கிரைம்

நாட்டையே உலுக்கிய சிறுமி மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்… சாக்கு மூட்டையில் கற...

Quick Share

துருக்கியில் மாயமான மூன்று வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுமி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கற்களுடன் அவரது சடலமும்

மசூதியில் குர்ஆன் பாடம் முடித்து வீடு திரும்பும் வழியிலேயே குறித்த சிறுமி காணாமல் போனார். இந்த நிலையில், உறவினர்கள், நாட்டு மக்கள், சமூக ஊடக பிரபலங்கள் என தீவிர தேடுதல் நடவடிக்கையில் களமிறங்கியது.

இதனையடுத்து அவரது குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு மைல்கள் தொலைவில் அமைந்துள்ள நதியில் இருந்து நரின் குரன் சடலமாக மீட்கப்பட்டார். மாயமானபோது அணிந்திருந்த உடைகளுடன் அவர் காணப்பட்டார்.

ஆனால் சாக்கு மூட்டை ஒன்றில், கற்களுடன் அவரது சடலமும் நதியில் வீசப்பட்டிருந்தது. ஆகஸ்டு 21ம் திகதி நண்பர்களுடன் நடந்து சென்ற நிலையிலேயே அவர் மாயமானார்.

கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளில், அவர் நண்பர்களிடம் இருந்து பிரிந்து தனியாக நடக்கத் தொடங்கிய பின்னரே மாயமாகியுள்ளார். சிறுமி மாயமான விவகாரம் ஒருசில நாட்களில் நாடு முழுவதும் தீயாக பரவியது.

பிரபலங்கள் பலர் சிறுமியை கண்டுபிடிக்க உதவுங்கள் என வலியுறுத்தினர். அத்துடன் உறவினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொலிசார், சிறப்பு குழுவினர் என சிறுமிக்காக களமிறங்கினர்.

21 பேர்கள் கைதாகியுள்ளனர்

இந்த நிலையில் ஞாயிறன்று சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்விவகார அமைச்சர் அறிவித்தார். மட்டுமின்றி, Diyarbakır பகுதி ஆளுநர் தெரிவிக்கையில், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கற்களால் மூடப்பட்ட நிலையில் ஒரு சாக்கு மூட்டையில் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்தார். சிறுமியை கொன்று சாக்கு மூட்டையில் கற்களுடன் கட்டி நதியில் வீசியுள்ளதாகவே பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 21 பேர்கள் கைதாகியுள்ளனர். சிறுமியின் பெற்றோரும் உறவினர் ஒருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையில், கொலையில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் மாமா சலீம் குரான் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் சிறுமியின் உடையில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போனதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன்னை கடத்தியவரை விட்டு பிரிய முடியாமல் கதறி அழும் குழந்தை!

Quick Share

கடத்தியவரிடம் இருந்து பிரிய மனமில்லாமல் குழந்தை கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்திய மாநிலமான ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்திற்கு 14 மாதங்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போனதாக புகார் வந்தது. தன்னுடைய 11 மாத கால பிருத்வி என்ற குழந்தையை காணவில்லை என்று தாய் புகார் அளித்தார். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, குழந்தை கடத்துபவர்களிடம் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. இதனால் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் தெரிவித்தால் தலா ரூ. 25,000 பரிசு வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்தனர்.

பின்னர், தனிப்படை பொலிஸார் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, ஆக்ரா, அலிகார் உள்பட பல்வேறு இடங்களில் தேடி குழந்தை கடத்தியவரை பிடித்தனர்.

அப்போது அந்த குழந்தை கடத்தியவரிடம் இருந்து பிரிய மனமில்லாமல் கதறி அழுதது. இருந்தாலும் குற்றவாளியிடம் இருந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், குழந்தை கடத்தியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், “உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த தனுஜ் சாஹர் என்பவர் குழந்தையை கடத்தியுள்ளார்.

இவர், அலிகரில் உள்ள ரிசர்வ் பொலீஸ் லைனில் ஏட்டாக வேலை செய்து வந்தவர். பின்னர் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் குழந்தையை கடத்தி மொபைல் போனை பயன்படுத்தாமல், அடிக்கடி தான் இருக்கும் இடத்தையும் மாற்றி வசித்து வந்துள்ளார். தன்னுடைய அடையாளத்தை மாற்றுவதற்காக தாடி வளர்த்து வந்துள்ளார். அதற்கு அடிக்கடி டையும் அடித்துள்ளார்.

