KGF நடிகரின் அடுத்த படத்திற்கான சம்பளம் இத்தனை கோடிகளா?

October 26, 2023 at 9:29 pm
pc

நடிகர் யாஷ் தனது அடுத்து வரப்போகும் படத்தில் வில்லனாக நடிப்பதற்காக ரூ. 150 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யாஷ் 

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் யாஷ். இவர் கேஜிஎஃப் படம் மூலம் உலக அளவில் பிரபலமானார். அந்தப் படத்தில் நடிப்பிலும், ஆக்‌ஷனிலும் பட்டயகிளப்பியுள்ளார்.

இதையடுத்து நடிகர் யாஷ் பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராவணனாக கன்னட நடிகர் யாஷ் நடிக்க இருக்கிறார்.

கோடிகளில் சம்பளம்

படத்தில் ராவணனாக நடிக்க நடிகர் யாஷ் சம்பளமாக ரூ.150 கோடி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பளத்தை தருவதற்கு படக்குழுவினரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் யாஷ் கால்ஷீட் எத்தனை நாள்கள் தேவைப்படுகிது என்பதை பொறுத்து அவரது சம்பளத்திலும் மாற்றம் இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website