் நடத்தப்பட்டு அப்போதே விடைத்தாள்களும் திருத்தப்பட்டது. காலை 10 மணியளவில் ஆரம்பித்த கெடுபிடி விசாரணை மதியம் 2 மணிவரை தொடர்ந்து நடந்தது. அதன் பின் விசாரணைக்கு வந்த அனைவரிடமும், ஒரு கடிதம் எழுதி வாங்கியுள்ளனர். அந்த கடிதத்தில், TNPSC அதிகாரிகள் எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைத்தாலும் கட்டாயம் வரவேண்டும். மேலும் தேர்வில் எந்தவித முறைகேட்டில் ஈடுபடவில்லை எனவும் எழுதிவாங்கப்பட்டுள்ளது.

சம்மன் அனுப்பப்பட்ட 57 பேரிடமும் முழுவிசாரணையில் ஈடுபட்டபிறகுதான், குரூப்- 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறியமுடியும், அவ்வாறு கண்டுபுடிக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு கண்டிப்பாக போடப்படும். மேலும் அவர்கள் இனி தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் எந்த ஒரு தேர்விலும் பங்கேற்கமுடியாது என தகவல்கள் தெரிவிக்கிறன. ஒரு வேளை தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானால், தேர்வை எழுதிய வேறு மாணவர்கள் யாரேனும் நீதிமன்றத்தில் புகார் அளித்தால் நடத்தப்பட்ட தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுவரை தேர்வாணையம் அதிகாரபூர்வமாக எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

#INDvsSL 3வது T20: அதிரடியாக ஆடிய இந்தியா !! இலங்கைக்கு 202 இலக்கு !!

Quick Share

இந்தியா – இலக்கை இடையேயான 3 T20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பில்டிங் செய்ய தீர்மானனித்தது. முதலில் களமிறங்கிய ராகுல், தவான் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரை சதம் அடித்தார்கள். KL ராகுல் 36 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 54 ரன் குவித்தார். தவான் 36 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்து 52 ரன் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி 26 ரன் எடுத்தார்.

மனிஷ் பாண்டே, ஸ்ருடுல் தாகூர் இறுதியில் அதிரடியாக ஆடினார்கள் ஷுர்டுல் தாகூர் 8 பந்துகளில் 1 2 சிக்ஸர் அடித்து 22 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார், மனிஷ் பாண்டே 18 பந்துகளில் 4 பவுண்டரி அடித்து 31ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 201 எடுத்து 6 விக்கெட் இழந்தது. கடைசி 4 ஓவரில் அதிரடியாக ஆடி 59 ரன் எடுத்தது இந்தியா. இலங்கைக்கு 202 என்னும் இலக்கை நிர்ணயித்தது இந்தியா.

https://twitter.com/BCCI/status/1215651125317263361

“Davangre Sugar” வாடகை ஹெலிகாப்டரில் சேலம் ARRS தியேடரில், ரஜினி கட்-டவுட் ...

Quick Share

ரஜினியின் நடிப்பில் தர்பார் படம் ஜனவரி 9 வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல் சூப்பர் ஹிட் ஆகி பட்டி தொட்டி எங்கும் இசைக்கிறது. மேலும் படத்தின் ப்ரோமோஷன் உலக தரத்திற்கு இணையான அளவுக்கு பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. வெளிநாடு செல்லும் பயணிகள் விமானத்தில் தர்பார் படத்தின் படைகளின் வண்ணம் அடித்து கோலாகல படுத்தினார்கள்.

தற்போது சேலத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றம் காமராஜ் மற்றும் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் படத்தை வெளியிடும் நாளன்று சிறப்பு ஏற்பாடாக ஹெலிகாப்டரில் ரஜினியின் கட்-டவுட்டுக்கு மலர் தூவ ஏற்பாடு செய்துள்ளார்கள். இதற்காக பெங்களூருவில் டாவன்கேர் சுகர் (Davangre Sugar) என்னும் தனியார் ஹெலிகாப்டர் கம்பெனியிடம் 5 லட்சம் கொடுத்து. 6 துறைகளின் அனுமதியை பெற்றுள்ளார்கள். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை, அரசு கட்டடப் பொறியாளர், ஏர்போர்ட் என 6 துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளார்கள். மேலும் சேலம் காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமே என்று கூறிவிட்டு அவர்களும் அனுமதி கொடுப்பதாகத் தெரிவித்தார்கள்.

எங்கள் தலைவர் ரஜினிகாக நங்கள் எதையும் செய்வோம் என தெரிவித்தனர்.

“அடுத்தடுத்து சோகம்”, இந்தோனேசியாவில் 5 அடுக்கு கட்டிடம் நிலைகுலைந்து விழுந...

