சென்னையில் எந்தெந்த பகுதியில் எவ்வளவு பாதிப்புகள் ! முழு விவரம் இதோ..,
தமிழகத்தில் மொத்தமாக 13,191 பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 743 பேரில் 557 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆகும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர் பகுதியில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
(20.05.2020) சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 43
இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 5,882 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,219 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 87 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.