சினிமா

நடிகையாகும் ஆசையில் பொறியியல் படிப்பை கைவிட்டவர்… இன்று கூகிள் நிறுவனத்தில் முக்க...

Quick Share

ஒரே ஆண்டில் 5 திரைப்படங்கள் உட்பட, மொத்தம் 12 திரைப்படங்களும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்கலும் நடித்தவர் இன்று கூகிள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் அமர்ந்துள்ளார்.

நடிகையாகும் ஆசையில்

மகாராஷ்டிரா மாகாணத்தில் பிறந்த முன்னாள் நடிகை Mayoori Kango என்பவரே, IIT Kanpur-ல் பொறியியல் படிப்பிற்கான வாய்ப்பு அமைந்தும் நடிகையாகும் ஆசையில், அதை உதறியவர்.

1995ல் நஸீம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான மயூரி காங்கோ, அதன் பின்னர் மொத்தம் 12 திரைப்படங்களில் முதன்மையான வேடங்களில் நடித்துள்ளார். ஒரே ஆண்டில் மட்டும் அவர் நடித்த 5 திரைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் ஆதரவையும் பெற்றது. 

ஆனால் புகழுடன் இருக்கும் போதே 2003ல் காங்கோ துணிச்சலான முடிவொன்றை எடுத்தார். திரைத்துறையில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், தொடர்ந்து Aditya Dhillon என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

முதன்மையான பொறுப்பில்

அதன் பின்னர் கணவருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அமெரிக்காவில் வைத்தே பிரபலமான பருச் கல்லூரியில் மார்க்கெட்டிங் மற்றும் நிதித்துறையில் எம்பிஏ பட்டம் பெற்றார். 

2007ல் 360i என்ற நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தார். ஆண்டுகள் செல்ல, அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் மீடியாவில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். Resolution Media, Digitas, மற்றும் Zenith ஆகிய நிறுவனங்களிலும் முதன்மையான பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். 

2012 முதல் Zenith நிறுவனத்தில் பணியாற்றியுள்ள அவர், 2019ல் கூகிள் இந்தியா நிறுவனத்தில் முதன்மையான பொறுப்பில் இணைந்தார். வாழ்க்கையில் புதிய பாதையை துணிவுடன் தெரிவு செய்யும் எவருக்கும் மயூரியின் கதை உத்வேகம் அளிக்கும் என்பது உறுதி.

30 வயதை கடந்த ஆண்களா? – மோசமான பழக்கங்களால் வரும் 5 நோய்கள்!

Quick Share

உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஆரோக்கியத்தில் பெண்களை விட ஆண்கள் கவனம் செலுத்துவது குறைவாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக திருமணம் முடிந்து 30 வயதை கடந்த ஆண்கள் பணம் சம்பாதிப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். இவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் அதிகமான பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கிறார்கள்.

இப்படியான ஆண்கள் அதிகமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கவும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழவும் வழிவகுக்கும். அத்துடன் ஆண்கள் தங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரை நாடாமல் இருந்தால் அவர்களின் மருத்துவ பிரச்சினை நாளடைவில் அதிகமாகலாம்.

அந்த வகையில், 30 வயதை கடந்த ஆண்கள் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

1. 30 வயதை கடந்த ஆண்கள் சிறுநீர் கழிப்பதில் சிரமம் அனுபவிப்பார்கள். அவர்களின் சிறுநீரில் நிறம் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இப்படியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்தவரை நாடுவது சிறந்தது.

2. சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது சிறுநீர்ப்பை தொற்று, சிறுநீரக பாதை தொற்று, சர்க்கரை நோய் போன்றவற்றின் ஆரம்ப அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

3. நெஞ்சு பகுதியில் அசௌகரியம் ஏற்படும். இன்னும் சிலருக்கு இரவு வேளைகளில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

4. இதயம் சார்ந்த பிரச்சனைகள் வரலாம். அதிலும் குறிப்பாக நெஞ்சு பகுதி மற்றும் தோற்பட்டை பகுதியில் கூர்மையான வலியை ஏற்படலாம். இது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் உரிய மருத்துவரை பார்ப்பது சிறந்தது.

5. ஆண்களுக்கு அவர்களின் அந்தரங்க பகுதியில் பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை வெளியில் கூறுவதற்கு கூச்சம் கொண்டு அவர்கள் வெளியில் கூறாமல் இருக்கலாம். உதாரணமாக பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றி கட்டிகள் இருப்பதை உணர்ந்தால், அது புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே எந்த வயதுடைய ஆண்களும் இந்த விஷயத்தில் அசால்ட்டாக இருப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

6. வயது அதிகரிக்கும் போது ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் விறைப்புத்தன்மை கோளாறு. இது போன்று விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கும் ஆண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது குறைவாக இருக்கும். இது காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பு, நரம்பியல் கோளாறுகள், கட்டுப்பாடற்ற அல்லது கடுமையான சர்க்கரை நோய் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இது குடிப்பழக்கம் அல்லது போதைப் பழக்கம் போன்ற பழக்கங்களினால் ஏற்படலாம்.

