உலகம்

கோத்தபய ராஜபக்சே அதிரடி !!! இலங்கை – சீனா உடனான 99 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார்

Quick Share

கொழும்பு: சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு இலங்கையின் ஹம்பாந்தோடா துறைமுகத்தை 99 வருடம் குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தார்.

2017-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க்கே இலங்கையின் ஹம்பாந்தோடா துறைமுகம் சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு 99 வருடம் குத்தகைக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த துறைமுகத்தை சீனா போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக மாற்றலாம் என்னும் அச்சம் இருந்தது. மேலும் இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

சீனா தரப்பில் இந்த துறைமுகம் இந்தியா-ஐரோப்பிய கண்டத்தை இணைக்கும் பாலமாக இருக்கும் , இதனோடு வர்த்தகம், இலங்கையின் பொருளாதாரம் பெருகும் எனவும் விளக்கம் அளித்தது. இலங்கை தரப்பில் ஒருபோதும் ராணுவ தளம் அமைக்க விடமாட்டோம் என மறுத்தது. இலங்கை தேர்தலில் நன் வெற்றிபெற்றால் சீனா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என கோத்தபய ராஜபக்சே வாக்குறுதி கொடுத்தார். இப்போது அதிபரான முதல் வேலையாக தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராகும் முத்தையா முரளிதரன்? அழைப்பு விடுத்த இலங்கை அதிபர் க...

Quick Share

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கையின் ஆளுநராக வேண்டுமென இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் அழைப்பு.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று கோத்தபய ராஜபக்சே அதிபராக பதவியேற்றுள்ளார்.ஆறு புதிய ஆளுநர்கள் அதிபர் ராஜபக்சே முன்னிலையில் கடந்த 21ம் தேதி பதவியேற்றனர். ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரியாக உள்ள வடக்குமாகாண ஆளுநரை தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதாரணை வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் வடக்கு மாகாணம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் தமிழ் கிரிக்கெட் வீரரான முரளிதரனை ஆளுநராக்க வேண்டுமென ராஜபக்சே இந்த முடிவை எடுத்திப்பார் என தெரிகிறது.ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இலங்கை போரின்போது இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என ராஜபக்சேவிற்கு ஆதரவாக முத்தையா முரளிதரன் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த திங்கட்கிழமை இவர் கோத்தபயவை சந்தித்துள்ளார். இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இவர் ஆர்வம் காட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.ஏனெனில் இந்திய தமிழராகிய முத்தையா இலங்கை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு தமிழர்களிடத்தில் எதிர்ப்புகள் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“அமெரிக்காவை உலுக்கும் பனிப்பொழிவு” கடுமையாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து !!!

Quick Share

அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடைபெறும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு மக்கள் செல்வது வழக்கம் , இந்த ஆண்டு 5.5 கோடி பேர் , விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்க பட்ட நிலையில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவால் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது இது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலராடோ முதல் மிச்சிகன் ,மிசிசிப்பி வரை பனிப்பொழிவு உள்ளது.கொலராடோவில் 20 இன்ச் அளவுடன் அமெரிக்காவில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது . 500 விமானங்களில் பயண நேரங்கள் மற்றம் செய்ய பட்டுள்ளது சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. யோமிங் பகுதியில் 200 மையில் தூரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொலம்பியாவில் ஏற்பட்ட சூறாவளியால் அப்பகுதி மக்கள் ட்ரக்கில் பயணிக்கவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பனிப்பொழிவு கிழக்கு நோக்கி நகரும் போது நியூயார்க் நகரிலும் பாதிப்பு ஏற்படும், இதனால் நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கும் பாதிப்பு ஏற்படும். ஓரிக்கன் ,வடக்கு கலிபோர்னியா ஆகிய இடங்களில் கடுமையான பனிப்பொழிவும் , சூறாவளியும் ஏற்பட்டுள்ளது. இதனால் சான்பிரான்ஸிஸ்கோ, சான் ரபேல் , சர்ஜோஸ் போன்றஇடங்களுக்கு மழைபெய்யுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சொந்தமான 3 கடத்தப்பட்ட சிலையை இந்தியாவிற்கு திருப்பிக்கொடுக்க இந்தியா வரு...