Quick Share

இந்தோனேசியாவில், மேற்கு ஜகார்ட்டா நகரில் உள்ள பிரிஃஜென் கட்டாமஸோ என்ற பகுதியில் 5 அடுக்கு மாடி கட்டிடம் நிலைகுலைந்து விழுந்தது. அந்த கட்டடத்தில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளதாக கூறப்படுகிறது. கட்டடத்தில் ஒரு பகுதி விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இது வரை 8 பேர் இடிபாடுகளில் காயப்பட்டு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு மீட்பு பணியாளர்கள் விருது வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்திற்கு. இந்தோனேசியாவில் சமீபத்தில் மழை வெள்ளத்தில் பல வீடுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல கட்டடங்களும் வீடுகளும் சேதம் அடைந்தது.

இந்த விபத்திற்கான காரணத்தையும் அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்பு இதோனேசியா அரசு சம்பத்தில் கட்டுமான விதிகளை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான இயக்குனர் பா. ரஞ்சித்தின் அண்ணன் சுயேட்ச்சையாக வெற்றி !!

Quick Share

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அண்ணன், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொதுவான வாக்குகள் நெற்றில் இருந்து எண்ணப்படுகிறது. இதில் திமுக, அதிமுக என இருகட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றது. இந்நிலையில் தற்போது திமுக அதிக இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அதிமுக, திமுக போன்ற கட்சிகளை தவிர சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கண்டுள்ளனர். அந்த வகையில், மெட்ராஸ் படத்தை இயக்கி இயக்குனராக கால் பதித்து, பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி. காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ப.ரஞ்சித் அவர்களின் சகோதரர் பிரபு என்பவர் சென்னையில் உள்ள வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பிரபு 155 வாக்குகள் வித்தியாசத்தில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளம்பருதி என்பவரை தோற்க்கடித்துள்ளார். பா.ரஞ்சித்தின் சகோதரர் மொத்தம் 3846 வாக்குகளை பெற்றுள்ளார்.

பா.ரஞ்சித் சமீபகாலமாகவே தனது கருத்துகளை வெளிப்படையாகவும், புரட்சிகரமாகவும் தெரிவித்து வருகிறார். இவரது படங்களும் அதே பாணியில் தான் இருக்கும். இந்நிலையில் இவரது சகோதரர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அசத்தியத்தை அப்பகுதி மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

கோயம்பேட்டில் இரும்பு பைப்பிற்கு நடுவே சிக்கி தவித்த பழ வியாபாரி !!

Quick Share

சென்னையில் உள்ள பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டின் நுழைவு வாயிலில் இருந்த இரும்பு நடைபாதை பைப்பிற்குள் சிக்கி தவித்த வியாபாரியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் பழம், பூ, காய்கறி என அனைத்திற்கும் தனித்தனி கடைப்பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சந்தைக்குள்ளும் நுழைய தனித்தனி வாயில்கள் உள்ளது. வாயில்களின் நுழைவு பகுதியில் இரும்பு பைப்களால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சந்தைகளுக்குள் கால்நடைகள் நுழைந்து நாசம் செய்யாமல் இருக்கும் பொருட்டு இந்த பைப்புகள் கொண்ட நடைபாதை சிறு சிறு இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தள்ளுவண்டியில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்யும் முருகன் எனும் 40 வயது மதிக்கத்தக்க நபர் மார்கெட்டிற்கு வந்துள்ளார். அப்போது எண் 18ல் உள்ள நுழைவு வாயிலில் வழியே நடந்து வந்த அவர் கால்வழுக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவற்றில் இடது கால் இரும்பு பைப்பின் இடைவெளிக்குள் சிக்கி கொண்டது. இதனை கண்ட அருகில் இருந்த கூலி தொழிலாளர்கள் உடனே போய் முருகனை தூக்க முயன்றுள்ளனர். ஆனால் அரை மணிநேரமாக போராடியும் அவரை வெளியே கொண்டுவர முடியவில்லை. எனவே உடனடியாக தகவலை கோயம்பேடு தீயணைப்பு துறைக்கும், ஆம்புலன்ஸிற்கும் தகவல் தெரிவித்தனர். ராஜேந்திரன் தலைமையில் விரைந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர், எந்திரங்களின் மூலம் இரும்பு பைப்பை பெரிதாக்கி 15 நிமிடத்தில் முருகனை பத்திரமாக மீட்டனர்.

காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை, JAN 1 மட்டும், 10 ரூபாய்க்கு சென்னையை சுற்றலாம் !!

