கிரைம்

13 வயது சிறுமியை 5 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர்

Quick Share

அருணாச்சல பிரதேச மாநிலம் டபோரிசோவில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 13 வயது சிறுமியை 5 பேர் ஐந்து நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். குற்றவாளிகள் சிறுமியை கடத்திச் சென்று இந்த கொடூரத்தை செய்துள்ளனர். ஜூலை 28ஆம் தேதி சிறுமி மீட்கப்பட்டதாகவும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு நிவாரணத்தொகை அனுப்பிய அரசு: வங்கிகள் செய்த மட்டமான செயல்!

Quick Share

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை அனுப்பிய நிலையில் EMI தொகையை வங்கிகள் பிடித்தம் செய்துள்ளன. இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த 30 -ம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 405-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின.

இந்நிலையில், இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.

இதையடுத்து, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிகள் வழியே நிவாரண தொகை வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிவாரணத் தொகையில் இருந்து சில வங்கிகள் EMI பிடித்தம் செய்துள்ளது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும்” என்றார்.

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்: நா.த.க. நிர்வாகி மீது போக்சோ வழக்கு!

Quick Share

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சிவராமன் (வயது 32) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவரால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவராமனைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சிவராமனைக் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாகச் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த கா.அ. சிவராமன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டுள்ளார். இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்.

அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது. நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவருக்கு இந்த நிலைமையா…மனசாட்சி இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்து கொல...

Quick Share

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு நோயாளி ஒருவரை பார்க்க சஞ்சய் ராய் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் அவர் மருத்துவர் ஓய்வு எடுக்கும் செமினார் ஹாலுக்கு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அவர் கத்தி கூச்சலிட்டதும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி இருக்கிறார்.

பேரதிர்ச்சி!! சீரழியும் நாடு!! 3 வயது சிறுமியை சீரழித்த 9-ம் வகுப்பு சிறுவன்

Quick Share

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சகினாகா பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், மைனர் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இன்று (ஆக.14) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அந்த சிறுவன், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இறந்த பிறகும்….கல்லறையில் பெண் சடலத்தை தோண்டி எடுத்து உடலுறவு!40 வயது சைக்கோ..

Quick Share

 பாகிஸ்தானில் கராச்சியில் 40 வயது மதிக்கத்தக்க சைக்கோ மனிதன் ஒருவன் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இறந்த அந்த பெண்ணின் மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். அது போல் அவர் மீது சுடுகாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது, பெண்ணின் சடலத்தை பலாத்காரம் செய்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பாகிஸ்தானின் கோரங்கி என்ற கல்லறையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு பெண்ணின் சடலத்தை முகமது சலீம் என்ற 40 வயது நபர் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த சடலத்துடன் அவர் உடலுறவு கொண்டார்.

இதை அப்பகுதியாக சென்றவர்களும் அந்த பெண்ணின் உறவினர்களும் கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து போலீஸாரையும் அவர்கள் வரவழைத்தனர்.

போலீஸார் சலீமிடம் விசாரணை நடத்தியதில் அவர் இது போல் புதிதாக புதைக்கும் பெண் சடலங்களை கண்காணித்துக் கொண்டே இருப்பாராம். பிறகு யாரும் இல்லாத நேரத்தில் இரவில் வந்து அந்த சடலங்களை தோண்டி எடுத்து உறவு கொள்வாராம். இதுவரை 4 பெண் சடலங்களுடன் அவர் உறவு கொண்டுள்ளாராம்.

இந்த சலீம் கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பு கோரங்கி என்ற சுடுகாட்டில் சடலங்களை தோண்டி எடுத்து இப்படி ஒரு அக்கிரமத்தை செய்ததாக அப்பகுதி மக்களால் பிடிபட்டாராம். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் தோண்டப்பட்ட சடலத்தை நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் புதைக்க உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நபரை மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய போலீஸார் அழைத்துச் சென்றனர். ஜூன் 22 ஆம் தேதி லாகூரில் இருந்து ஒரு சம்பவம் நடந்தது. அங்கு 3 மாத குழந்தையின் சடலம் கல்லறையில் காணாமல் போனது. இந்த சம்பவம் மியான சாஹிப் கல்லறையில் நடந்தது. இது குறித்து குழந்தையின் சடலம் காணவில்லை என தந்தை போலீஸில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பாகிஸ்தானில் இது போல் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் வழக்குகள் ஏராளமாக பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் உயிரோடு இருக்கும் போதுதான் இந்த மிருகங்கள் வேட்டையாடுகிறது என்றால் இறந்த பிறகும் இது போல் சைக்கோக்களிடம் பெண் சடலங்கள் சிக்குகின்றன.

