ஈரானில் உள்ள புஷ்ஷீர் அணு உலை அருகே 4.9 ரிக்டர் அளவு கோளில் பதிவானது. ஈரானில் போரேஜன் நகரின் தென்கிழக்கே 10 km தொலைவில் சரியாக 10 Km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் இயற்கையான நிகழ்வு எனவும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இருக்கும் போர் பதற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தனர்.
இன்று காலை இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும் நிலையில் உள்ளார். மறுபக்கம் ஈரான் சுலைமானி தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என அமெரிக்காவை எச்சரித்துள்ளது. மேலும் தற்போது அணு உலைக்கு அருகே நடந்த நிலநடுக்கம் அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் உள்ள பெண்டெல்ட்டன் பகுதியில், டவ்ன் கில்லியம் – ஜேசன் டெலோ தம்பதியருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. பொதுவாக இரட்டை குழந்தைகள் சில மணி நேரம் இடைவெளியில் தான் பிறகும் ஆனால் இந்த தம்பதியருக்கு அரை மணி நேரம் இடைவெளியில் உலகத்தை கண்டுள்ளனர்.
2019 டிசம்பர் 31 தேதி தயார் ட்வன் கில்லியம் St. Vincent Carmel மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ட்வன் கில்லியம் அனுமதிக்கப்பட்ட பிறகு மருத்துவர்கள் பரிசோதித்தது இரட்டை குழந்தை பிறகும் என தெரிவித்தனர். இரவு 11.37 மணிக்கு முதல் குழந்தை பிறந்தது சரியாக 30 மணி நிமிடம் கழித்து 2020 ஜனவரி 1, 12.07 மணிக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது. இந்த இரட்டை குழந்தைக்கு Joslyn, Jaxon tello என பெயரிட்டுள்ளனர். இதனால் இந்த இரட்டை குழந்தைகள் அரை மணி நேரத்தில் இருவேறு (decade) எனப்படும் தசாப்தத்தில் பிறந்துள்ளார்.
முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு Joslyn என்றும், அடுத்த வருடம் பிறந்த இரட்டையர்களில் ஒருவரான ஆண் குழந்தைக்கு Jaxon என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த அரைமணி நேர இடைவெளியால் இன்றே நாளில் பிறந்த நாள் கொண்டாட முடியாமல் போனது. இந்த தம்பதியருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி குவாஸிம் சுலைமானை ஏவுகணை தாக்குதல் நடத்தி கொலை செய்து அமெரிக்க ராணுவம் சர்வதேச தீவிரவாதத்தை செய்துள்ளது என கடுமையாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலையம் மீது கடந்த வாரம், ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினரால் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால், அமெரிக்காவை சேர்ந்த தனியார் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த அமைப்பினர்மீது அமெரிக்கா நடத்திய பதில் தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லாவை சேர்ந்த போராட்டகாரர்கள் கடந்த செய்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அந்தண் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். அதனால், ஆத்திரமடைந்த அமெரிக்க ராணுவம் அதற்கு பதிலடியாக இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத்தலைவர் அபு மஹதி அல் முஹன்திசும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் அமெரிக்க அதிபராக டொனல்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில் தற்காப்பு நோக்கத்திற்காக நடத்தப்பட்டதாக தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, ஈரான் அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட குழுக்கள் இணைந்து தெஹ்ரானில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளது. ஈரான் அரசின் செய்தி ஊடகமான ஐ.எஸ்.என்.ஏ அமைப்பின் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான கேவன் கோசார்வி கூறுகையில் , “பாக்தாத்தில் தளபதி குவாசிம் சுலைமானை அமெரிக்க ராணுவம் கொலை செய்தது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம் என தெரிவித்தார். இதற்கிடையில் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப் ட்விட்டரில் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார்.