இதையடுத்து, இவர் அலிகார் சென்றுள்ளதாக தனிப்படை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது குழந்தையுடன் வயல்வெளியில் தப்பியோட முயற்சித்துள்ளார்.

8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று தனிப்படை போலீசார் அவரைப் பிடித்தனர். பின்னர், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்” என்றனர்.

நாடு எங்கே செல்கிறது? 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 29 வயது இளைஞர்

Quick Share

கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி வீட்டில் தனியாக வசிப்பதை அறிந்த தனீஷ் (29) என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் 24 அன்று அவர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த 7 சவரன் நகைகள், செல்போனை கொள்ளையடித்ததோடு மூதாட்டியை பலாத்காரம் செய்து அவர் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பியோடியுள்ளார். கடுமையாக பாதிக்கப்பட்ட மூதாட்டி நேற்று (ஆகஸ்ட் 25) போலீஸ் புகார் அளித்த நிலையில் நகையை விற்க முயன்ற போது தனீஷை போலீசார் கைது செய்தனர்.

சிக்கும் கொல்கத்தா மருத்துவமனை Ex முதல்வர் சந்தீப்? உண்மையை கண்டறியும் சோதனைக்கு பின் ச...

Quick Share

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அவரிடம் நேற்று சிபிஐ அதிகாரிகள் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்திய நிலையில், இன்று அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ம் தேதி பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதில் சஞ்சய் ராய் என்ற ஒருவர் மட்டும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இதில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறி போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

15 இடங்களில் ரெய்டு: இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு தொடர்புடைய 15 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர். அவர் மீது ஊழல் வழக்கை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக இப்போது ரெய்டு நடத்தியுள்ளனர். கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சிபிஐ அதிகாரிகள் நேற்று தான் வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சூழலில் இன்றைய தினமே இந்த ரெய்டை நடத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் தான் சந்தீப்பிடம் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மறுநாளே ரெய்டு நடத்தியுள்ளனர். சந்தீப் முதல்வராக இருந்தபோது நிதி முறைகேடு செய்ததாகக் கூறி, மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி புகார் அளித்து இருந்தார். அந்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடத்த சிபிஐ தரப்புக்குக் கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.

அங்குப் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை ஏற்கனவே சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இப்போது இந்த ஊழல் புகாரையும் சிபிஐ விசாரிக்கும் எனக் கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறுகையில், “இந்த வழக்கு விசாரணையில் பல முரண்பாடுகள் உள்ளன. தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. தேவையற்ற குழப்பங்கள் சிபிஐ விசாரணை மூலம் தடுக்கப்படும். உரிய நேரத்தில் விசாரணை நடப்பது உறுதி செய்யவே சிபிஐக்கு இது மாற்றப்படுகிறது” என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தீப் கோஷ்: ஏற்கனவே கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலையில் சந்தீப் கோஷ் நடவடிக்கைகள் கடும் பேசுபொருள் ஆகியிருந்தது. நேற்றைய தினம் சந்தீப் கோஷ் உட்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மையைக் கண்டறியும் சோதனையையும் நடத்தியிருந்தனர். சந்தீப் கோஷ் மீது ஏற்கனவே பல ஊழல் புகார்கள் இருக்கும் நிலையில், இந்த சிபிஐ ரெய்டு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ம் தேதி பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது அப்போது சந்தீப் கோஷ் தான் முதல்வராக இருந்தார். அப்போது அவரது செயல்பாடுகள் பல சர்ச்சைகளைக் கிளப்பின. பயிற்சி மருத்துவர் கொலை குறித்து புகார் கூட அளிக்காதது, முதலில் அதைத் தற்கொலை எனக் கூறி மறைக்கப் பார்த்தது என அவர் மீது பல புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாவில் காதல்.. காதலனை நம்பி காட்டுக்குள் போன இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!

Quick Share

இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர், இளைஞரை காதலித்த நிலையில் அந்த இளைஞரை நம்பி காட்டுக்குள் போன இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் காரணமாக பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் காதலிப்பது தற்போது பேஷனாக இருந்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அல்தாப் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்ட நிலையில் இந்த சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதன் பிறகு அல்தாப் அந்த இளம் பெண்ணை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. மதுபானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில் போதையில் மயங்கிய இளம் பெண்ணை அல்தாப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

காட்டுப்பகுதியில் சத்தம் கேட்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அந்த இளம் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அல்தாப் மற்றும் அவரது கூட்டாளி என இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்கு பணம் அனுப்பிய காதலன்: அந்தரங்க உறுப்பை தாக்கிய இளம்பெண்!