7. சிலரின் உடலில் போதுமான நீர் இருக்காது. இதனால் ஒரு நாளைக்கு அதிகமாக தாகம் ஏற்படலாம். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் நீரை தவறாமல் அருந்த வேண்டும். இவற்றை தவிர்த்து அதிகமான தாகம் இருந்தால் அது ஹைப்பர் கிளைசீமியாவின் எச்சரிக்கையாக இருக்கலாம்.

சமந்தா, தமன்னா, ஸ்ரீலீலா வரிசையில் தற்போது நயன்தாரா!

Quick Share

முன்னணி நடிகைகள் மற்றும் சென்சேஷனலான நடிகைகள் சிறப்பு பாடலுக்கு நடனமாடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். புஷ்பா 1 படத்தில் சமந்தாவின் சிறப்பு நடனம் பரவலாக பேசப்பட்டது. அதே போல் ஜெயிலர் படத்தில் தமன்னா, சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா என இவர்களின் நடனம் வைரலானது.

இந்த நிலையில், நடிகை நயன்தாராவும் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடமாடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் ஹாரர் கதைக்களத்தில் உருவாகி வரும் படம் ராஜாசாப். இப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு பிரபாஸ் உடன் இணைந்து நயன்தாரா நடமாடவிருக்கிறாராம்.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. பிரபாஸ் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து யோகி எனும் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்!

Quick Share

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கோவாவில் ஹிந்து முறைப்படி திருமணம் அன்று நடைபெற்றது. அதில் விஜய், த்ரிஷா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துகொண்டனர். புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.மணமகன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தற்போது கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமணம் இன்று சர்ச்சில் நடைபெற்று இருக்கிறது.

புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்!

Quick Share

உலக அளவில் பிரபலமான தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைன் அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 73 வயதான அவர் அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற வந்த நிலையில் தற்போது உயிரிழந்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜாகீர் ஹுசைன் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். அவர் தபேலா வாசிக்கும் பழைய வீடியோக்களை பகிர்ந்து பலரும் அவரது திறமையை பற்றி வியந்து பேசி வருகின்றனர்.

கோயில் கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றம்!

Quick Share

உலகளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. 45 ஆண்டுகளுக்கும் மேலாக இசையில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். இவருடைய இசையில் தற்போது உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கருவறைக்கு முன் இருக்கும் அர்த்த மண்டபத்தில் அவர் நுழைந்தபோது, அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதனால் அந்த மண்டபத்தின் பாடியருகே நின்று கொண்டே அவர் கோயில் மரியாதையை பெற்றுக்கொண்டுள்ளார். தீவிர கடவுள் பக்தர், உலகளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இசைஞானியை இப்படி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுனனுக்காக நான் அழவில்லை.. சமந்தா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

Quick Share

நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், அவரை அவரது மனைவி கட்டி அணைத்து கண்ணீர் விட்ட வீடியோவை நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், “நான் அழவில்லை” என கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா2’ திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை பார்க்க ரேவதி என்ற பெண் தியேட்டருக்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது திடீரென அல்லு அர்ஜுன் வந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதன் பின், தெலுங்கானா ஐகோர்ட் உத்தரவின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனது வீட்டிற்கு சென்றபோது, வாசலில் வந்து அவரை வரவேற்ற அவரது மனைவி, கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். அவருடைய குழந்தைகளும் அவர் அருகில் இருந்து அவரை அணைத்து மகிழ்ந்தனர்.

இந்த குறித்த வீடியோவை நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “நான் அழவில்லை” என்று குறிப்பிட்டாலும், ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் எமோஜிகளை இணைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக வைரல் ஆகி வருகிறது.

நேற்றே ஜாமீன் கிடைத்தும் இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன்.. என்ன காரணம்?

Quick Share

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 14 நாட்களுக்கு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அவருக்கு நேற்று மாலை ஜாமீன் கிடைத்தும், இரவும் முழுவதும் அவர் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அன்று, அல்லு அர்ஜுன் ஐதராபாத் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான வழக்கில் நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து, உடனடியாக அவரை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது தரப்பில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் கொடுத்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதனால் நேற்று இரவு 8 மணியளவில் அல்லு அர்ஜுன் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறை அதிகாரிகளுக்கு முறையான ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காததால், அவரை உடனே வெளியே விட அதிகாரிகள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு..லைக்ஸ் வாரி குவித்த நடிகை!!