Srinagar: Shia Muslims carry photographs of the killed Iranian military commander Qasem Soleimani as they take part in a protest against the US Air strike on Iraq military base, at Magaam near Srinagar, Friday, Jan. 3, 2020. (PTI Photo) (PTI1_3_2020_000134B)
அதில் , “ஐ.எஸ்.ஐ.எஸ், அல் நுஸ்ரா, அல்கொய்தாவுக்கு எதிராக போராடி வந்த ஜெனரல் சுலைமானை கொலை செய்து சர்வதேச தீவிரவாதத்தை அமெரிக்கா செய்துள்ளது. இது மிகப்பெரிய தீவிர பேராபத்தை விளைவிக்கும். ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகப்படுத்தும் முட்டாள்தனமான செயல், நேர்மையற்ற முறையில் யோசிக்காமல் செய்யும் சாகசங்களுக்கெல்லாம் அமெரிக்கா பொறுப்பேற்று அதை தாங்கிக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். மேலும் ஈரான் புரட்சிப்படையின் முன்னாள் கமாண்டர் மோசின் ரேஸாய் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “தளபதி சுலைமானை கொன்ற அமெரிக்காவுக்கு எதிராக மூர்க்கத்தனமான பழிவாங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷாங்காய் நகரில், இந்த புத்தாண்டில் புது விதமாக டிரோன்களை கொண்டு வானில் வண்ணமயமாக வானொலி காட்சிகள் உருவாக்கப்பட்டு அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது.
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன், இரவு 12 மணிக்கு கேக் வெட்டியும் வாணவேடிக்கைகள் முழங்க உற்சாகமாக கொண்டாடினர். வானமே வண்ணக்கோலத்தில் காட்சியளித்தது. இந்நிலையில் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் டிரோன்கள் மூலம் புத்தாண்டை புதுவிதமாக்க, அறிவியலோடு கலந்த கலைநயத்தை அரங்கேற்றியுள்ளனர். தற்போது இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அங்கு சுமார் 2000 டிரோன்களை பயன்டுத்தி வானில் ஒளி ஓவியங்கள் உருகாக்கப்பட்டன. அறிவியலுடன் கலைநயமும் சேர்ந்து பார்ப்போரின் கண்களை வெகுவாக இது கவர்ந்துள்ளது.
உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் 90’களில் பல்வேறு காரணங்களால் தாளித்த நேரத்தில் கார்லோஸ் கோன் என்பவர் நிசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று நிறுவனத்தை கடுமையான நெருக்கடியிலிருந்து காப்பாற்றினார். சுமார் 20 ஆண்டிற்கு மேலாக நிறுவனத்தின் தலைவராக இருந்துள்ளார். அவர் 1000 கோடிக்கும் மேல் நிதி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. கார்லோஸ் கோன் மீது நிதி மோசடி வழக்கு தொடரப்பட்டு கைது 2018-ல் செய்யப்பட்டார்.
கார்லோஸ் கோன் பிரேசில் நாட்டில் பிறந்தார் மேலும் பிரேசில், பிரான்ஸ், லெபனான் ஆகிய மூன்று நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ளார். 2018 கைது செய்யப்பட்ட கார்லோஸ் 2019 ஆண்டின் தொடக்கத்தில் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளிவந்த பிறகு அவருக்கு வெளிநாடு செல்லக்கூடாது, போன் பயன்படுத்தக்கூடாது என பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் டோக்கியோ நகரில் வசித்த கார்லோஸ் பலத்த காவலில் இருந்தார். அவர் வீட்டில் கிரிகோரியன் இசை குழுவின் இசை கச்சேரி நடைபெற்றது, இந்த இசைக்கச்சேரியில், குழுவினரின் இசை பெட்டிக்குள் மறைந்து அவர் தனி விமானம் மூலமாக லெபனான் தலைநகர் பெய்ரூட் நகருக்கு சென்றதாக பேசப்படுகிறது.
உலக அளவில் யூ டியூப் மூலமாக சேனல் நடத்தி அதிகளவு வருமானம் ஈட்டி வரும் நபர்களின் பட்டியலை அமெரிக்க நாட்டின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தின் சார்பாக வருடம் தோறும் வெளியிடப்படும்.
