சினிமா

பிக்பாஸ் வீட்டில் கதறி துடித்த ஸ்ருதிகா- வெளியிலிருந்து பதறும் ரசிகர்கள்-நடந்தது என்ன?

Quick Share

பிக்பாஸ் வீட்டில் கதறி துடித்த ஸ்ருதிகாவின் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

பிக்பாஸ் 18

உலகம் முழுவதும் மிக பிரபலமாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. 100 நாட்கள் செல்லக் கூடிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருந்து டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும்.இதிலிருந்து ஒருவரை 100 நாளாவது மக்கள் வாக்குக்கள் மூலம் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்படுவார். அவருக்கு பரிசு தொகையும் பணமும் வழங்கப்படும்.

அந்த வகையில், இந்தி பிக்பாஸ் வீட்டிற்கு இந்த முறை தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டுள்ளார்.

இவர், பழம்பெரும் மறைந்த பிரபல நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியாவார். இவர் கோலிவுட் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். பின்னர், ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு, அதன் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

கதறியழும் ஸ்ருதிகா

இந்த நிலையில், இந்தி ரசிகர்களால் ஆரம்பமாக காலங்களில் விமர்சிக்கப்பட்ட ஸ்ருதிகா தற்போது நன்றாக விளையாடி வருகிறார். இவருக்கு வரவர ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேசெல்கிறது.

இப்படியொரு சமயத்தில், பிக்பாஸ் 18 துவங்கியதில் இருந்து, அந்த வீட்டிற்குள் ஸ்ருதிகாவின் நெருங்கிய தோழியாக இருப்பவர் நடிகை Chum Darang என்பவர் தானாம்.

இருவரும் நெருக்கமான தோழிகளாக வீட்டிற்குள் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணம் மனமுடைந்து ஸ்ருதிகாக கதறி அழுதுள்ளார். 

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்றும் கூற ஆரம்பித்து விட்டார்.இதனை தொடர்ந்து ஸ்ருதிகா கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு எதிராக தனுஷ் எடுத்த அதிரடி- வழக்கு பதிவு செய்வது உறுதி

Quick Share

நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு எதிராக தனுஷ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா

நடிகை நயன்தாராவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த படத்தில் வரும் சில காட்சிகளையும், பாடல்கள் மற்றும் இசை உள்ளிட்டவைகளை ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.தனுஷ் அதற்கு அனுமதி தராமல் இரண்டு வருடங்கள் தாமதமாக்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது அந்த 3 செக்கன் வீடியோவிற்கு தனுஷ் தரப்பிலிருந்து 10 கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு தனுஷின் உண்மையான முகம் இதுதான் என்று ஒரு கடிதம் ஒன்றை நயன்தாரா கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். அந்த கடிதத்திற்கு பதில் கொடுக்கும் விதமாக தனுஷ் தரப்பிலிருந்து வக்கில் நோட்டிஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் பட ஷீட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள் அதிகமாக வைக்கப்பட்டுள்ளதால் கடுப்பான தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இதற்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து என்ன பதில் கொடுப்பார்கள் என்பதனை காண ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

மலையாள படம் “சூக்ஷ்மதர்ஷினி”-நம்ப நஸ்ரியா -பேசில் ஜோசப்…கலக்கிட்டாங்க!!

Quick Share

ப்ரியதர்ஷினி (நஸ்ரியா நசீம்) குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹவுஸ் வொய்ஃப் வாழ்க்கை போர் அடித்துவிட, வேலைக்கு போகலாம் என்ற முயற்சியிலும் இருக்கிறார். ஒரு பக்கம் இண்டர்வ்யூ, வாட்ஸாப் குரூப்பில் புரணி பேசுவது என வாழ்க்கை ஜாலியாக போய்க் கொண்டிருக்கிறது. 