Quick Share

இந்தியாவில் பழம்பெரும் பிரசித்தி பெற்ற சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டு சட்ட விரோதமாக விற்கப்படுகிறது. தற்போது இந்தியாவிற்கு சொந்தமான பழம்பெரும் சிலைகள் ஆஸ்திரேலியா வசம் உள்ளது. 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த 2 துவாரபாலகர்கள் சிலை, மேலும் 6 அல்லது 8 வது நூற்றாண்டை சேர்த்ததாக கூறப்படும் ஒரு நாகராஜா சிலை இப்போது ஆஸ்திரேலியா அரசிடம் உள்ளது. இந்த மூன்று சிலைகளை அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசொன் ஜனவரி மதம் இந்தியா கொண்டுவரஉள்ளர். சிலையை தன்னுடன் கொண்டுவந்து இந்திய பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு செய்தி வெளியிட்டது

லண்டனில் UBER-க்கு வந்த சோதனை! அடிச்சது OLA-க்கு லக்கு!

Quick Share

OLA நிறுவனத்திற்கு 10,000 ஓட்டுனர்கள் வாகனங்களுடன் தேவை என அறிவித்துள்ளது.

UBER நிறுவனம் லண்டனில் கார் சேவையை வழங்கி வருகிறது. சமீபகாலமாக UBER மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன, தற்போது UBER நிறுவனத்தில் பணியாற்றிய டிரைவர்கள் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 14 ஆயிரம் ட்ரிப்புகள் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து UBER நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் லண்டனில் CAB சேவை அதிகம் தேவைப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் பெங்களூரை தலைமை அலுவலகமாக கொண்ட OLA நிறுவனம் லண்டனில் CAB சேவையை தொடங்க உள்ளது. மேலும் OLA நிறுவனம் பர்மிங்காம் நகரில் CAB சேவை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பின் மூலம் பல ஓட்டுனர்கள் தங்களது வாகனத்துடன் OLA அலுவலகத்தின் முன் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நேருக்கு நேர் மோதிய ராணுவ ஹெலிகாப்டர்கள் 13 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு !!

Quick Share

ஆப்ரிக்காவில் உள்ள மாலியில் புர்கினோ பாசோ என்ற இடத்தில் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின . இந்த விபத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 13 ராணுவவீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆப்ரிக்க நாடான மாலியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் இவர்களை ஒழிக்கும் முயற்சியில் மாலிக்கு ஆதரவாக பிரான்ஸ் ராணுவம் 2013-ம் ஆண்டு முதல் அங்கு களம் இறங்கி தாக்குதல்கள் நடத்தி வருகிறது .உள்நாட்டு கலவரம் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மாலியில் 4000 ராணுவ வீரர்களை காவலுக்காக பிரான்ஸ் நாடு நிறுத்திவைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் புர்கினோ பாசோ மற்றும் நைஜோ எல்லைகளுக்கு அருகே 2 ஹெலிகாப்டர்களில் பயங்கரவாத குழுக்ககளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வானில் இரு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாடரில் பயணித்த உயர் அதிகாரி 5 பேர் உள்பட 13 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மணல் புயல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ வீரர்களுக்கு பிரான்ஸ் நாட்டு அதிபர் மெக்ரான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

வலியால் கதறும் சிறுவன்! அல்பேனியாவில் பயங்கர நிலநடுக்கம்! 6.4 ரிக்ட்டர் அளவு பதிவானது