Quick Share

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார். இவர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார். விஜயகுமாருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. இருப்பினும் இவர் கடந்த 4 மாதங்களாக, சீதா குமாரி என்ற பெண்ணுடன் லிவ் இன் டுகெதரில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கிடையில், விஜய்குமார் தனக்கு கிடைக்கும் வருமானத்தை சொந்த ஊரில் வசிக்கும் தனது மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். இந்த விஷயம் சீதாகுமாரிக்கு தெரியவர, விஜய்குமார் மீது ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சீதா குமாரி, விஜய்குமாரிடம் பல முறை வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று இரவு விஜய்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சீதா குமாரி, விஜய்குமாரின் கை கால்களை கட்டி, அவரது அந்தரங்கை உறுப்பில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து, விஜய்குமார் தாக்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு சீதாகுமாரி அங்கிருந்து சென்றுள்ளார். 

வீட்டின் உரிமையாளர், விஜய்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தூக்கில் ஏற்றப்பட்ட நாய்கள்’- மரித்த மனிதத்துவம்!

Quick Share

நாய்களை மரத்தில் தூக்கில் ஏற்றி கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது மூலனூர் ஊராட்சி ஒன்றியம். இந்த பகுதியைச் சேர்ந்த முலையாப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். பிராணிகள் வதை தடுப்பு சங்க செயற்குழு உறுப்பினராக நாகராஜ் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் அதே மூலனூர் பகுதியில் இரண்டு நாய்களை கழுத்தில் கயிறை கட்டி மரத்தில் தூக்கிலேற்றிக் கொன்றதாக பிராணிகள் வதை தடுப்பு அலுவலகத்திற்கு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், ‘கிட்டுசாமி என்பவரின் வளர்ப்பு நாய் மற்றும் தெருநாய் என இரண்டு நாய்களை மரத்தில் தூக்கிலேற்றி கொலை செய்துள்ளார்கள். பன்னீர், பாலசுப்பிரமணி, காந்தி சாமி, நடராஜ் உள்ளிட்ட 20 பேர் சேர்ந்து இந்த செயலை செய்ததாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மரத்தில் நாய்கள் தூக்கில் ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகாரை தொடர்ந்து நாய்களை தூக்கில் ஏற்றியதாகக் கூறப்படும் 20 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொடுமையோ கொடுமை!! ‘சடலங்கள் விற்பனை’:கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை..

Quick Share

 நாட்டையே உலுக்கி இருக்கும் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் குறித்து நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத சடலங்களை- உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல்களுக்கு பெருந்தொகைக்கு விற்பனை செய்து சினிமாவின் கதாபாத்திரங்களை மிஞ்சுகிற ஒரு தாதாவாக சந்தீப் கோஷ் செயல்பட்டதாக பகீர் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

கொல்கத்தாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.

பயிற்சி மருத்துவரின் மரணத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள், மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே பயிற்சி மருத்துவர் மரணத்துக்கு பல்வேறு பின்னணிகள் இருக்கலாம்.. குறிப்பாக இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஜினாமா செய்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் ஊழல் முறைகேடுகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி, முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அக்தர் அலி கூறியதாவது: ஆர்ஜி கர் மருத்துவமனையில் உரிமை கோரப்படாத அடையாளம் தெரியாத சடலங்களை விற்பனை செய்து வந்தார் சந்தீப் கோஷ். அத்துடன் மருத்துவ கழிவுகளை வங்கதேசத்துக்கு கடத்தும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் சந்தீப் கோஷ். இது தொடர்பான விசாரணைக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இந்த விசாரணைக் குழுவில் சந்தீப் கோஷ் குற்றவாளி என ஆதாரங்களுடன் நிரூபித்தோம். ஆனாலும் சந்தீப் கோஷ் மீது மேற்கு வங்க அரசு எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. இந்த அறிக்கையை சமர்ப்பித்த நாளிலேயே நான் ஆர்ஜி கர் மருத்துவமனையில் இருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டேன். எந்த ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சந்தீப் கோஷுக்கு 20% கமிஷன் கொடுக்கப்பட்டாக வேண்டும் என்பது எழுதப்படாத ஒன்றாக இருந்தது. இவ்வாறு அக்தர் அலி கூறினார்.

பெரும் அதிர்ச்சி !!போதை பொருளை எதிர்த்து போராடியதால் இப்படி செய்தார்களா… கொல்கத்...