திடீரென ப்ரியதர்ஷினியின் பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த க்ரேஸ் தனது மகன் இமானுவேலுடன் (பேசில் ஜோசப்) திரும்ப வருகிறார். தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சிகிச்சைக்காக இங்கு வந்திருப்பதாகவும் சுற்றத்தாரிடம் சொல்கிறார் இமானுவேல். ஆரம்பத்தில் எல்லாம் நலமாக சென்றாலும், இமானுவேல் வீட்டில் நடக்கும் ஒரு தீவிபத்திற்குப் பிறகு, ப்ரியதர்ஷினிக்கு ஏதோ சரி இல்லை என்ற உணர்வு எழுகிறது. அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த எனோலா ஹோம்ஸ் விழித்துக் கொள்ள, அதன் பின் நடக்கும் ஸ்பை வேலைகளே கதை. இமானுவேலுக்கு பின் இருக்கும் மர்மம் என்ன? ப்ரியதர்ஷினி என்ன கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.

இப்படத்தைப் பொறுத்தவரை நடிகர்களின் தேர்ந்த நடிப்பே முதல் பலம். நஸ்ரியா இந்த ரோலை மிக இயல்பாக கையாள்கிறார். குடும்பத்தை அழகாக கையாளும் நபராக ஒருபுறம், இன்னொரு பக்கம் பக்கத்துவீட்டு நபரின் மர்மத்தை கண்டுபிடிக்க ஸ்கெட்ச் போடும் மாஸ்டர் மைண்டாக என அசத்துகிறார். இண்டர்வ்யூ முதல் ரவுண்டில் வெற்றி பெற்றவரை வாட்ஸ் ஆப் குரூப்பில் எல்லோரும் வாழ்த்த, ”நானும் தான் அதே இண்டவ்யூல முதல் ரவுண்ட் க்ளியர் பண்ணிட்டேன். அது மட்டுமில்ல என்னுடைய கல்யாண நாள் வேற வருது. ரெண்டுக்கு சேர்த்து பார்ட்டி தரேன்” என அட்டென்ஷன் பெற வெகுளியாக நடந்து கொள்வது க்யூட். இமானுவேல் என்னதான் ஜாக்கிரதையாக காய் நகர்த்தினாலும், ஒவ்வொரு முறையும் அவரை சந்தேகக் கண்ணோடே பார்ப்பது, அவ்வீட்டை தனது ரேடாருக்குள்ளேயே வைத்துக் கொள்வது என செம ஷார்ப் நடிப்பும் மிஸ்ஸாகவில்லை.

வெளியில் சிரிப்பும், உள்ளே வன்மமுமாக இந்த முறை வேறு விதத்தில் வந்திருக்கிறார் பேசில் ஜோசப். முதல் காட்சியிலிருந்தே, `இவன் முழியே சரி இல்லையே, கண்டிப்பா எதாவது செஞ்சிருப்பான்’ VIBEஐ தன் உடல் மொழியிலும், நடிப்பிலும் வெளிப்படுத்துகிறார். குச்சியை எடுத்து வந்து மார்க் வைப்பதில் இருந்து, தன் உதவியாளரை கையாள முடியாமல் பொங்குவது என ஹூமர் + டெரரை சரியாக பேலன்ஸ் செய்கிறார். ஆனால், அவர் கதாப்பாத்திரத்திற்கு காட்சிகள் அதிகம் இருப்பது போல, அழுத்தம் அதிகமாக இல்லை என்பது பெரிய மைனஸ்.