Quick Share

அல்பேனியாவில் இன்று அந்நாட்டின் நேரப்படி அதிகாலை 3.54 மணியளவில் டூர்ஸ் என்னும் இடத்திலிருந்து 11 அருகே 6.4 ரிக்ட்டர் ஸ்கேல் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 30 வினாடிக்கு பெரும் அதிர்வு உணரப்பட்டது. பல வீடுகள், பள்ளி, அலுவலக கட்டிடங்கள் தரைமட்டம் ஆனது. கட்டிடங்களின் இடிபாடுகளில் பலர் கொண்டுள்ளனர். இதுவரை 6 பேர் இறந்துள்ளனர் சுமார் 325 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் போஸ்னியா, செர்பியா, காரோட்டியா, இத்தாலி, வட மசிடோனியா போன்ற நாடுகளில் தாக்கத்தை உண்டாக்கியது.

“முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சந்தேகம்...

Quick Share

நவாஸ் ஷெரிப் விமானத்தில் எறிய விதத்தை வைத்து அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையில் சந்தேகம் ஏற்படுத்துவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமராகிய நவாஸ் ஷெரிப் பனாமா ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிக்சைக்காக ஜாமீனில் வெளிவந்த அவரை சிகிச்சைக்காக லண்டன் செல்ல வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். அவர் லண்டன் செல்ல வேண்டுமானால் ரூ.700 கோடிக்கான உறுதிமொழி பாத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டுமென பிரதமர் இம்ரான் கான் அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து நவாஸ் ஷெரிப், லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை லண்டன் செல்ல அனுமதித்தது. இதனையடுத்து, கடந்த செவ்வாய் கிழமை அவர் ஆம்புலன்ஸ் விமானத்தில் லண்டன் புறப்பட்டார்.

இதுகுறித்து, பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான மியான்வாலியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் பொது அவர் கூறியதாவது , “நவாஸ் ஷெரிப்பிற்கு 15 விதமான நோய்கள் இருப்பதாகவும் ,அவர் எந்த நேரத்திலும் இறக்க கூடும் எனவும், மேலும் குறிப்பாக அவருக்கு இதயத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அவரது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் லண்டன் செல்வதற்க்காக விமானத்தில் ஏறும் பொது மிகவும் நன்றாக இருந்தார் இதை பார்க்கும் போது, எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.அவர் மருத்துவ பரிசோதனை அறிக்கையை மீண்டும் பார்த்தேன் அதில் அவருக்கு இதயத்தில் பிரச்சனை உள்ளது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவில்லை ,நீரிழிவுபதிப்பு உள்ளது” என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது என்றார்.

ஆஸ்திரேலியாவில் நிறை மாத கர்ப்பிணியை கொடூரமாக தாக்கிய கொடூரன் ! சிசிடிவி- ல் பதிவாகிய க...

Quick Share

ஆஸ்திரேலியா: சிட்னி நகரில் ஒரு உணவகத்தில் 38 வாரம் நிறைந்த கர்பிணி பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவம் நாடும் முழுவது பரபரப்பாக பேசப்படுகிறது. சம்பந்தம் இல்லாமல் ஒரு நபர், அருகில் பர்தா அணிந்து பேசிக்கொண்டிருந்த முஸ்லீம் கர்பிணி பெண்ணை திடீரென தாக்க தொடங்கினார். இதை கண்டதும் அருகிலிருந்த மக்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். சிசிடிவி- ல் பதிவாகிய காட்சிகள் வெளியானது.

மேலும் இந்த தாக்குதல் ஆஸ்திரேலியா மற்றும் உலகில் உள்ள முஸ்லீம் அமைப்புகளிடம் பெரும் கோபத்தை உருவாகியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.

அமெரிக்க கனவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் : ” ட்ரம்ப் எச்சரிக்கையால் 145...

Quick Share

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 145 இந்தியர்கள் அமெரிக்க அரசு தனி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு திரும்பச் செல்ல முடியாத ஆவணங்கள் அளிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர் .அவர்கள்  இன்று காலை டெல்லியை வந்தடைந்தனர் .

