அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது, அடுத்து செனட் சபையை நோக்கி விசாரணை தொடரும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம், அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலிலும் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட போகும் ஜனநாயக கட்சியின் ஜோ பிடனுக்கு எதிரான ஊழல் வழக்குகளின் மீதான விசாரணையை தீவிரப்படுத்திதுமாறு அவர் கூறியுள்ளார். இதனால் அவர் ஜோ பிடனுக்கு எதிராக சாதி செய்ய உக்ரைன் அரசிடம் பேரம் பேசியுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது ,இதுதான் பதவி நீக்கத்திற்கான முதல் குற்றசாட்டு ,பின்னர் அதற்கும் மேலாக பல குற்ற சாட்டுகள் அவர் மீது வந்திருக்கின்றன. அதிபர் ட்ரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து, மோசடி செய்து அதிபர் ஆனார் என்றும் சட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் என்றும், அதேபோல சில ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதிய விதிகளை மீறுகிறார், மேலும் வெளிநாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக கூறி பதற்றம் ஏற்படுத்துகிறார் என அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ளன.
இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்படைக்கப்பட்ட்டது. அந்த சபையில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெருன்பான்மை இருப்பதால், இந்த தீர்மானத்திற்கு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துவந்தார். அதன் பின் அமெரிக்க பிரதிநிதிகள் சபை அந்த தீர்மானத்தை விசாரித்தது. அந்த விசாரணை இன்று முடிவடைந்தது. ஜனநாயக கட்சிக்கு அந்த சபையில் 233 உறுப்பினர்கள் உள்ளனர். ட்ரம்பிற்கு ஆதரவாக 197 உறுப்பினர்களே இருந்தனர் . இதில் பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர் வாக்களித்தனர், எதிராக 179 பேர் வாக்களித்தனர். இதனால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அடுத்தகட்டமாக, அவர் மீதான விசாரணை செனட் சபையில் விசாரிக்கப்பட்டு, அந்த வாக்கெடுப்பில் இவர் வெற்றி பெற்றால் தான் அதிபராக நீடிக்க முடியும். அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாக செனட் சபையில் 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியில் 47 உறுப்பினர்கள் தான் உள்ளனர். அங்கு ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட 66 உறுப்பினர்கள் பலம் தேவை படுகிறது. அதனால் அங்கு அதிபர் பதவி நீக்கம் செய்ய படுவது சந்தேகம் தான் .சென்ட் சபையில் அவர் காப்பாற்ற பட வாய்ப்புள்ளது. இது நடக்கவில்லை என்றால், மொத்தமாக அவர் பதவியை இழக்க நேரிடும் .
அமெரிக்காவில் இதுவரை 2 அதிபர்கள் மட்டுமே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பில் கிளிண்டன், ஆண்ட்ரு ஜான்சன் ஆகியோர் 1998 ம் ஆண்டு பிரதிநிதிகள் சபை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செனட் சபை மூலம் இதுவரை யாரும் பதவி நீக்கம் செய்ய படவில்லை. ட்ரம்ப் அதுபோன்ற நிலையை தற்போது எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய அதிபர் ட்ரம்ப் எதிர்க்கட்சிகள் எனக்கெதிராக ஜனநாயக துஸ்பிரயோகம் செய்கின்றனர். அடுத்து நடக்கும் அதிபர் தேர்தலில் என்னை வெற்றிபெற செய்ய வேண்டுமென தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.