உலகம்

இடிந்து வீழும்நிலையில் உள்ள பள்ளி !! குளிர் மழை பாராது திறந்த வெளியில் பாடம் படிக்கும...

Quick Share

பெரு நாட்டில் மழையால் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி, வெட்டவெளியில் கடும் குளிரில் பாடம் படிக்கும் மாணவர்கள்.

பெரு நாட்டில் சமீபத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள சில பள்ளிகள் வெகுவாக சேதமடைந்துள்ளன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தில் இருந்து வெளியேறி வகுப்பறையில் இருந்த நாற்காலி, மேசைகளை போன்ற பொருட்களை வெளியே கொண்டு வந்து, பள்ளிக்கு வெளியிலேயே போட்டு, மழை கடும் குளிர் ஆகியவற்றிற்கு நடுவே தங்களது படங்களை பயின்றுவருகிறார்கள்.

இலங்கை எதிர்கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாசா !! ஏகமனதாக ஐ.தே.க தீர்மானம்.

Quick Share

இலங்கையில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது இதில் கோத்தபய ராஜபக்சேவிற்கும், சஜித் பிரேமதாசாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் முடித்து வாக்கு எண்ணிக்கையின் போது சஜித் பிரேமதாசாவை விட அதிக வாக்குகள் பெற்று கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றார். இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவராக இருந்த சஜித் பிரேமதாசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக பதவியேற்றுக்கொண்டார். அவரது சகோதரரான மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் அண்மைக்காலமாக நீடித்துவந்த இழுபறிக்கு இன்று முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கையின் எதிர்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும், இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஐ.தே.கயின் தலைமைத்துவ பொறுப்புகளில் விக்ரம்சிங் நீடிக்கவுள்ளதாகவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இலங்கையில் வரும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

சுட்டெரிக்கும் சூரியனில் ஆய்வு !! விண்கலம் கொண்டுவந்த ஆச்சரிய தகவல்.. சூரிய காற்றா̷...

Quick Share

சூரியனை ஆய்வு செய்ய சென்ற விண்கலம் சூரிய காற்றை பற்றி புதிய தகவல்களை கொண்டுவந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவிற்கு பல நாடுகளும் பல ஆய்வுகளை மேற்கொண்டவண்ணம் உள்ளது. இருப்பினும் பூமியில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ள சூரியனை ,முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து கடத்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க சென்ற இந்த விண்கலம் சூரியனுக்கு 15 மில்லியன் மைல்( 24 மில்லயன் கி.மீ ) தொலைவில் சென்றுள்ளது இந்த விண்கலம் இறுதியில் சூரியனின் மேல்பரப்பில் இருந்து சுமார் 4 மில்லியன் மைல் ( 6 மில்லியன் கி.மீ ) தொலைவில் பயணிக்கும். இது முந்தய எந்த விண்கலத்தையும் விட 7 மடங்கு சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும்.

சூரியனின் வளிமண்டல மேலெடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்க்காக இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளதப்பட்டுள்ளதாகவும், இன்னும் 6 ஆண்டுகள் சூரியனுக்கு நெருக்கமாக பறந்து 24 மணிநேரமும் சூரியனை கண்காணிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் நெருக்கமாக சூரியனை படம் பிடித்து சோலார் புரோப் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் எடுக்க பட்ட புகைப்படங்கள் சூரியனில் இருந்து சுமார் 27.2 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்தே எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இந்த தூரத்தை விடவும் குறைவானது. பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலம் கண்டுபிடித்த தகவல்கள் குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறியதாவது, சூரியன் விண்வெளி வானிலை எவ்வாறு உருவாகிறது என்பது குறித்த புதிய விவரங்களை அளிக்கிறது, பூமியும் செயற்க்கைகோள்கள் மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றை தடுக்க கூடிய வன்முறை சூரிய காற்று குறித்து வானிலை ஆய்வாளர்கள் புரிதலை மாற்றியமைக்கிறது.