Quick Share

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா ஜூனியர் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, கொலை செய்த நிலையில், இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும், இந்த சம்பவம் நடந்த கொல்கத்தாவின் அரசு மருத்துவமனையான கே.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டியும், மருத்துவர்களுக்கு சட்ட ரீதியில் உரிய பாதுகாப்பு அளித்திடவும் தொடர்கள் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. 

இதுஒருபுறம் இருக்க, சிபிஐ தற்போது இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷிடம் கடந்த நான்கு நாள்களாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சம்பவத்திற்கும் முன்னரும், சம்பவத்திற்கு பின்னரும் அவருக்கு வந்த தொலைப்பேசி அழைப்புகளையும் சிபிஐ ஆய்வு செய்து வருகிறது.

மேலும், இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் (Sanjay Roy) மட்டுமின்றி பல பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், இது கூட்டு பாலியல் வன்முறை என்றும் தகவல்கள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி மருத்துவமனையில் போதைப் பொருளை புழக்கத்தை உயிரிழந்த மாணவி தட்டிக்கேட்டதாகவும், இதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சஞ்சய் ராய் என்பவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

விரிவான உடற்கூராய்வு அறிக்கை

இந்நிலையில், பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண் மருத்துவரின் விரிவான உடற்கூராய்வு அறிக்கை (Autopsy Report) குறித்த தகவல்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த பெண் மருத்துவர் உயிரிழப்பதற்கு முன்னரே அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கழுத்து நெறிக்கப்பட்டதை தொடர்ந்து உயிர் பிரிந்துள்ளதும் அறிக்கையில் தெரிகிறது. அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதும் மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்பட்டது. 

150 கிராம் விந்தணு இருந்தது உண்மையா?

இருப்பினும், உயிரிழந்த பெண்ணின் பிறப்புறுப்பில் 150 கிராம் அல்லது 150 மில்லி கிராம் அளவு விந்தணு இருந்ததாக கூறப்பட்ட தகவலை இந்த உடற்கூராய்வு அறிக்கை முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த அறிக்கை அந்த கூற்றுகளை நிராகரித்திருக்கிறது. வெள்ளையான தடிமானான பிசுபிசுப்பு தன்மையுடனான திரவம் ஒன்றை பெண்ணின் உடலில் கண்டெடுத்ததாக கூறப்பட்டாலும், அது என்னது என்பது குறித்து எங்கும் குறிப்பிடவில்லை. 

இருப்பினும், அந்த பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்துள்ளது. தலை, கன்னம், கன்னத்து எலும்புகள், உதடு, மூக்கு, வலது தாடை, கழுத்து, இடது கை, இடது தோள்பட்டை, இடது முழங்கால், கணுக்கால் ஆகிய பகுதிகளில் காயங்கள் தென்பட்டுள்ளன. அந்த பெண்ணின் பிறப்புறுப்பிலும் கூட காயங்கள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நுரையீரல் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையும், உடலின் மற்ற பாகங்களில் ரத்தம் உறைந்திருப்பதையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முன்னரே அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடற்கூராய்வு அறிக்கை வழக்கின் விசாரணையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

புது துணி கேட்ட மனைவியை அடித்துக்கொன்ற கணவர்!

Quick Share

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி காவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் வரமகாலட்சுமி பண்டிகைக்கு புதிய ஆடை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவானந்தம் அவரை அடித்தே கொன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

13 வயது சிறுமியை 5 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர்

Quick Share

அருணாச்சல பிரதேச மாநிலம் டபோரிசோவில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 13 வயது சிறுமியை 5 பேர் ஐந்து நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். குற்றவாளிகள் சிறுமியை கடத்திச் சென்று இந்த கொடூரத்தை செய்துள்ளனர். ஜூலை 28ஆம் தேதி சிறுமி மீட்கப்பட்டதாகவும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு நிவாரணத்தொகை அனுப்பிய அரசு: வங்கிகள் செய்த மட்டமான செயல்!

Quick Share

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை அனுப்பிய நிலையில் EMI தொகையை வங்கிகள் பிடித்தம் செய்துள்ளன. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த 30 -ம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 405-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின.

இந்நிலையில், இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.

இதையடுத்து, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிகள் வழியே நிவாரண தொகை வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிவாரணத் தொகையில் இருந்து சில வங்கிகள் EMI பிடித்தம் செய்துள்ளது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும்” என்றார்.




You cannot copy content of this Website