சினிமா

ஜேசன் சஞ்சயின் முதல் படம்.. மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. ஹீரோ அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Quick Share

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் மூலம், இந்த படத்தின் ஹீரோ குறித்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் திரைத்துறை பற்றிய படிப்பை முடித்த நிலையில், அவர் ஹீரோவாக நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதன் அடிப்படையில், அவரது முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஹீரோ தேடும் பணியில் இருந்த ஜேசன் சஞ்சய், இறுதியாக சந்தீப் கிஷானை ஹீரோவாக முடிவு செய்துள்ளார். இன்று வெளியான மோஷன் போஸ்டர் இதை உறுதி செய்துள்ளது.

சந்தீப் கிஷன் ஹீரோவாக, ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், தமன் இசையில், பிரவீன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் என்று மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்யின் தவெகவில் இணைந்த ‘வாழை’ பட நடிகர்.. மாரி செல்வராஜ் உறவினர்..

Quick Share

இயக்குனர் மாரி செல்வராஜின் உறவினர் மற்றும் அவர் இயக்கிய ’வாழை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடத்தினார். அந்த மாநாடு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநில மாநாட்டிற்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தாலும், அவருடைய கட்சியில் யாரும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாடி பாலாஜி உள்பட ஒரு சில நட்சத்திரங்கள் மட்டுமே அவரது கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் ’வாழை’ திரைப்படத்தில் நடித்த பொன்வேல் என்ற நடிகர், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். இவர் மாரி செல்வராஜின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்ததாகவும், அவருக்கு கட்சி கொடி அணிவித்து, தமிழக முன்னேற்றக் கழக நிர்வாகிகள் வரவேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தங்கத்தில் மாலை, 8 லட்ச புடவை என திருநெல்வேலியை கலக்கிய நடிகர் வேல ராமமூர்த்தி பேத்தி த...

Quick Share

தமிழ் திரையுலகில் வலம் வரும் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் தான் வேல ராமமூர்த்தி. கிடாரி, கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலம் ஆனார்.

வேல ராமமூர்த்தியின் பேத்தியின் திருமணம் பற்றிய தகவல் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த திருமணத்தில் மணமகன் மற்றும் மருமகள் தங்கத்தால் ஆன மாலையை அணிந்துள்ளனர்.

திருமணத்திற்காக மணமகள் அணிந்திருந்த உடைகள் மட்டும் ரூ. 10 லட்சத்திற்கு மேல் எனக் கூறப்படுகிறது. அதன்படி, மணமகளின் புடவை ரூ. 8 லட்சம் எனவும், அவர் அணிந்திருந்த பிளவுஸ் ரூ. 3 லட்சம் எனவும் கூறப்படுகிறது.

மணமகளுக்கு சீராக 300 சவரன் நகைகள் வழங்கப்பட்டதாகவும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தனுஷ் விவாகரத்து: மறைமுகமாக தாக்கி பதிவிட்டாரா நயன்தாரா?

Quick Share

நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர் இடையே நடந்து விரும் பிரச்சனை ஏற்கனவே நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. நானும் ரௌடி தான் படத்தின் பகுதியை தனது அனுமதி இல்லாமல் நயன்தாரா மற்றும் நெட்பிலிக்ஸ் பயன்படுத்திவிட்டதாக தனுஷ் தற்போது நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாரா இன்ஸ்டாவில் கர்மா பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

“கர்மா என்ன சொல்கிறது என்றால்.. நீ பொய்களால் ஒருவரது வாழ்க்கையை அழித்தால், அதை கடனாக வைத்துக்கொள். அது வட்டியுடன் திரும்ப வரும்” என நயன்தாரா பதிவிட்டு உள்ளார்.

தனுஷுக்கு நீதிமன்றம் சமீபத்தில் விவாகரத்து வழங்கி இருக்கும் நிலையில், அதை தாக்கி தான் நயன்தாரா பதிவிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒல்லியாக மாறிய அஜித்!