அந்த வகையில்., இந்த வருடத்திற்கான பட்டியலானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க நாட்டினை சார்ந்த ரியான் காஜி என்ற 8 வயதாகும் சிறுவன்., தனது யூ டியூப் சேனல் மூலமாக 26 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.185 கோடி) வருட வருமானமாக சம்பாதித்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளான்.
மேலும்., ரியானின் பெற்றோர் கடந்த 2015 ஆம் வருடத்தின் போது “ரியானின் உலகம்” என்ற யூ டியூப் சேனலை துவங்கி., சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மையை மதிப்பாய்வு செய்து ரியான் மூலமாக விடீயோக்களை பதிவு செய்து வெளியிட்டு வந்தனர். இந்த சேனலுக்கு 2 கோடி 30 இலட்சம் சந்தாதாரர்கள் உள்ள நிலையில்., ரியானுடைய பல விடீயோக்களை 100 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ரியானின் விடீயோக்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்து ரியான் தற்போது சிறிய அளவிலான அறிவியல் பரிசோதனை செய்து வீடியோ பதிவு செய்து வருகிறான். இதனைப்போன்று ரஷிய நாட்டினை சார்ந்த 5 வயதுடைய சிறுமி அனுஷ்டாசியா 18 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.128 கோடி) வருமானத்துடன் 2 ஆவது இடத்தினை பிடித்துள்ளார்.
சிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரிபவர் சரவணன் அய்யாவு. அண்மையில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இந்த ஆடியோ பதிவை ஃபேஸ்புக்கிலும் அவர் பதிவிட்டுள்ளார்.
விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்வது தன்னுடைய நீண்டகால எண்ணம் என்றும் அதற்கு அனுமதி கொடுத்த விமானத்தின் கேப்டனுக்கு நன்றி தெரிவித்தும் அந்த பதிவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார். விமானம் தரையிறங்கும் முன்னர் நேரம், பருவநிலை குறித்து பயணிகளுக்கு விமானிகள் அறிவிப்பர். இந்த அறிவிப்பை அவ்வப்போது நான்கு மொழிகளிலும் முன்பதிவு செய்வது சிரமம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் செய்தி நிறுவனமான மீடியாகார்ப்பின் தமிழ்ச் செய்தி பிரிவுக்கு அந்த நிறுவனம் அளித்த விளக்கத்தில் விமானி சரவணன் தமிழ்ப் படைப்பாளராக அனுபவம் இருந்ததால், தமிழில் அறிவிக்கும் அவருடைய கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஓ.ஐ.சி என்றழைக்கப்படும் 57 நாடுகளின் உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பு, இந்தியா சிறுபான்மையின மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் நடந்துகொள்வதாக கண்டித்திருக்கிறது.
1969ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓ.ஐ.சி எனப்படும், ஆர்கனைஷேஷன் ஆப் இஸ்லாமிக் கோப்பரேஷன் என்கிற இஸ்லாமிய கூட்டமைப்பில் 57 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் கூட்டத்தில் தற்போது இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம் குறித்து கேள்வி எழுப்பி கண்டித்துள்ளது. அதில் அந்த கூட்டமைப்பு கூறியிருப்பதாவது, இந்தியாவில் இஸ்லாமியர் பாதுகாப்பு இல்லை என கவலை தெரிவித்திருக்கிறது. மேலும் மூன்று நாடுகளில் இருந்து வரும் 6 சிறுபான்மையின மக்களுக்கு கட்டப்படும் அக்கறை இஸ்லாமியர்களிடம் இல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் 42வது அமர்வின் போது இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
கடந்தவாரம் மலேசியாவில் நடந்த அரபிக் நாடுகள் உச்சி மாநாட்டில், நீங்கள் கொண்டுவந்துள்ள சட்டதை போல நாங்களும் கொண்டுவந்தால் என்ன ஆகும் என இந்தியாவை கேள்வி எழுப்பிய மலேசிய நாட்டின் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி சமீபத்தில் ராம் லீலா மைதானத்தில் இஸ்லாமிய அமைப்புக்களுடன் தனது அரசுக்கு நல்லுறவு இருப்பதாக கூறிய 3 மணி நேரத்திலேயே இந்த 57 நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவை கண்டித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைக்கல் ஜாக்சன் போன்று அச்சு அசலாக உள்ள இசைக்கலைஞர் , டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்.