சூரியனை நெருங்க நெருங்க புதிய நிகழ்வுகளை, புதிய செயல்முறைகளை பார்ப்போம் என நிச்சயமாக நம்புகிறோம். நாங்கள் இதனை நிச்சயமாக செய்வோம் என கூறினார். மிக்சிகன் பல்கலைகழகத்தின் ஆய்வாளரும் பார்க்கர் ஆய்வின் சூரிய காற்றை உணரும் கருவியை உருவாக்கியவருமான ஜஸ்டின் காஷ்பர் கூறும் போது, விண்கலத்தை தழுவும் தனித்துவமான சக்திவாய்ந்த அலைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இது கடலில் உள்ள முரட்டு அலைகளை போன்றது. அவை மிகப்பெரிய அளவிலான ஆற்றலை கொண்டுள்ளன. இது கொரோனா மற்றும் சூரிய காற்று எவ்வாறு சூடாகிறது என்பதர்கான எங்கள் கோட்பாடுகளை வியக்கத்தகு முறையில் மாற்றும் என்று கூறினார்.

நாசாவின் விஞ்ஞானி நிக்கோலா கூறியதாவது, நாங்கள் கண்டறிக தகவல்கள் எதிர்பார்த்ததை உறுதிப்படுத்தியுள்ளன. எதிர்பாராதவையும் நிகழ்ந்துள்ளது. ஆய்வாளர் ஒருவரின் கூற்றுப்படி, ஆய்வில் உண்மையிலேயே பெரிய ஆச்சரியங்கள் ஒன்று ,சூரிய காற்றின் வேகம் திடீர் கூர்முனைகளை கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது, காந்தப்புலம் அதனை சுற்றி கொண்டது. இது சுவிட்சபேக்குகள் என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு ஆகும் என்று கூறினார்

போருக்கு தயாராகும் இரு சண்டை நாடுகள், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இர...

Quick Share

ஈரான் முக்கியமான தாக்குதலுக்கு திட்டங்களை வகுத்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஈரானை அமெரிக்கா மொத்தமாக உலக நாடுகளிடம் இருந்து தனித்து விட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்கா ஒரு வகையில் வெற்றிபெற்றுவிட்டது என்றும் கூறலாம்.முதலில் ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தடை செய்தது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காரணத்தால் அங்கு உள்நாட்டு போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆம் அங்கு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.

ஈரான் நாட்டில் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதமாக கடுமையாக போராடி வருகிறார்கள். ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி மீது அந்நாட்டு மக்கள் பல்வேறு விஷயங்களுக்காக கோபத்தில் இருக்கிறார்கள். அதில் முதல் விஷயம், அதிபர் ஹசன் ரவுஹானி ராணுவத்தின் மீது செலுத்தும் கவனத்தில் துளி கூட மக்கள் நலத்திட்டம் மீது செலுத்துவதில்லை.அங்கு நாளுக்கு நாள் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது, மக்கள் கடும் வறுமையில் உள்ளனர், என்று புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக சவுதி உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகளும், அமெரிக்காவும்தான் என்று ஈரான் நினைக்கிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில், ஈரான் விரைவில் முக்கியமான தாக்குதல்களை நடத்த வாய்ப்புள்ளது. ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. இதற்காக ஈரான் தீவிரமாக தயாராகி வருகிறது.இதற்காக ஈரான் தங்கள் படைகளை எல்லையில் குவித்து வருகிறது. நிறைய அளவில் அங்கு ஆயுதங்கள் இறக்கப்பட்டு வருவதாக எங்களுக்கு உறுதியான உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் ஈரான் ஏன் இப்படி செய்கிறது என்று முழுமையான விபரம் தெரியவில்லை. ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தி அருகேவும் படைகளை குவித்து வருகிறது.

சூடானில் பயங்கர தீ விபத்து: பணியாற்றிய 3 தமிழர்களின் நிலை என்ன? – பிரதமருக்கு தமி...

Quick Share

சூடானில் தீ விபத்தில் சிக்கிய 3 தமிழர்களின் நிலையை கண்டறிய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டுவந்த பீங்கான் தொழிற்சாலையில் வழக்கம் போல நேற்று தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்த அந்நாட்டு அரசின் விசாரணையில், சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்தை தடுக்க முடியாமல் போனது தெரிந்தது. இந்த தொழிற்சாலையில் மொத்தம் 50 இந்தியர்கள் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய தூதரகம் அளித்ததகவலின் படி ,சூடானில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்ததாகவும், தமிழகத்தை சேர்த்தவர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், சூடான் தீ விபத்தில் இந்தியர்கள் பலர் காயமடைத்ததாகவும் , பல தமிழர்களும் உயிரிழந்ததாகவும், காயமடைந்த இந்தியர்களுக்கு மருத்துவமனையில் சிகிக்சை நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக +249-921917471 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தார் .