இவர்கள் தவிர சின்ன சின்ன பாத்திரங்களில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். அதில் பெரிய அளவில் கவர்வது சுலு கதாப்பாத்திரத்தில் வரும் அகிலா பார்கவன். ப்ரியா உளவு பார்க்கும் போது, வேறு யாரும் வருகிறார்களா என ஸ்பைக்கே, ஸ்பை வேலை பார்ப்பது, ஒரு நபரிடம் வசமாக சிக்கும் போது சமாளிப்பது என வெடித்து சிரிக்க வைக்கிறார். படத்தின் இறுதிப்பகுதியிலேயே எல்லா மர்மங்களும் விலகும் என்பதால், அதுவரை முடிந்தவரை நம்மை கதையோடு ஒன்ற வைப்பதே ஹீமர்தான்.ஷரன் வேலயுதன் ஒளிப்பதிவின் மூலம் சுவாரஸ்யமான கோணங்களைக் கொடுப்பதோடு, அந்த சுற்றத்தின் வடிவமைப்பை நமக்கு பதிய செய்கிறார். அது கதைக்குள் நாம் செல்ல உதவுகிறது. துப்பறியும் கதை என்பதால் ஒரு ஷெர்லக் ஹோம் உணர்வை பின்னணி இசை மூலம் கொடுக்கிறார் Christo Xavier.

படத்தின் பலவீனங்கள் என்றால் படத்தின் ரைட்டிங் தான். முன்பே சொன்னது போல் படத்தின் கடைசி 15 – 20 நிமிடங்களே கதையின் மர்மங்கள் அவிழ்கிறது. அந்த big revealக்கு செல்லும் வரையில் நம்மை என்கேஜ் செய்ய திணறுகிறது படம். எல்லா மர்மங்களையும் இறுதியில் தான் சொல்லுவேன் என இயக்குநர் MC, `ஆனாலும் கடலைமுத்து ரொம்ப ஸ்ட்ரிக்டுப்பா’ மோடில் இருப்பதால் கிட்டத்தட்ட 2 மணிநேரம் வெறுமனே காமெடியை மட்டும் வைத்தே படம் நகர்கிறது. கதையை நகர்த்தும் எந்த பெரிய சம்பவமும் நடக்காமலே நகர்வது பெரிய சோர்வைக் கொடுக்கிறது.மொத்தத்தில் ஒரு ஓக்கேயான த்ரில்லர் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது படம். ரைட்டிங்கில் இன்னும் பரபரப்பைக் கூட்டியிருந்தால் ஒரு அட்டகாசமான த்ரில்லராக மாறியிருக்கும்.

கோவில் கோவிலாக சுற்றும் ஜோதிகா -சூர்யா..வைரல் போட்டோஸ்

Quick Share

நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கும், தனியாக திருப்பதி திருமலை கோவிலுக்கும் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக கோவில்களுக்கு அதிகமாக சென்று வழங்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலில் ஜோதிகா மற்றும் சூர்யா தரிசனம் செய்ததாகவும், சிறப்பு யாகம் நடத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதேபோல், ஜோதிகா திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. திருமலை கோவிலில் நடிகை ஜோதிகா சுற்றி வரும் போது, பக்தர் ஒருவர் அவருக்கு ஏழுமலையான் வெங்கடாசலபதி புகைப்படத்தை பரிசாக வழங்கினார்; அதை அவர் அன்புடன் ஏற்றுக் கொண்டார்.

இதேபோல், ஒரு ரசிகை சட்டென ஜோதிகாவிடம் கை கொடுப்பதற்கு முன் வந்த போது, அவர் தனது கையில் லட்டு இருப்பதை சுட்டிக்காட்டி ஒரு புன்சிரிப்போடு அந்த இடத்திலிருந்து நகர்ந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் நாகசைதன்யா – சோபிதா துலிபாலா திருமண வீடியோ.. ஒளிபரப்பு உரிமை..இந்த ந...

Quick Share

நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வீடியோ வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே அந்த வீடியோவுக்கு விளம்பரமாக மாறியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண ஒளிபரப்பு உரிமையையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நாகசதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. டிசம்பர் 4ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமை 25 கோடிக்கு வாங்கியதாக தகவல் இருந்த நிலையில், அதைவிட இருமடங்கு தொகைக்கு நாகசைதன்யா – சோபிதா துலிபாலா திருமண வீடியோ விலை போய் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவியுள்ளது.

