அமெரிக்க நாளிதழின் தலைப்பு செய்தியில் இடம்பிடித்த, இந்திய குடியுரிமை சட்டத்திருத்த போராட்டங்களின் செய்திகள். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுமா ? ஷாக் நியூஸ்.
இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் வெடித்துவருகின்றன. வடஇந்தியாவில் தொடங்கி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இஸ்லாமியர்கள் எதிர்கட்சியினர் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கேரளா போன்ற இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் மேலும் போராட்டம் முற்றியுள்ளது.
இந்நிலையில், ஒருகேட்டுக்கு அந்த பக்கம் திரளான முஸ்லீம் மக்களும் மறுபக்கம் போலீசாரும் நிற்க கூடிய ஒரு புகைப்படத்தை செய்தி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த போட்டோ தற்போது அமெரிக்க முன்னணி நாளிதழ்களான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றில் முதல் பக்கத்தை பிடித்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது. அதிலும் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில், தலைப்பு செய்தியாக, “இந்தியாவை இந்து நாடாக மாற்றும் மோடியின் முயற்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் ” என குறிப்பிட்டுள்ளது. மேலும் நியூயார்க் டைம்ஸ் தனது மற்றொரு செய்தியில், “உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தான், அதிகமான அளவுக்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது ” அதுமட்டுமல்லாது “இந்த வாரத்தில் மட்டும் 60 மில்லியன் மக்கள், அதாவது பிரான்ஸ் நாட்டின் அளவுக்கான மக்களின் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் பதற்றம் நிலவி வருவது போன்ற இந்த செய்திகளால், முதலீட்டார்களுக்கு அச்சத்தை உருவாக்க்கும் , அதனால் அன்னிய முதலீடுகள் வருகை குறைந்து விடும் என்ற மற்றொரு அச்சத்தையும் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர் .ஏற்க்கனவே அதலபாதாளத்தில் உள்ள நம் நாட்டின் பொருளாதாரம் இதுபோன்ற போராட்டங்களால் மேலும் பாதிக்கக்கூடும் என பீதி கிளம்பியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோக வழக்கில் மரணதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரப். இவர் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்து, 1999ல் பாகிஸ்தான் நாட்டு அதிபராக பதிவியேற்றார். இவர் கடந்த 2008ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ் ஷெரிப் ) முஷாரப் மீது கடந்த 2013ம் ஆண்டு தேச துரோக வழக்கை பதிவு செய்தது. அதேபோல கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 3 ம் தேதி பாகிஸ்தானில் தவறான முறையில் அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக அப்போதைய அதிபராக இருந்த முஷரப் மீது அந்நாட்டு அரசு தேச துரோக வழக்கை பதிவு செய்தது . அத்துடன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசி பூட்டோ மீதான கொலை வழக்கிலும் அவர் பெயர் சேர்க்கப்பட்டது .இந்த வழக்குகள் மீதான விசாரணையை நீதிபதி யாவார் அலி தலைமையிலான 3 உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு மேற்கொண்டது. இந்நிலையில் அவர் பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்ததன் மூலம் தேசத்துரோக வழக்கு உறுதி செய்யப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சர்வதேச அகதிகள் மன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். “ஏற்கெனவே ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நெருக்கடியைத் தொடர்ந்து தற்போது இந்தப் புதிய சட்டம் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கும். இதன்மூலம் இந்திய முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு வர நேரிடும். பாகிஸ்தானால் அதைச் சமாளிக்க முடியாது. இது வெறும் அகதிகள் பிரச்னையாக மட்டுமல்லாமல் ”இரண்டு அணுஆயுத நாடுகளையும் போர் முனைக்கு இட்டுச் செல்லும்”. இந்திய அரசு, காஷ்மீரை ஆக்கிரமித்ததோடு, அஸ்ஸாமில் முஸ்லிம்கள் குடியுரிமையையும் பறித்தது. தற்போது இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “பாகிஸ்தான் பிரதமரின் அனைத்துக் கருத்துக்கும் இந்தியா பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. இம்ரான் கான், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாமல் அவர்கள் நாட்டின் சிறுபான்மையினர் நிலைமையில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளது.
ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்திருக்கிறது தமிழகத்தின் ஓடந்துறை கிராமம். ஓடந்துறை கிராமப் பஞ்சாயத்து கோவை மாவட்டம், கோத்தகிரி மலையடிவாரத்தில் பவானி ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது. வாழைத் தோட்டங்களும் பாக்குத் தோப்புகளும் நிறைந்த பசுமையான பூமி. பெரும்பாலானோர் நகரத்தின் வாடையே அறியாத மலைவாழ் மக்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களது கிராம பஞ்சாயத்து செலுத்தியிருக்கும் மின் கட்டணம் சுமார் 1.20 கோடி ரூபாய் என்கிறார்கள்! இதில் அதிசயமான விஷயம் இந்த பஞ்சாயத்தின் சார்பாக ஆண்டுக்கு 6.75 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 67.50 லட்சம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறார்கள். அதில் ஆண்டுக்கு 2.15 லட்சம் யூனிட் வீதம் கடந்த 10 ஆண்டுகளில் 21.5 லட்சம் யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். அதன் மூலம் சுமார் ரூ. 65 லட்சம் வருவாய் கிடைத்திருக்கிறது. இப்போதும் இது தொடர்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால், அந்த ஊரில் மின் உற்பத்தி நிலையம் என்று எதுவும் இல்லை. பின் எப்படி? 1996 தொடங்கி 2006 வரைக்கும் ஓடந்துறை பஞ்சாயத்து பொதுப் பஞ்சாயத்தாக இருந்திருக்கிறது. ஓடந்துறை கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் 1996 முதல் 2006 வரை முதல் பத்து வருடங்கள் சண்முகம். 2006-இல் அந்த பஞ்சாயத்தை பெண்களுக்காக ஒதுக்கியதும், சண்முகம் ஒதுங்கிக் கொள்ள, அவரது மனைவியான லிங்கம்மாளை தலைவியாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர் கிராம மக்கள். கடந்த பத்து ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவராக தொடர்பவர் லிங்கம்மாள் சண்முகம்.கணவன், மனைவி இருவருமாக இந்த கிராமத்தில் செய்திருக்கும் புதுமைகள், சாதனைகள் பலரையும் இந்த கிராமத்திற்கு வரவழைத்திருக்கின்றன. ஒரு கிராமப் பஞ்சாயத்து தனது வரிகளை நூறு சதவீதம் வசூலித்தால் தமிழக அரசு அதற்கு இணையாக மூன்று மடங்கு ஊக்கத் தொகை வழங்குகிறது. இந்த சலுகைகள் குறித்து, ஊர் மக்களிடம் பேசி இருக்கிறார் லிங்கம்மாள். அரசுக்கு முழுமையாக வரி செலுத்த வேண்டிய அவசியத்தை விளக்கி இருக்கிறார்கள். சிறப்பு முகாம்கள் நடத்தி வீட்டு வரி, கடை வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரைபட அங்கீகாரக் கட்டணம் என்று நூறு சதவீதம் வரியை வசூலித்தார். ரூ.20 ஆயிரமாக இருந்த வரி வருவாய் ரூ.1.75 லட்சமாக உயர்ந்தது. அதற்கு ஈடாக மும்மடங்கு ஊக்கத் தொகையாக தமிழக அரசு ரூ.5.25 லட்சம் கொடுத்திருக்கிறது. மறு ஆண்டு 3.5 லட்சம் வரி வசூலித்தார்.