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூடான் தொழிற்சாலையில் நடைபெற்ற தீ விபத்தில் காணாமல் போன 3 தமிழர்களின் நிலையை குறித்து கண்டறியவும், 3 தமிழர்களுக்கும் சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

”மின்னலை மிஞ்சும் வேகம்” விமானத்தின் வேகத்திற்கே போட்டி போடும் உலகின் மிக வ...

Quick Share

பிரான்ஸ்-ஐ தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் புகாட்டி உலகின் அதிவேகமான கார்களைத் தயாரிக்கிறது. இதில் புகாட்டி சிரான் என்ற கார் மணிக்கு 420 கிமீ வரை செல்ல கூடியது. அதன் தனித்தன்மையை நிலைநாட்ட இந்தக் கார்கள் குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுகிறது. புகாட்டி சிரான் மாடல் மொத்தமாகவே வெறும் 500 கார்கள் மட்டுமே தயாரிக்கப் படும், இந்தக் காரின் விலை சுமார் 2.4 மில்லியன் யூரோ. இன்றளவில் உலகின் மிக வேகமான காரை தயாரிப்பதில் புகாட்டி தான் முதல் இடம்.

இதை நிறுவியவர் எட்டிரோ புகாட்டி (Ettore Bugatti) ஆவார். மொத்தமாகவே புகாட்டி-இல் மூன்றே மாடல் கார்கள் தான் அறிமுகம் செய்து உள்ளனர். ஆனால் இந்தக் கார்களின் அருமையான தரம் மற்றும் அதிகமான விலை காரணமாகப் புகாட்டி-இன் செல்வாக்கு, லாபம் மிக அதிகமாகவே உள்ளது. இந்தக் கார் தயாரிப்பு நிறுவனத்தில் வெறும் 300 நபர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் பல பயனுள்ள தகவல்களை பெற ( தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் ) Tamil express news படிங்க .

20 டன் திமிங்கலத்தின் வயிற்றில் 100 கிலோ குப்பை ! ஸ்காட்லாந்தில் இறந்து கரை ஒதுங்கியது

Quick Share

ஸ்காட்லாந்தில் உள்ள ஹாரிஸ் கடற்கரை பகுதியில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று ஒரு இளம் திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. சுமார் 20 டன் எடையுள்ள இந்த திமிங்கலத்தை ஸ்காட்லாந்து கடல் வள ஆராய்ச்சி துறையினர் மேற்கொண்ட பரிசோதனையில் சுமார் 100 கிலோ எடையுள்ள குப்பை அதன் வயிற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடலில் உள்ள குப்பைகளை திமிங்கலம் தின்றதால் அதன் வயிற்றில் செரிமான கோளாறு ஏற்பட்டு இறந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த 20 டன் எடையுள்ள திமிங்கலத்தை ஹாரிஸ் கடற்கரையில் குழி தோண்டி புதைத்தனர். இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகம் ஏற்படுவதால் கடலில் குப்பைகளை கொட்ட பல கடல் உயிரினின பாதுகாப்பு அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

”கிறிஸ்துமஸ் பெருவிழா” பல கோடி டாலர்களில் பிரமாண்டமாக தயாராகும் வெள்ளை மாளி...

Quick Share

கிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக், தடபுடல் விருந்துதான். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை “கிறிஸ்ட் மாஸ்” என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது.

இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன.

ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர். எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமெரிக்க வெள்ள மாளிகை தயாராகி வருகிறது. வெள்ளை மாளிகை பாரம்பரிய முறையில் வண்ண விளக்குகள், அழகிய மலர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், மூன்றாவது ஆண்டாக வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில், அலங்கரிக்கப்பட்ட வெள்ளைமாளிகையில் மெலானியா டிரம்ப் நடந்து வருவது போன்ற வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

காப்- 25 மாநாட்டிற்கு எதிர்ப்பு !! ஸ்பெயினில் 100க்கு மேற்பட்டோர் போராட்டம் !!!