ஐஸ்வர்யாரஜினிகாந்துக்கும் எம்பி கனிமொழிக்கும் இடையே இப்படிப்பட்ட உறவா…

Quick Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கும் அரசியல்வாதிக்கும் இடையே 20 வருட நட்பு இருப்பதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் மற்றும் திமுக எம்பி கனிமொழி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினியும் 20 ஆண்டு கால நட்பு என்று இருவரும் இணைந்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறிய போது ’எனக்கும் கனிமொழி அக்காவுக்கும் உள்ள உறவு மிகவும் அழகானது. 20 வருட நட்பு அது, எங்கு தொடங்கியது, எப்போது பழகினோம் என்பதையே எங்களால் விவரிக்க முடியாத ஒரு உறவு.

நான் சோகமாக எப்போது உணர்ந்தாலும் யாரிடமாவது பேச வேண்டும் என்று தோன்றினால் உடனே நான் கனிமொழி அக்காவுக்கு தான் போன் செய்வேன். நான் ஒருவருக்காக வெளியே கிளம்பி வருகிறேன் என்றால் அது அக்காவுக்காக மட்டும் தான். யாருக்காகவும் நான் எங்கும் செல்ல மாட்டேன், ஆனால் கனிமொழி அக்காவுக்காக எங்கிருந்தாலும் நான் சென்று விடுவேன்.

மேலும் அவர் 18 ஆண்டுகால அரசியல் வாழ்வு என்று சொல்கிறார்கள், அது தவறு, அவர் பிறந்ததிலிருந்து அரசியலில் தான் இருக்கிறார், அரசியலை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது, எனக்கு எப்படி சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாதோ, அது போல் தான் அவரும் என்று கூறினார்.

மேலும் அக்காவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் எனது கோவில் வழிகாட்டி அவர்தான். எந்த ஊருக்கு போனாலும் கனிமொழி அக்காவின் ஆட்கள்தான் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள் என்றும் அந்த பேட்டியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.

நாக சைத்தன்யா, சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமம் இத்தனை கோடிக்கு விற்கப்பட்டுள்ளதா?

Quick Share

பிரபலங்களின் திருமண செய்தி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். அப்படி வரும் டிசம்பர் 4ம் தேதி பிரபல ஜோடியின் திருமணம் நடக்க உள்ளது. அதாவது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் நாக சைத்தன்யாவிற்கு, நடிகை சோபிதாவுடன் மறுமணம் நடக்க இருக்கிறது.

சிம்பிளாக இவர்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது, திருமணமும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இவர்களது திருமணம் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது நாக சைத்தன்யா-சோபிதா திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

அதுவும் ரூ.50 கோடி கொடுத்து இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

“விவரிக்க முடியாத உறவு அது” – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம்!

Quick Share

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் திரைப்படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. இப்படம் வெளிவந்த சமயத்தில் பேசப்படவில்லை என்றாலும், தற்போது இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் அவருக்கு இருக்கும் 20 வருட நட்பு குறித்து பேசியுள்ளார்.

அதில், ” பொதுவாக நான் எந்த இடத்திற்கும் செல்லமாட்டேன். ஆனால், கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் வந்துவிடுவேன். எங்கள் உறவு குறித்து விவரிக்க முடியாது எனக்காக எப்போதும் அவர் வந்து நிற்பார்.

எங்களுடையது 20 வருட நட்பு. நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ, அப்போதெல்லாம் அக்காவுக்கு தான் முதலில் போன் பண்ணி பேசுவேன்.

பார்க்க தான் அக்கா சீரியஸ் ஆன ஆள் மாதிரி இருப்பாங்க. அவர்களின் சிரிப்பு அவ்வளவு அழகா இருக்கும். ஆனால் சிரிக்க மாட்டாங்க. அவங்க இன்னும் நிறைய சிரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தியன் 2 க்கு வந்த மோசமான ட்ரோல்: பதிலடி கொடுத்த சித்தார்த்!

