KFC-யை வம்புக்கு இழுக்கும் வனிதா! கோழியா? இல்ல காக்காவா?..

March 20, 2023 at 4:11 pm
pc

சினிமா, சின்னத்திரை, யூடியூப் என கலக்கிக் கொண்டிருக்கும் வத்திக்குச்சி வனிதா இப்போது பிரபல பிராண்ட் சிக்கன் நிறுவனமான KFC-யுடன் மல்லுக்கு நிற்கிறார். சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் வனிதா தற்போது KFC சிக்கன் குறித்து போட்டுள்ள பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள KFC-க்கு சாப்பிட சென்றபோது அங்கு தரப்பட்ட சிக்கன் மிகவும் மோசமாக இருந்ததாக வனிதா புகார் அளித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் நுழைந்த வனிதா, ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார். அதிலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமானார். பிறகு கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பினார்.

அந்த நிகழ்ச்சியில் கொளுத்தி போடும் வேலையை சரியாக செய்யும் கில்லாடி. பின் 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்தார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. கடைசியில் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் தற்போது KFC-யில் ஆசை ஆசையாய் சாப்பிட சென்று அப்செட் ஆனதாக பதிவிட்டுள்ளார்.

இவர் ஹைதராபாத்தில் KFC-க்கு சாப்பிட சென்றபோது, அங்கு கொடுத்த சிக்கனை பார்க்கும்போது மிகவும் சிறியதாக இருந்ததால் இது கோழியா? இல்ல காக்காவா? என கேள்வி எழுப்பி உள்ளார். அதுமட்டுமல்ல அந்த சிக்கனை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதிருப்தி அடைந்துள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களுடன் மல்லு கட்டிய வனிதா, கடைசியில் பிரபல ஃபுட் பிராண்ட் நிறுவனமான KFC-யை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

இவரைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருந்த KFC நிறுவனமும் வாயாடி கிட்ட வம்பு எதற்கு என்று சரணடைந்து விட்டது. ‘உங்களுக்கு இப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததற்காக வருந்துகிறோம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதன் பிறகு வனிதாவும் இதைப்பற்றி பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். ஒருவேளை KFC மட்டும் அப்படி வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், நிச்சயம் இதை வைத்தே பல மாதம் அவருடைய யூடியூப் பக்கத்தில் மென்று தின்று இருப்பார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website