Quick Share

ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட் நகரில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை  எடுக்கக்கோரி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

1990 களில் ஐ.நா புவிவெப்பமடைவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை பற்றி எச்சரித்தது . புவிவெப்பமயமாவதால் ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் , இதனால் வெள்ளம் போன்ற இயற்க்கை பேரிடர்கள் வரும் இது பற்றி விளக்கியது ஐ.நா . இதனை கேட்டு விழித்துக்கொண்ட உலக நாடுகள் உலக வெப்பமயமாவதை தடுக்க திட்டங்களை வகுக்க முடிவெடுத்தன. இதனால் 1994ம் ஆண்டு ஐ.நாவின் சர்வதேச சுற்றுசூழல் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது .1995 ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இந்த சுற்று சூழல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உலக நாடுகள் மாநாடு ஒன்றை நடத்திவந்தன . இதற்கு காப் மாநாடு என பெயர்.  உலகளாவிய வெப்பமயமாதலை தடுத்து 1.5 டிகிரி செல்சியக்கு குறைக்கும் வழிமுறைகளை  இந்த மாநாட்டில் முடிவெடுப்பார்கள் ஆனால் இன்றுவரை அதற்கான திட்டங்கள் வகுக்க உலக நாடுகளிடையே ஒற்றுமையில்லாத நிலையுள்ளது.

இதனை தொடர்ந்து சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு காப் -25 இன்று  நடைபெறுகிறது  .இதற்கு எதிராக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காப் -25 மாநாடு நடக்கும் இடத்தில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இவர்கள் அமேரிக்கா ,உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக கோஷமிட்டனர் .  

“அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவன்” குற்றவாளி போலீசில் சரண்!!

Quick Share

அமெரிக்காவில் படித்து வந்த கர்நாடக மாணவன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சுட்டுக்கொன்ற கொலையாளி போலீசாரிடம் சரணடைந்துள்ளார் .

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள குவேம்பு நகரை சேர்ந்தவர் அபிஷேக் சுதேஷ் பட் இவர் மைசூரில் என்ஜினியர் படித்துவிட்டு  தனது மேல்படிப்பிற்க்காக அமெரிக்கா சென்று அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பல்கலைகழகத்தில் எம்.ஏ கம்பியூட்டர் சயின்ஸ் படித்து  வந்துள்ளார் .மேலும் பகுதி நேரமாக அங்குள்ள உணவு விடுதியில் பணியாற்றி வந்துள்ளார் . வழக்கம் போல நவம்பர் 28ம் தேதியும்  உணவகத்தில் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போது மார்ப நபர் அபிஷேக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் . இதனை அறிந்த பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் .

சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவந்தனர் .இந்நிலையில் அபிஷேக்கை சுட்டு கொன்றதாக கூறி எரிக் ட்யூனர் என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார் .அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

ஜேம்ஸ் பாண்ட் “நோ டைம் டு டை” படத்தின் ட்ரைலர் !

Quick Share

உலகெங்கும் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறாரகள். தற்போதிய ஜேம்ஸ் பாண்ட், டேனியல் கிரேக் நேர்த்தியான ஆக்ஷன் நடிப்பில் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அடுத்த சீரிஸ்ஆக “நோ டைம் டு டை” என்ற தலைப்பில் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திலும் ஆக்ஷன் கட்சிகளுக்கு பஞ்சம் இல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. “நோ டைம் டு டை” படத்தின் ட்ரைலர் புதன்கிழமை வெளியாகும் என டீசரில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/007/status/1201310009553850368

ஜேம்ஸ் பாண்டின் பிரத்யேக கார் என கருதப்படும் ஆஸ்டன் மார்ட்டின் கார் இடம்பெறும் ஸ்டண்ட் காட்சிகள் பட்டையை கிளப்புகின்றன. மேலும் பிரிட்ஜ்ல் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியும் டீசரில் இடம்பெற்றுள்ளது. இந்த பைக் ஸ்டண்ட் கட்சி படத்தின் முக்கிய ஹயிலைட் என படக்குழு கூறியுள்ளது.

“நோ டைம் டு டை” படத்தை ஏப்ரல் மதம் 2020-ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தில் திடீர் துப்பாக்கி சூடு 11 பேர் படுகாயம் –...

Quick Share

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் நியூ ஓர்லியன்ஸ் பிரெஞ்ச் குவார்ட்டர் பகுதியில் உள்ள கால்வாய் தெருவில் அமேரிக்கா நேரப்படி நேற்று அதிகாலையில் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். எதிர்பாராத விதமாக நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டால் பரிதாபமாக அப்பாவி மக்கள் 11 படுகாயமடைந்துள்ளனர். மேலும் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




You cannot copy content of this Website