உலக புகழ் பெற்ற பிரபல பாப் பாடகரும், நடன சூறாவளியுமான மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு உயிரிழந்தார். அவர் இறந்தாலும் தற்போது அவர் இடத்தை யாரும் நிரப்பமுடியாத அளவிற்கு இசைமன்னனாக திகழத்தவர் .இந்நிலையில் அர்ஜென்டினாவில் பார்சிலோனா பகுதியை சேர்ந்த இலைகலைஞரான செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த பாப் மன்னர் மைக்கேல் ஜாக்சனின் ஜெராக்ஸ் போல அச்சு அசலாக உள்ளார். இசைக்கலைனரான அவர் உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மைக்கேல் ஜாக்சன் பாடல்களுக்கு அவரை போன்ற பாணியிலேயே நடனமாடி வருகிறார்.
சமீபத்தில் அவர் நடனமாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் அவர் தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இதனால் இசைக்கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ், தான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்பதை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை செய்யவேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
“வேலையே வேணாம், லாட்டரி அடிச்சுடுச்சி” ஆனா ’32 கோடி எனக்கு இல்லையா? பொய்யா’? என புலம்பிய ஸ்பெயின் பெண் செய்தியாளர்.
ஸ்பெயின் நாட்டில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெறும். அந்நாட்டில் அதில் ஒரு பகுதியாக லாட்டரி குலுக்கல் நடைபெறுவது பிரபலம். இந்த ஆண்டு கிறிஸ்த்துமஸ் நிகழ்வை ஒட்டியும் லாட்டரி குலுக்கல் 22 தேதி நடைபெற்றது. இந்த கிறிஸ்துமஸ் லாட்டரி சற்று வித்தியாசமானது, ஒரே நம்பர் கொண்ட பல சீட்டுகள் விற்கப்படும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நம்பரை கொண்டவர்கள் அனைவரும் பரிசு பெறுவார்கள். ஒரே நபர் தேர்ந்தெடுக்கப்பட்ட லாட்டரி சீட்டு அனைத்தையும் வாங்கியிருந்தால் அவருக்கே மொத்த பணமும் வழங்கப்படும். ஆனால் இது பெரிய குலுக்கல் என்பதால் அவ்வாறு நடக்கும் வாய்ப்பு குறைவு. இதில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அங்கு நடைபெறும் நிகழ்வை நாட்டின் முக்கிய ஊடகங்கள் நேரலை செய்துகொண்டிருந்தன. நடாலியா என்ற பெண் செய்தியாளரும் களத்தில் இருந்து செய்திகளை நேரலை செய்துகொண்டிருந்தார். அவரும் பல லாட்டரி சீட்டை வாங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் , இந்திய மதிப்பில் 32 கோடி பரிசுக்கான லாட்டரி சீட்டின் நம்பர் அறிவிக்கப்பட்டது . அனைவரும் தன்னிடம் உள்ளதா என தேடி கண்டுபிடித்து கொண்டாடினர் .அப்போது நடாலியா அந்த நம்பர் தன்னிடம் இருப்பதை கண்டு , உற்சாகத்தில் துள்ளினார் .அதே உற்சாகத்தில் , தொலைக்காட்சி நேரலையையே மறந்து” நான் சந்தோஷமாக இருக்கிறேன், பெரும் பணத்தொகை எனக்கு கிடைத்துவிட்டது .நான் நாளை முதல் வேலைக்கு போக மாட்டேன் .எனது வேலையை ராஜினாமா செய்கிறேன் ” என அறிவித்தார் .அவருடன் இருந்த சக ஊடக நண்பர்கள் செய்வதறியாது சிரித்த வண்ணம் நின்றனர் . ஆனால் உண்மையான பரிசு தொகையை என்னவென்று அறியாமல் நடாலியா உற்சாகப்பட்டார் .உண்மையிலேயே வெற்றி பெற்ற அனைவர்க்கும் தொகையை பிரித்து கொடுக்கும் போது அவரின் பரிசு தொகையாக இந்திய மதிப்பில் ரூ, 4லட்சம் ரூபாய்தான் கிடைத்தது.