Quick Share

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு JAN 1 தேதி பொது மக்கள் சென்னை முழுவதும் சுற்றிபார்ப்பதற்கு ரூபாய் 10 நகங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த இது போன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை இந்த குறைந்த கட்டான வாகனங்கள் இயங்கும். திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா சுற்றுலா வளாகத்திலிருந்து, பொருள்கட்சி, மெரீனா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர், அஷ்டலக்ஷ்மி கோவில், கிண்டி சிறுவர் பூங்கா வழியாக செல்லும். இதில் வாங்கும் டிக்கெட்டை கொண்டு இந்த சுற்றுலா வழித்தடத்தில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், இறங்கலாம் என தெரிவித்தது. மேலும் இந்த டிக்கெட் மாலை 6 மணி வரை செல்லுபடியாகும்.

மேலும் விவரங்களுக்கு: http://www.tamilnadutourism.org/ Tamil Nadu Tourism Complex, No.2 Wallajah Road, Chennai – 600002.
Toll Free No: 180042531111

பெண்களே!! ஆபத்து நேரத்தில் உதவும் “காவலன்” செயலி: எப்படி யூஸ்-பண்ணனும் ? கட...

Quick Share

என்ன சட்டம் இருந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றன. கடந்த மாதம் நடைபெற்ற தெலுங்கானா பாலியல் சம்பவம் நாடுமுழுவதும் தீயாய் பற்றியது. எனவே பல மாநிலங்களும், பெண்களை பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை பெண்களை காக்கும் மொபைல் செயலியான “காவலன் SOS”-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அழைக்கப்படும் பெண்களுக்கு சில நிமிடங்களிலேயே காவல்த்துறையின் பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. எனவே தற்போது தமிழகத்தில் உள்ள காவல் துறையினர் இந்த செயலியை டவுன்லோடு செய்து பயன்பெறுமாறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

“காவலன் SOS” பயன்படுத்துவது எப்படி: கூகுள் playstrore-ல் சென்று “காவலன் SOS” என்ற ஆப் -ஐ டவுன்லோடு செய்து ஓபன் செய்தவுடன், இந்த ஆப்-பிற்கு ஆடியோ ரெக்கார்டிங், வீடியோ ரெகார்டிங் அவசியம் என்பதால் அதற்கு ஓகே கொடுத்துவிடவும். பின்னர் வசதியான மொழியினை (தமிழ்/ஆங்கிலம்) தேர்வு செய்யவேண்டும். அதன் பின் தமிழக காவல் முத்திரையுடன் கூடிய பதிவு பக்கத்தில், தங்களது பெயர், மொபைல் எண், மாற்று எண் (உங்கள் பெற்றோர் அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் ஆகியோரின் 3 எண்களை இதில் பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளது) பதிவிட்டு ஓகே கொடுக்கவும் அடுத்தது next ஐ கிளிக் செய்து அடுத்த பக்கத்தில் உங்களது பாலினம், பிறந்த தேதி, வீட்டு முகவரி, e-mail id போன்ற தகவல்களை பதிவு செய்யவேண்டும். அதன் பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை பதிவு செய்தால், காவலன்-ஆப் பயன்படுத்த ரெடி ஆகிவிடும்.

இதன் பின் நீங்கள் ஆபத்தாக உணரும் சூழ்நிலையில் ,”காவலன் SOS “ஐ ஓபன் செய்தால் நடுவில் வரும் சிவப்பு வண்ணத்தில் “SOS ” எனேவ வரும் ஆப்ஷனை அழுத்தவும். SOS என்பது save our souls, save our ships என்ற உதவி கேட்கும் குறியீடாகும். SOS பட்டனை அழுத்தியவுடன் GPS இயங்க ஆரம்பித்துவிடும், போனில் உள்ள உங்கள் கேமரா தானாக இயங்கி வீடியோ எடுத்து காவல் துறைக்கு அனுப்பிவிடும். இதில் இணையவசதி இல்லாத நேரத்திலும் நீங்கள் இந்த பட்டனை அழுத்தினால் போதும் காவல் துறைக்கு தகவல் (SMS) செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. உங்கள் போனில் உள்ள GPS இயங்குவதால் தகவல் சென்ற சில நிமிடங்களிலேயே காவல் துறையில் உள்ள அதிகாரிகள் நீங்கள் உள்ள இடத்தை கண்டுபிடித்து உங்களை வந்து காப்பாற்றி விடுவார்கள். இந்த “SOS “பட்டனை தேவையில்லாமல் அழுத்தவேண்டாம். இதனால் தேவை இல்லாமல் காவல்துறையில் நேரம் வீணாகும். இதுவரை 5லட்சத்திற்கும்மேற்பட்டோர் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயப்ப பக்தருக்கு கட்டுபோடும் இஸ்லாமிய பெண்!! “மதங்களை கடந்த மனிதநேயம்” இத...