கருவின் பாலினம் கண்டறியும் கும்பல் கைது!

Quick Share

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாகக் கருவின் பாலினத்தைக் கண்டறியும் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் தான் கருவின் பாலினம் கண்டறியும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி இடைத்தரகர் வடிவேல், கற்பகம் ஆகியோரை ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடமிருந்து பாலினம் கண்டறியும் இயந்திரம், ரூ. 18 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பெண்களின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் கும்பல் ஒன்று கடந்த மாதம் 25ஆம் தேதி (25.07.2024) தர்மபுரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்தக் கும்பலை மருத்துவத்துறை அதிகாரிகள் சினிமா படப் பாணியில் விரட்டி பிடித்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்கு விளையாடாத மாணவர்களை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்!

Quick Share

அரசு உதவி பெறும் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் பொது இடத்தில் மாணவர்களை காலால் எட்டி உதைத்து கடுமையாக தண்டிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் கால்பந்து போட்டியில் பங்கேற்ற பள்ளியின் மாணவர்கள் முதல் பாதி ஆட்டத்தை சரியாக விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை மாணவர்களை ஷூ காலால் வயிற்றில் எட்டி உதைத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

முறைகேடு செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளர்!

Quick Share

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சார்பதிவாளராக உள்ளவர் கவிதா. இவர் ஒரு புரோக்கரிடம் பத்திரப் பதிவு செய்ய லஞ்சமாக வாங்குவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சார்பதிவாளர் கவிதா லஞ்சமாக கேட்ட ஒரு குறிப்பிட்ட தொகையில், ஏற்கனவே ஒரு லட்சம் கொடுத்துவிட்டோம். 75 இதில் உள்ளது. அடுத்த முறையில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என புரோக்கர் சார்பதிவாளரிடம் சொல்வது பதிவாகியுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், சார் பதிவாளர் கவிதா முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர் கவிதாவை பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதிர்ச்சி !! மாணவியை தொடந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த 22 மாணவர்கள்!

Quick Share

தனமலவில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை, ஒரு வருடமாக அதே பாடசாலையில் பயிலும் 22 மாணவர்கள் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி தனமலவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

அதன்படி, சம்பவத்தில் ஈடுபட்ட 22 மாணவர்கள் மற்றும் அதற்கு துணையாக இருந்த அனைவரையும் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான உண்மைகளை மறைத்தமைக்காக அந்த பாடசாலையின் அதிபர் உட்பட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியை கொடுத்த சிறுமியின் வாக்குமூலம்: இன்ஸ்டா ரீல்ஸ் செய்ய அழைத்து சென்று நிகழ்த்...

Quick Share

இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுப்பதாக கூறி அழைத்துச் சென்று பள்ளி மாணவியை இளைஞன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோணம்காடு பகுதியில் வசித்து வந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் திடீரென மாயமானார்.

தாயை இழந்த நிலையில் பாட்டி கண்காணிப்பில் வளர்ந்து வந்த சிறுமி திடீரென காணாமல் போனது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்களும் குடும்பத்தாரும் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பாட்டி குளைச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் மாணவி தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று மாணவியை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவலை அந்த மாணவி வெளியிட்டார்.

காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்த சிஜின் என்ற 23 வயதான இளைஞனுடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ‘இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்யலாம் வா’ என அருகில் உள்ள பூங்காவிற்கு சிஜின் அந்த மாணவி அழைத்துள்ளார். 

மாணவியும் அவரை நம்பி சென்ற நிலையில் அங்குள்ள மலைப்பகுதியில் வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிஜின், சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டான். தொடர்ந்து எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த மாணவி, அவருடைய உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சிஜினை போலீசார் கைது செய்துள்ளதோடு பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். சிஜின் மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 வயது சிறுமி பலாத்காரம்.. 57 வயது முதியவரின் கொடூரம்…

Quick Share

உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 4ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​57 வயதுடைய முதியவர் ஒருவர் அந்த சிறுமியை ஏமாற்றி வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பள்ளி முடிந்து தாமதமாக வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் முதியவர் கைது செய்யப்பட்டார்.




You cannot copy content of this Website