அமெரிக்காவிற்கு சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டுமென ஆசை பட்டு உரிய தகுதிகள் இல்லாமல் சிலர் சட்ட விரோத செயல்களை பின்பற்றுகின்றனர் .சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய மேக்ஸிகோ எல்லையை பலர் பயன்படுத்துகின்றனர்.மெக்ஸிகோ நாட்டின் வழியாக அமெரிக்காவிற்கு வருபவர்களை தடுக்க அமெரிக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. இதுபோன்று வருபவர்களை தடுக்காவிட்டால் மெக்ஸிகோ மீது கடும் வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார் . இதனால் மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 311 பேரை கடந்த 18 ம் தேதி  இந்தியவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஏற்கனவே கடந்த 23ம் தேதி அன்று 117 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் , இன்று 145 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் இவர்களில் வங்கதேசம் மற்றும் இலங்கையை சேர்ந்தவர்கள்  இருந்ததாகவும் ,வந்தவர்களில் பெரும்பாலானோர் 20முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  
சர்வதேச ஏஜெண்டுகள் மூலம் ரூ .10முதல் ரூ .15 லட்சம் வரை கொடுத்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடியேறியதாக நாடு கடத்தப்பட்டோர் தெரிவித்துள்ளனர்

11 ஆண்டுகளில் சுரண்டப்பட்ட பிரேசில் மழைக்காடுகளின் நிலை இன்று அழிவின் விளிம்பில்.

Quick Share

பிரேசிலில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ அதிபரான பிறகு சூழலியலில் அதிகமாக கவனம் செலுத்தியவர்.
அவர் பதவிக்கு வந்த உடனேயே வன கொள்கையை வேளாண் அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்து அமேசான் அழிக்கப்படுவதை தவிர்க்கும் தொடக்கப்புள்ளியை வைத்துள்ளார்.

உலகின் நுரையீரல் என போற்றப்படும் அமேசான் காடுகளை தேவைக்கேற்ப கணிசமான முறையில் உபயோகிக்கலாம் என்றார். இதனடிப்படையில் கடந்த 11 வருடத்தில் பிரேசில் நாட்டில் மழைக்காடுகலின் அழிவு உச்சத்தை எட்டியுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பிரேசில் நாட்டில் 9 மாகாணத்தில் நடைபெற்ற காட்டழிப்புகளின் பட்டியலும் இதில் அடங்கும்.

இந்த நிலை தொடர்ந்தாள் காடுகளின் அடர்த்தி குறைந்து காலநிலை மாற்றம், பருவ மழை குறைவு, சுற்று சூழல் பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். அது மட்டுமில்லாமல் 40,000 தாவர இனங்கள், 1,300 பறவையினங்கள், 25 லட்சம் பூச்சியினங்கள் அனைத்தின் அழிவிற்கும் நாமே காரணமாகிவிடுவோம்.

ஆண்களுக்கான கருத்தடை ஊசி கண்டுபிடிப்பு – உலகில் முதன்முறையாக இந்தியாவில்!!

Quick Share

உலகிலேயே முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசி போடும் மருத்துவ பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவால் கண்டுபிடிக்க பட்ட இந்த கருத்தடை ஊசி எந்தவித பக்கவிளைவும் இன்றி 13 ஆண்டுகள் பயன் தரவல்லது. இது அறுவைசிகிச்சை எனப்படும் வாசக்டமி முறைக்கு மாற்றாக கண்டுபிடிக்க பட்டுள்ளது மூன்று கட்டங்களாக சுமார் 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 97.3% வெற்றிகரமாக முடிவு கிடைத்துள்ளது. இந்த கருத்தடை ஊசி ஆண்களுக்கான பாதுகாப்பான முறை என தைரியமாக அழைக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

ஆண் கருத்தடை சாதனம் குறித்த ஆராய்ச்சியை அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது ஆனால் அது ஆரம்ப நிலையிலேயே உள்ளது . இதேபோன்று பிரிட்டனில் உருவாக்கிய சாதனத்தில் பக்க விளைவு ஏற்பட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website