Quick Share

ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தில் சித்தார்த் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சித்தார்த் பாடியது நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. படத்தின் ரிலீசுக்கு பிறகு ‘சித்ரா அரவிந்தன், சோசியல் மீடியா’ என சித்தார்த் பேசிய வசனமும் ட்ரோல்களை சந்தித்தது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் சித்தார்த் அந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

“இந்த 2கே கிட்ஸ் எல்லாம் இந்த உலகமே 2000 வருடத்திற்கு பிறகு தான் தொடங்கியது என நினைகிறார்கள். வேலை இல்லாதவன் எதாவது நெகடிவ் ஆக சொல்லிட்டு தான் இருப்பான்.”

“சித்தா படம் பலருக்கும் பிடித்தது. ஆனால் சித்தா படத்தையே திட்டுபவர்கள் இருக்காங்க. திட்ட தான் செய்வாங்க. 10 பேர் இருந்தால் அதில் கொஞ்சம் பேர் திட்ட தான் செய்வாங்க. அதை ஏன் காது கொடுத்து கேட்டுட்டு இருக்கனும்.”

இவ்வாறு சித்தார்த் கூறி இருக்கிறார்.

அனிருத்தால் நான் தப்பித்தேன்: தனுஷ் போட்டுடைத்த ரகசியம்!

Quick Share

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தையும் தனுஷ் தான் இயக்கியிருந்தார். தனுஷ் இட்லி கடை படத்தில் மட்டுமின்றி இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார்.

இப்படி தனது கரியரில் உச்சக்கட்ட பிஸியாக இருக்கும் தனுஷ் நிகழ்ச்சி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் அனிருத் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், “என்னை தான் முன்பெல்லாம் அனைவரும் ஒல்லி நடிகர் என்று செய்திகளில் எழுதுவார்கள். ஆனால், தற்போது அனிருத் வந்த பின் என்னை அது போன்று யாரும் எழுதுவது இல்லை.

அதற்கு காரணம் என்னை விட அனிருத் ஒல்லியாக இருக்கிறார். அதனால் நான் தப்பித்து விட்டேன். ஆனால் என்ன தான் நாங்கள் ஒல்லியாக இருந்தாலும் வேலை விஷயத்தில் இருவருமே கில்லிதான்” என்று கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் யோகி பாபு!

Quick Share

நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக ‘போட்’ படத்தில் நடித்துள்ளார். ஆனால் தற்போதும் நான் ஹீரோ எல்லாம் இல்லை, காமெடியன் மட்டும் தான் என அவர் விளக்கம் கொடுத்து வருகிறார்.

இதில், ஆங்கில ராப் பாடல் ஒன்றுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடும் ஒரு தனித்துவமான காட்சியில் யோகி பாபு நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.

இந்த ‘டிராப் சிட்டி’ படத்தில் யோகி பாபுவை இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் ஹாலிவுட்டிற்கு கணேசன் அறிமுகப்படுத்த உள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் வதந்தி.. இன்ஸ்டாகிராமில் மோகினி டே அதிரடி பதிவு..!

Quick Share

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைத்து பாடகி மோகினி டே என்பவரை சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அதிரடியாக பதிலளித்துள்ளார்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த மறுநாள், ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றும் பாடகி மோகினி டே தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனை அடுத்து இந்த இரண்டையும் இணைத்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் தனது பக்கத்தில் தவறான தகவல்களை தனது தந்தை குறித்து பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் மோகினி டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என் மீது விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்போது பல ஊடகங்களில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பின் பின்னணியில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும். அவைகளை மரியாதை உடன் நிராகரித்து உள்ளேன். வதந்திகளுக்கு ஈடு தீனி போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. என் ஆற்றலை வதந்திகளுக்கு பதில் சொல்லி செலவழிக்க நான் விரும்பவில்லை. தயவு செய்து எனது தனி உரிமையை மதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என பதில் சொல்லியுள்ளார்.




You cannot copy content of this Website