அதே போன்று, தமிழக அரசிடமிருந்து ஈடாக 10.5 லட்சம் ஊக்கத் தொகை பெற்றார். சரி, இந்தத் தொகையை எல்லாம் என்ன செய்கிறார்கள்?லிங்கம்மாள் சொல்கிறார்: “எங்க கிராமத்துல யாரும் வெளியே வட்டிக்கு கடன் வாங்குறதில்லைங்க. கிராமத்துல இருக்குற ஒவ்வொரு வாக்காளருக்கும் கிராமப் பஞ்சாயத்தே கடன் வழங்குது. ஒரு ரூபா வட்டிங்க. கடன் பெறுவதற்கு ரெண்டு தகுதி வேணுமுங்க. தகுந்த காரணம் இருக்கோணும். பழைய பாக்கி இருக்கக் கூடாது. மருத்துவச் செலவு, பிரசவ செலவு, கல்விக் கட்டணம், சிறு கடை வைக்க கடன் தர்றோமுங்க. கல்யாணம், காது குத்து, நல்லது, கெட்டதுகளுக்கும் கடன் உண்டுங்க. ஆயிரம் ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கோம்” என்கிறார். கொடுக்கும் தொகைக்கு எழுதி வாங்குவது கிடையாது. சரியான காரணமாக இருந்தால் உடனே பணம் தருகிறார்கள். பதிவேட்டில் தவணைத் தொகை வரவு வைக்கப்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தத் திட்டத்தில் திரும்ப வராதகடன் என்கிற பேச்சுக்கே இதுவரை இடம் இல்லை. இங்கிருக்கும் பழங்குடியினர் காலம் காலமாக தனியார் தோட்டங்களில் கொத்தடிமைகள் போல இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கென நிரந்தர வசிப்பிடம் கிடையாது. அவர்களுக்கு தனியார் தோட்ட முதலாளிகளிடம் போராடி நிலத்தைப் பெற்று வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார் லிங்கம்மாள். தனியார் தோட்ட நிறுவனங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக தரிசு நிலம் இருந்தால் அதனை அந்த கிராமப் பஞ்சாயத்து கையகப் படுத்திக் கொள்ளலாம் என்பது சட்டம். இதனை அறிந்த லிங்கம்மாள் ஆறு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். முதலாளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவற்றையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் லிங்கம்மாள். அங்கு பழங்குடி இனத்தவருக்கு 250 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவை தவிர வினோபாஜி நகரில், தமிழக அரசின் சார்பில் 101 பசுமை வீடுகள் சோலார் மின் தொழில்நுட்பத்துடன் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் 101 பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப் பட்டிருக்கும் தமிழகத்தின் ஒரே பஞ்சாயத்து ஓடந்துறை மட்டுமே.இதிலும் ஒரு சிறப்பு உண்டு. தமிழகம் முழுவதுமே பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதில் பயன்பெற அடிப்படை தகுதியாக சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். இங்கு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்துடன் வீட்டை சொந்தமாக்கிக் கொடுத்திருக்கிறார் லிங்கம்மாள். இங்கே தமிழக அரசுக்கு சொந்தமான பூமிதான நிலம் 3.22 ஏக்கர் இருந்திருக்கிறது. வருவாய் துறையிடம் பேசியவர், கிராம சபை தீர்மானம் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கு அந்த நிலத்தை மாற்றியவர், அங்கு வீடுகளை கட்டியிருக்கிறார். “”கிராமத்துல இருக்குற மொத்தப் பேருக்குமே சொந்த வீடு இருக்கு. அதுல பாதி வீடுகள் சர்க்கார் வீடுங்க. வாடகை வீடுங்கிற கலாச்சாரமே இங்கே கெடையாதுங்க.”இத்தோடு நிற்கவில்லை சாதனைகள். இந்த கிராமத்தில் நூறு சதவீதம் மாணவர்களும் கல்வி பெறுகிறார்கள். இடை நின்ற மாணவர் ஒருவர் கூட கிடையாது. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் சோலார் தெருவிளக்குகள், எல்.இ.டி. விளக்குகள் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் கிடைக்கிறது. தெருக்கள் தூய்மையாகப் பளிச்சிடுகின்றன. இதற்காக மத்திய, மாநில மற்றும் உலக நாடுகள் அளித்திருக்கும் விருதுகள் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை அலங்கரிக்கின்றன. மேலும் விவரம் அறிய (Tamil express news ) படிங்க .
