T20 உலக கோப்பை 2024: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
T20 உலக கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மழை குறுக்கீடு
T20 உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது.
பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் இந்திய அணி களமிறங்கியது, தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.
இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக விராட் கோலி 9 ஓட்டங்களிலும், ரிஷப் பண்ட் 4 ஓட்டங்களிலும் வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.
8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களை இந்திய அணி குவித்து இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி சற்று நிறுத்தி வைக்கப்பட்டது.
ரோகித் சர்மா பொறுப்பான ஆட்டம்
மீண்டும் போட்டி தொடங்கிய போது களத்தில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஓட்டங்களை சீராக உயர்த்தினர்.
கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்து இருந்த போது அடில் ரஷித் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்து இருந்த போது ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து பின்னர் வந்த பாண்டியா அதிரடியாக 13 பந்துகளில், 23 ஓட்டமும், ஜடேஜா 9 பந்தில் 17 ஓட்டமும் சேர்த்து இந்திய அணியின் ஓட்டத்தை அதிகரித்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் குவித்துள்ளது.
172 ஓட்டங்கள் இங்கிலாந்து அணி குவித்தால் 2024 T20 உலக கோப்பையின் இறுதிப் போட்டி இங்கிலாந்து அணி தகுதி பெறும்.
அசத்திய இந்திய பந்துவீச்சாளர்
இதனை தொடர்ந்து 172 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் சால்ட் முதன்மை ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
Bairstow is gone for a duck! #AxarPatel‘s classic skidder sends the dangerous #JonnyBairstow to the pavilion 🔥#SemiFinal2 👉 #INDvsENG | LIVE NOW | #T20WorldCupOnStar (only available in India) pic.twitter.com/YbRq3qf5bl— Star Sports (@StarSportsIndia) June 27, 2024
கேப்டன் ஜோஸ் பட்லர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி, 15 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 23 ஓட்டங்கள் குவித்தார்.
ஆனால் அக்சர் படேல் வீசிய 4 ஓவரின் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சால்ட் பும்ரா வீசிய 4 ஓவர் 4வது பந்தில் வெறும் 5 ஓட்டங்கள் சேர்த்து இருந்த போது போல்ட் ஆகி வெளியேறினார்.
பின்னர் வந்த மொயின் அலி(8) ஜானி பேர்ஸ்டோவ்(0), சாம் கரன்(2), லியாம் லிவிங்ஸ்டன்(11) என அனைவரும் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து இங்கிலாந்து ரசிகர்களை சோகத்தில் தள்ளினர்.
அதிகபட்சமாக ஹரி ப்ருக் மட்டும் (25) ஓட்டங்கள் குவித்து குல்தீப் பந்தில் அவுட்டானார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்கள் மட்டுமே குவித்து அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது
அதே சமயம் இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் T20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. .