Quick Share

அஜித் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பொங்கல் ரிலீஸ் என தயாரிப்பாளர்கள் அறிவித்து இருக்கின்றனர். ஆனால் அதில் எந்த படம் வரும், எந்த படம் பின்வாங்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அஜித் இந்த படங்களின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் நடிகர் அஜித் ஷூட்டிங்கிற்காக தனது எடை 15 கிலோவை குறைத்து இருக்கிறார். அவர் ஒல்லி லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சொர்க்கவாசல் திரைவிமர்சனம்

Quick Share

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் Swipe Right Studios; Think Studios இணைந்து தயாரித்துள்ள சொர்க்கவாசல் படம் இன்று வெளிவந்துள்ளது.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. 

கதைக்களம்

மெட்ராஸ் மத்திய சிறையில் கைதியாக இருக்கும் செல்வராகவன், சிறைக்குள் இருந்து கொண்டே ஒட்டுமொத்த சென்னையையும் ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கிறார். கட்டபஞ்சயத்து, போதை மருந்து என பலவிதமான குற்றங்களையும் செய்து வருகிறார்.

செல்வராகவனின் சாம்ராஜ்யத்தின் கதை ஒரு பக்கம் நகர, மற்றொரு புறம் ஆர்.ஜே. பாலாஜியின் கதை துவங்குகிறது. கையேந்தி பவன் வைத்து நடத்தி வரும் ஆர்.ஜே. பாலாஜி, புதிதாக ஹோட்டல் திறக்க வேண்டும், தான் காதலிக்கும் பெண்ணை கரம் பிடிக்க வேண்டும், அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கனவுகளுடன் இருக்கிறார்.

இந்த சமயத்தில் திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்ட பாலாஜி, செல்வராகவன் இருக்கும் சென்னைக்கு சிறைக்கு கொண்டு வரப்படுகிறார். தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் ஆர்.ஜே. பாலாஜி ஏன் கைது செய்யப்பட்டார். இதற்கும் செல்வராகவனுக்கு என்ன சம்பந்தம்? இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. 

படத்தை பற்றிய அலசல்

மெட்ராஸ் மத்திய சிறையில் 1999ல் நடந்த கலவரத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத்.

எடுத்துக்கொண்ட கதைக்களம், அதை விறுவிறுப்பான ஆக்ஷன் நிறைந்த திரைக்கதையில் கொண்டு வந்த விதம் என படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். எந்த இடத்திலும் தொய்வு இல்லை. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது.

இதுவரை நகைச்சுவை நாயகனாக மட்டுமே நடித்து நம்மை பொழுதுபோக்க செய்த ஆர்.ஜே. பாலாஜி, முதல் முறையாக தனது மறுபக்கம் நடிப்பையும் இப்படத்தில் வெளிக்காட்டியுள்ளார். சிறையில் அவர் படும் கஷ்டங்கள், சொல்லமுடியாத துன்புறுத்தல்கள், பயம், கோபம் என அனைத்து இடங்களிலும் அவர் நடித்து விதம் அருமையாக இருந்தது.

சிறையில் இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடக்கிறதா என வடசென்னை படத்தை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும். அதே போல் சொர்க்கவாசல் படத்திலும் பல ஆச்சரியங்களை வைத்துள்ளார் இயக்குனர் சித்தார்த்.

சிறைக்கு வெளியில் தான் அரசியல் இருக்கிறது என்றால், சிறைக்கு உள்ளே கூட பதிவுக்காக அரசியல் நடக்கிறது என்பதையும் எடுத்து காட்டியுள்ளார். 

திடீரென கைது செய்யப்பட்ட பாலாஜி, சிறைக்குள் வரும் பொழுது எப்படி இருந்தார், இந்த சிறை அவரை எப்படி மாற்றியது, இதனால் அவர் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்னென்ன, இறுதியில் அவருடைய எண்ணம் மாறிய விதம் என அந்த கதாபாத்திரத்தின் ஆர்க் ரசிக்கும்படியாக இருந்தது.  