இத்தாலியில் 2ம் உலக போரின் போது வீசப்பட்ட குண்டுகளை செயலிழக்கும் பணி நடைபெற்றது, குண்டு இருக்கும் பகுதியில் இருந்து 54 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இத்தாலியின் பிருந்திசி நகரில் 1941-ம் ஆண்டு 2-ம் உலக போரின் போது பிரிட்டனால் வீசப்பட்ட குண்டு, அண்மையில் அங்குள்ள திரையரங்கத்தை சீரமைக்கும் பணியின் போது கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 2-ம் உலக போரின் போது வீசப்பட்ட குண்டுகள் இன்னும் உள்ளதால், அதனை ரோபோட் மூலம் செயலிழக்கும் பணியில் இத்தாலி ராணுவ வீரர்கள் நேற்று குண்டுகளை செயலிழக்க செய்தனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிருந்திசி நகரில் குண்டு கிடக்கும் பகுதியில் இருந்து சுமார் 1617 மீட்டர் சுற்றளவு பகுதிகளில் வசிக்கும் 54 ஆயிரம் பேர் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவை மூடப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதால் மக்கள் அச்சமைடைத்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடமாக பிலிப்பைன்ஸ் உள்ளது. ஏராளமான தீவை உள்ளடக்கி “நெருப்பு வளையம்” எனப்படும் மிகவும் ஆபத்தான பகுதியில் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது அதனால் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பிலிப்பைன்சின் மிந்தானோ பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆகா பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டடங்கள் குலுங்கியுள்ளன. அதனால் பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் சிலநிமிடங்கள் நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் மக்கள் தொகை அதிகமாக உள்ள தவாவ் பகுதிக்கு தெற்கே உள்ளதால், இந்த நிலநடுக்கத்தால் சேதம் குறைவாக இருக்கும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்த நிலநடுக்கத்தால் ஆன சேதம் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் இந்தியாவிற்கு செல்வதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்ற பட்டத்தை பல தரப்பினர் எதிர்த்து வந்தாலும் குறிப்பாக இந்தியாவின் வட மாநிலங்களில் அதற்கெதிரான போராட்டங்கள் பலமடங்காக வெடித்தன. அசாம், திரிபுராவில் மசோதாவுக்கு எதிராக கடும் போராட்டம் நிலவியது. இதனால் அசாமில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது, ரயில் சேவைகள் முடக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக உலக நாடுகளான, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் தங்களின் நாட்டு குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து பிரிட்டன் அரசு தங்களது மக்களிடம், நீங்கள் ஒருவேளை வடஇந்திய மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், எச்சரிக்கையாக இருங்கள். அப்பகுதியின் ஊடகங்கள் மற்றும் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது . அதேபோல அமெரிக்க தூதரகமும் தங்களது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கனடா அரசு மக்களிடம், உங்கள் பயணம் குறித்து விமான நிறுவனம் அல்லது சுற்றுலாக் கழகத்தின் கருத்தை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என வலியுறுத்தியுள்ளது.
ஒரு தவறும் செய்யாத தன்னை பதவிநீக்கம் செய்ய முயற்சிப்பது நியமல்ல என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்கட்சியினரை சாடியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப், அடுத்து வரப்போகும் அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டிபோடுவார் என எண்ணப்படும் ஜோ பிடன் மீது உள்ள ஊழல் குற்றங்களை விசாரிக்குமாறு, உக்ரைன் அரசிடம் வேண்டுகோள் விடுத்ததாக அதிபர் ட்ரம்ப் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டிரம்பை பதவிநீக்கம் செய்வதற்காக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. சமீபத்தில் பதவி விலக்கதிற்க்கான அந்த தீர்மானமானது தற்போது எதிர்கட்சியாக உள்ள ஜனநாயக கட்சி உறுப்பினர்களை அதிக பெரும்பான்மையாக கொண்டுள்ள பிரதிநிதிகளின் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்மனம் குறித்து அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், எந்த ஒரு தவறும் செய்யாத என்னை பதவிநீக்கம் செய்ய முயற்சிப்பது நியாயமல்ல, வெறுக்கத்தக்க கட்சியாக உருவெடுத்துள்ள ஜனநாயக கட்சியினர் நாட்டிற்கு தீங்கானவர்கள் என கடுமையாக சாடியுள்ளார்.
நேரலையின் போது தொகுத்து வழங்கி கொண்டிருந்த பெண் செய்தியாளரின் பின்புறம் தட்டியதால் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் ஜார்ஜியா நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வை பெண் செய்தியாளராக அலெக்ஸ் போஜார்ஜியன் நேரலையாக தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அப்போது மாரத்தானில் ஓடிக்கொண்டிருந்த போட்டியாளர்கள் கேமராவின் முன் வந்து கைகளை காட்டி, முகங்களை கேமரா முன்கொண்டுவந்து சேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதை சமாளித்துக்கொண்டு செய்தியாளர் தொகுத்து வழங்கி கொண்டு இருந்தார். தீடீரென ஒரு நபர் பெண் செய்தியாளரின் பின்புறம் தட்டவே, அதிர்ச்சியடைந்த பெண் உறைந்து நின்றார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவானதால், நேரலையாக போய்க்கொண்டு இருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவவே அந்த நபர் மாட்டிக்கொண்டார்.