Quick Share

தங்களை மையமாக வைத்து ஒரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருக்க, மதம் என்னடா மதம், மனிதம் எப்போதும் நிலைத்து நிற்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக கேரளாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் அந்த புகைப்படத்தை பார்த்தாலே போதும் புரிந்துவிடும்.

சபரிமலை செல்லும் மாதம் என்பதால் தற்போது ஐயப்ப சுவாமியை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேரளாவிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கேரளாவின் தலைநகரான திருவனத்தபுரத்தில் உள்ள கிழ்க்கோட்டையில் இருக்கும் புகழ் பெற்ற பத்மநாப சாமி கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று ஐயப்ப பக்தர் ஒருவர் தனது மகனுடன் அந்த கோவிலுக்கு சுவாமியை தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது கால் நடைபாதையில் உள்ள சிலாப் கல் ஒன்றில் மோதியது. இதனால் காலில் காயம் ஏற்படவே வலிதாங்காமல் கீழே உட்கார்ந்து விட்டார். இதை பார்த்த மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற வேளையில், அப்பகுதி வழியாக தனது தோழிகளுடன் வந்த இஸ்லாமிய பெண் அவரை கண்டவுடன் கடையில் இருந்து தண்ணீர் வாங்கி அவரது காலில் ஊற்றி கழுவினார். பின்னர் மருந்து கடையில் இருந்து மருந்து வாங்கி அவரது காலில் கட்டுப்போட்டு விட்டார்.

இந்தியாவில் முஸ்லீம் மதத்தினரை மையமாக கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவுக்கு முஸ்லீம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் போராடுவதும் மூலமாக மதப்பிரிவினை இல்லை என்று நிரூபித்திருக்கின்றனர் மக்கள். அதேபோல இந்த இஸ்லாமிய பெண் செய்த இந்த செயலால் மனிதம் மதத்தினை தாண்டியது என மேலும் நிரூபித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

டெல்லியில் 144 தடை உத்தரவு!! பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மொபைல் சேவைகள் தற்காலிகமாக ந...

Quick Share

டெல்லியில் செங்கோட்டை அருகே குடிஉரிமைக்கு எதிராக பேரணியில் ஈடுபட அனுமதி மறுத்து , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்து, குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற பட்டுள்ளது .இதற்கு எதிராக வட மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்து போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதனை தொடர்ந்து மக்களும், எதிர்கட்சிகளும், பல்கலைகழக மாணவர்களும், இளைஞர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லியில் ஜாமியா பலக்லைக்கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே போராட்டத்தின் போது வன்முறைவெடித்தது. இதனை தொடர்ந்து டெல்லி குரு கோவிந்த் சிங், இந்திரபிரஸ்தா பல்கலைகழக மாணவர்களும் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக லால் குயிலாவில் இருந்து ஷாகீத் பகத் சிங் பூங்கா நோக்கி காலை 11:30 மணியளவில் பேரணி நடத்த போவதாக தெரிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி இன்று மதியம் 12 மணிக்கு பேரணி நடத்த போவதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்ததையடுத்து, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு, செங்கோட்டையருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி லஹாரி கேட், காஷ்மீர் கேட் மற்றும் கொத்வாலி காவல் நிலையம் ஆகிய பகுதிகளும் இதில் அடங்கும். எனவே அந்த இடங்களில் 4 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள் தடையை மீறி போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.

79 ஆயிரம் BSNL ஊழியர்கள் சுய விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் !!

Quick Share

BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 78,569 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் அளித்துள்ளது .

அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான BSNL நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது இந்த நிறுவனங்களின் ஊழியர்களின் ஊதியத்திற்கே ரூ.14,492 கோடி செலவழித்து வருகிறது. எனவே அந்த நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்ட விண்ணப்பிக்க கால அவகாசம் அளித்த கேடு கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதம் மூலம் சுமார் 78,569 ஊழியர்கள் தற்போது விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் அளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வளவு ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தால், இந்த நிதியாண்டில் ஊதியம் மற்றும் இதர படிகள் என மொத்தம் 1,300 கோடி ரூபாயை சேமிக்க முடியும் என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.கே. புர்வார் கூறியுள்ளார்.

மேலும் சுய விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 31ம் தேதி பணியில் இருந்து விடுகிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மற்றொரு அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிகாம் நிகாம் நிறுவனத்துடன் இணைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும் பி.கே.புர்வார் தெரிவித்தார்.




You cannot copy content of this Website