சில மணித்துளியில் மீண்டும் நேரலையில் தோன்றிய நடாலியா, கொஞ்சம் எமோஷனல் ஆனதால் அப்படி பேசிவிட்டேன் ,உண்மையை உணர்ந்துவிட்டேன். 25 வருடமாக எனது செய்தியாளர் பணியை திறம்பட செய்த்துவருகிறேன். அதற்கு நான் பெருமை படுகிறேன். இதன் ஒரு விஷயத்தை கொண்டு நான் பொய் பேசுபவர் என நீங்கள் நினைக்கவேண்டாம். தவறான தகவலை அளித்ததற்கு எண்ணை மன்னிக்கவும் என கேட்டுக்கொண்டார்.
விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டது, பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக சிங்கப்பூர் விமான நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது
விமானம் தரையிறங்கும் முன்னர் தரையிறங்கும் நேரம், மற்றும் பருவநிலை குறித்து விமானிகள் பயணிகளுக்கு அறிவிப்பதுண்டு. இந்த அறிவிப்பை தற்போது நான்கு மொழிகளில் அறிவிப்பது விமானிகளுக்கு சிரமமாக உள்ளதென விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் விமான நிறுவனமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரிந்துவரும் விமானி சரவணன் அய்யாவு என்பவற்றின் கோரிக்கைக்கு ஏற்ப அந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால் அண்மையில், சிங்கப்பூரில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் அவர் தமிழில் அறிவிப்பு செய்தார். அந்த ஆடியோவை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். ஆடியோவிற்கு கீழ், “விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்வது தம்முடைய நீண்ட கால எண்ணம், அதற்கு அனுமதி கொடுத்த விமானத்தின் கேப்டனுக்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து, சிங்கப்பூர் செய்தி நிறுவனமான மீடியாகார்ப்பின் தமிழ் செய்தி பிரிவுக்கு, சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் அளித்த விளக்கத்தில், ‘விமானி சரவணன் தமிழ் படைப்பாளராக அனுபவம் இருந்ததால், தமிழில் அறிவிக்கும் அவருடைய கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த தமிழ் அறிவிப்புக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் ஏற்பட்ட கடும் பனிபொழிவால் 60க்கும் மேற்பட்ட கார்கள் அடுத்தடுத்து ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டதில் 51 படுகாயமடைந்தனர் .
அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாகாணத்தில் டிசம்பர் மாதம் என்பதால் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் 22ம் தேதி, அங்கு உள்ள வில்லியம்ஸ்பேர்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் முன்னால் செல்லும் வாகனங்களை தெளிவாக அறிய முடியாமல் திக்குமுக்காடி போனார்கள். அதிக பனிமூட்டம் காரணமாக அந்த வழியே சென்ற 69 கார்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் சுமார் 51 பேர் படுகாயமடைந்தனர். எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை. இந்த விபத்தால் உடனடியாக நெடுஞ்சாலை மூடப்பட்டது. மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். சுமார் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள யார்க்கவுண்டி பகுதியில் இருக்கும் இன்டெர்-ஸ்டேட் 64வது நெடுஞ்சாலையில் இருந்து 80கிமீ தொலைவில் உள்ள பகுதியிலும் கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.