CSKக்கு எதிராக சதம் விளாசிய கில், சுதர்சன்! மைதானத்தை அதிர வைத்த ஆட்டம் (வீடியோ)

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 232 ஓட்டங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ருத்ர தாண்டவம்
அகமதாபாத் மைதானத்தில் CSK மற்றும் Gujarat Titans அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர். சென்னை அணி பந்துவீச்சாளர்களின் ஓவர்களை தெறிக்கவிட்ட இருவரும் அதிரடி சதம் விளாசினர்.
210 பார்ட்னர்ஷிப்
இவர்களின் பார்ட்னர்ஷிப் 210 ஓட்டங்களை அணிக்கு சேர்த்தது. சாய் சுதர்சன் 51 பந்துகளில் 7 சிக்ஸர், 5 பவுண்டரிகள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து தேஷ் பாண்டேவின் அதே ஓவரில் சுப்மன் கில்லும் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 55 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் வந்த மில்லர் 11 பந்தில் 16 ஓட்டங்கள் எடுக்க, குஜராத் டைட்டன்ஸ் அணி 231 ஓட்டங்கள் சேர்த்தது. தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.