Quick Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த நடிகை தனக்கு குழந்தை பிறந்ததை உறுதிப்படுத்தி, குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ’கபாலி’ படத்திற்கு முன்பே, அவர் பிரகாஷ்ராஜ் நடித்த ’தோனி’ கார்த்தி நடித்த ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ராதிகா ஆப்தே கடந்த சில ஆண்டுகளாக முழுக்க முழுக்க ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், ஒரு சில ஆங்கில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் பெனடிக் டைலரை காதலிப்பதாக கூறிய ராதிகா ஆப்தே, அவரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததாக கூறியுள்ள ராதிகா ஆப்தே, குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு சொந்தமான ஓட்டல்: விலை பேசிய விக்னேஷ் சிவன்..அதிர்ச்சில் அமைச்சர்!!

Quick Share

புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த ஓட்டலை திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமாகிய விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதை கேட்டு ஆடிப்போன புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், இது அரசு சொத்து என்றார். அதை ஒப்பந்த அடிப்படையிலும் தர முடியாது என்று மறுத்தார்.

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் பிரபல நடிகையான நயன்தாராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், படங்கள் தயாரிப்பது உள்பட திரை பணிகளை தாண்டி, வேறு பிசினஸ்களையும் செய்து வருகிறார்கள். நயன்தாரா அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஓட்டல் பிசினஸ்களிலும் அடியெடுத்து வைக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று இரவு 7 மணிக்கு சொகுசு காரில் புதுச்சேரிக்கு வருகை தந்தார். நேராக புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்ற விக்னேஷ் சிவன், புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து ஓட்டல் தொழில் ஆரம்பிப்பது தொடர்பாக பேசினாராம்.

அப்போது விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ‘சீகல்ஸ்’ ஓட்டலை விலைக்கு (அரசுக்கு சொந்தமான ) கிடைக்குமா என்று பேசினார். இதனை கேட்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் ஒரு நிமிடம் ஆடிப்போனார். அதன்பின்னர் இயல்பாக மாறிய அமைச்சர், விக்னேஷ்… அது அரசு சொத்து என்று கூறினாராம். உடனே இயக்குனர் விக்னேஷ் சிவன், சீகல்ஸ் ஓட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா? என கேட்டாராம்.

அதற்கு அமைச்சர் லட்சுமி நாராயணன், ‘புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகிறார். எனவே அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது’ என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் பேசிய விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை பகுதிகள் தனியார் வசம் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றாவது கிடைக்குமா? என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, அமைச்சர் பதில் அளிக்கையில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகள் கடந்த 2017-ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என்று கூறினாராம். அப்போது பேசிய விக்னேஷ் சிவன், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று கேட்டாராம். அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறும் போது, ‘புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுதுபோக்கு மையம் ஒன்றை கட்டி வைத்திருக்கிறோம். அங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க இயலும். அதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துடன், ஜி.எஸ்.டி. சேர்த்து செலுத்தினாலே போதும். நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம் என்று பதில் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். புதுச்சேரியில் அரசு ஓட்டலை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டது பரபரப்பாக பேசப்படுகிறது. இதனிடையே என்ன நடந்தது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் திரையுலகில் உள்ளவர்கள்.

நானும் எனது மனைவியும் பிரிகிறோம்: 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெற்ற சீனு ராமசாமி

Quick Share

நானும் எனது மனைவியும் பிரிகிறோம் என 17 வருட திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2007 ஆம் ஆண்டு “கூடல் நகர்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீனு ராமசாமி, அதன் பிறகு “தென்மேற்கு பருவக்காற்று”, “நீர் பறவை”, “இடம் பொருள் ஏவல்”, “தர்மதுரை”, “கண்ணான கண்ணே”, “மாமனிதன்”, “கோழிப்பண்ணை செல்லத்துரை” போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், சீனு ராமசாமி தனது மனைவி தர்ஷனா என்பவரை பிரிவதாக தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

அன்பானவர்களுக்கு வணக்கம்
நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடை பெறுகிறோம்.

இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.

இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.

ரூ.1000 கோடியை நெருங்கும் ‘புஷ்பா 2’..

Quick Share

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படும் நிலையில், இந்த படம் தங்கள் ’பாகுபலி 2’ ‘டங்கல்’ சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. இந்த படம் முதல் நாளே கிட்டத்தட்ட 294 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் டிசம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை நான்கு நாட்களில் மட்டும் 829 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், 5 ஆம் நாள் வசூலையும் சேர்த்தால் 900 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று அல்லது நாளைக்குள் ரூபாய் 1000 கோடியை நெருங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2024 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது.

இந்திய திரை உலகை பொருத்தவரை, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அமீர்கான் நடித்த ’டங்கல்’ திரைப்படம் 2000 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதேபோல், எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி 2’ திரைப்படம் 1810 கோடி ரூபாய் வசூல் செய்தது.இந்த இரண்டு சாதனைகளையும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் வசூல் மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.




You cannot copy content of this Website