அவர் பெயர் தாமஸ் கால்வே 43 வயதான இவர் ஜார்ஜியா நாட்டின் இளைஞர் நலத்துறை அமைச்சர் என தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளார். இந்த வீடியோ வைரலானதால், பெண்ணின் பின்புறம் தட்டிய அவருக்கு, பலர் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவர் வெள்ளிக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய கால்வே, “நான் அந்த பெண்ணை முதுகில் தான் தட்டினேன் ஆனால் அது தவறுதலாக வேறு எங்கேயோ பட்டுவிட்டது, நான் வேண்டும் என்றே தவறான நோக்கத்தில் இதனை செய்யவில்லை. நான் தவறாக நடந்திருந்தால் அந்த பெண் செய்தியாளர் எனது மன்னிப்பை ஏற்கவேண்டும்” என கூறினார்.
இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மற்ற நாடுகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கவேண்டாம் என இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் அறிவுறித்தியுள்ளார்.
புதுசேரியில் மத்திய அரசு பிரான்ஸ் நாட்டின் உதவியோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொழில்நுட்ப வசதிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விஷயம் காரணமாக புதுச்சேரி வந்த இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனெய்ன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சட்டப் பேரவையில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பற்றி பேசிய இம்மானுவேல், கூறியதாவது, “இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு”, இந்தியாவின் ஜனநாயக அமைப்பை பிரான்ஸ் மதிக்கிறது. மேலும் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மற்றும் குடிமக்கள் பதிவேடு போன்ற இந்தியாவின் அரசாங்கத்தில் நிலவும் இந்தியாவின் உள்நாட்டு விவாதங்களில் மற்ற நாட்டு அரசாங்கங்கள் தங்களது கருத்துகளை கூறுவதை தவிர்க்கவேண்டும். அத்துடன் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அதேபோல காஷ்மீர் பிரச்சனையில் அதில் தொடர்புடைய இரு நாடுகள் பேசி முடித்து கொள்ள இயலும். அந்த பிரச்சனையை சர்வதேசமயமாக்குவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என கூறினார்.
அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை போனஸாக அறிவித்து ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் மேரிலாந்தை தலையிடமாக கொண்ட, செயின்ட் ஜான் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எட்வர்ட் செயின்ட் ஜான் என்பவர் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தன்னிடம் வேலை செய்யும் 200 ஊழியர்களுக்கு ரூ.70 கோடியை (10 மில்லியன் பவுண்ட்) போனஸாக அறிவித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் சாதனைகள் குறித்த விழாவில் அவர் இந்த அறிவிப்பை அறிவித்தது மட்டுமல்லாமல், அந்த நிகழ்ச்சியிலேயே சில ஊழியர்களுக்கு ரூ.35 லட்சத்தை போனஸாக வழங்கியுள்ளார். தொடர்ந்து மற்ற ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளார்.
இதனால் சந்தோஷத்தில் திளைத்த ஊழியர்கள் எங்கள் வாழ்க்கையின் மாற்றத்திற்கு இந்த நிறுவனம் உதவும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பேசிய நிறுவன உரிமையாளர் ஜான், எங்கள் நிறுவனத்தில் தங்களின் கடின உழைப்பையும். தங்களின் அர்ப்பணிப்பையும் தந்த ஊழியர்களுக்கு எனது நன்றியை காட்ட இதை விட சிறந்த வழி இல்லை, எனவும் அவர்கள் இல்லாமல் இந்த நிறுவனமே இல்லை எனவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
வடசீனாவில் பேர்ல் நதி பாயும் ஹாய்ஷூ நகரத்தில் இருந்த சாம்சங் தொழிற்சாலை மூடப்பட்டதால் அந்த நகரமே தற்போது பேய் நகரம் போல காட்சியளிக்கிறது .
30 ஆண்டுகளாக, சாம்சங் தொழிற்சாலை ஒன்று ஹாய்ஷூ நகரில் செயல்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் மாதம் திடீரென இழுத்து மூடப்பட்டு, சாம்சங் நிறுவனமானது இந்தியா மற்றும் வியாட்நாமுக்கு மாட்டப்பட்டு விட்டது. இதன் விளைவாக இந்த தொழிற்ச்சாலையை மையமாக கொண்டு செயல் பட்டு வந்த 60% சிறுசிறு நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவைகளும் இழுத்து முடப்பட்டுள்ளன. பிரமாண்டமாகவும், பரபரப்பாகவும் செயல்பட்டுவந்த சாம்சங் தொழிற்சாலை மூடப்பட்டதால், அதில் பணியாற்றிவந்த தொழிலாளர்களும் அந்நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இத்தனைநாள் பாப்பரப்பாக இயங்கிவந்த 60 சதவீத சிறு நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவை மூடப்பட்டதால் அந்த நகரமே ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.