அமெரிக்க கனவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் : ” ட்ரம்ப் எச்சரிக்கையால் 145...
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 145 இந்தியர்கள் அமெரிக்க அரசு தனி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு திரும்பச் செல்ல முடியாத ஆவணங்கள் அளிக்கப்பட்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர் .அவர்கள் இன்று காலை டெல்லியை வந்தடைந்தனர் .
அமெரிக்காவிற்கு சென்று கைநிறைய
சம்பாதிக்க வேண்டுமென ஆசை பட்டு உரிய தகுதிகள் இல்லாமல் சிலர் சட்ட விரோத
செயல்களை பின்பற்றுகின்றனர் .சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய மேக்ஸிகோ
எல்லையை பலர் பயன்படுத்துகின்றனர்.மெக்ஸிகோ நாட்டின் வழியாக
அமெரிக்காவிற்கு வருபவர்களை தடுக்க அமெரிக்க கடும் நடவடிக்கையை
மேற்கொண்டுவருகிறது. இதுபோன்று வருபவர்களை தடுக்காவிட்டால் மெக்ஸிகோ மீது
கடும் வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார் .
இதனால் மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 311 பேரை கடந்த 18 ம் தேதி
இந்தியவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஏற்கனவே கடந்த 23ம் தேதி அன்று
117 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் ,
இன்று 145 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் இவர்களில் வங்கதேசம் மற்றும்
இலங்கையை சேர்ந்தவர்கள் இருந்ததாகவும் ,வந்தவர்களில் பெரும்பாலானோர்
20முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச
ஏஜெண்டுகள் மூலம் ரூ .10முதல் ரூ .15 லட்சம் வரை கொடுத்து சட்டவிரோதமாக
அமெரிக்காவிற்கு குடியேறியதாக நாடு கடத்தப்பட்டோர் தெரிவித்துள்ளனர்