செல்வராகவன், சானியா அய்யப்பன், நட்டி நட்ராஜ், ஷரஃப் யு தீன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட அனைவரின் நடிப்பு பக்கா. பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சிகளுக்கும் மிரட்டலான பின்னணி இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, டெக்கனிகள் விஷயங்கள் சிறப்பு.

ஆனால், இப்படம் திரில்லர் ஆடியன்ஸை தவிர, அனைவருக்கும் கனெக்ட் ஆகுமா என்பது தெரியவில்லை. அதுவே இப்படத்தின் மைனஸாக அமைந்துள்ளது. 

பிளஸ் பாயிண்ட்

ஆர். ஜே. பாலாஜி, மற்ற அனைவரின் நடிப்பு

சித்தார்த் இயக்கம் மற்றும் திரைக்கதை

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு

பின்னணி இசை

மைனஸ் பாயிண்ட்

அனைவருக்கும் இப்படம் கனெக்ட் ஆகுமா என்பதே படத்தின் மைனஸ் பாயிண்ட்

மொத்தத்தில் சொர்க்கவாசல் எதிர்பார்க்காத நேரத்தில் திறக்கும், அதை பயன்படுத்தினால் வரம், இல்லையென்றால் அது சாபம்.. 

பிரபல நடிகை சமந்தாவின் அப்பா ஜோசப் காலமானார்..சமந்தாவின் எமோஷனல் பதிவு!!

Quick Share

பிரபல நடிகை சமந்தாவின் தந்தை இன்று காலமானார்.. இந்த தகவலை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. இதை பார்த்ததுமே ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, சமந்தாவுக்கு ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா… தமிழ், தெலுங்கில் பல சூப்பர் டூப்பர் படங்களில் நடித்தவர்.. தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இந்த திருமணம் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2021-ம் ஆண்டு தம்பதி இருவருமே பிரிந்துவிட்டனர். இதனால் தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளானர்கள். அப்போது சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு சொல்லும்போது, “இந்த விவாகரத்து சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.. இதை பற்றி கேள்விப்பட்டதுமே என்னுடைய மனம் செயலற்று போய்விட்டது. எல்லா பிரச்சனைகளும் சில நாட்களில் சரியாகி விடும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் என் மகள் அவரது பக்கமுள்ள விளக்கங்களை சொல்லி என்னை சமாதானமே செய்தார்.. என்னுடைய மகள் இதை நன்றாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருப்பார்” என்று கூறியிருந்தார். விவாகரத்து: விவாகரத்துக்கு பிறகு, தொடர்ந்து படங்களில் நடித்த வந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தீவிரமான சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிறிது காலம் நடிப்பிலிருந்து ஓய்வெடுத்தார்.. பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

எனினும், நடிகை சமந்தா தன்னுடைய வாழ்நாளில் நடந்த பல விஷயங்களை வெளிப்படையாக அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.. சமீபத்தில்கூட தன்னுடைய தந்தையை பற்றி கூறியிருந்தார்.. “காஃபி வித் கரண் சீசன் 7” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவிடம், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் உங்களது கனவா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேற்படிப்பு: அதற்கு சமந்தா, “என்னுடைய கடனைத் திருப்பிச் செலுத்தமாட்டேன் என்று என்னுடைய அப்பா சொல்லிவிட்டார்.. என்னுடைய மேற்படிப்புக்கு பணம் செலுத்த எனது குடும்பத்திடம் பணம் இல்லை. அதனால், நான் வேறு வழியின்றி சினிமாவில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. உன் கடனை என்னால் செலுத்த முடியாது” என்று என் தந்தை கூறிய அந்த தருணம் தான் என் வாழ்க்கையை மாற்றியது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தெலுங்கு – ஆங்கிலோ இந்தியனான ஜோசப் பிரபு இன்று திடீரென உயிரிழந்துள்ளார். இந்த தகவலை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. “அதை குறிக்கும் விதமாக, ‘Until we meet again Dad’ என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு “மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா” என கனத்த இதயத்துடன் பதிவிட்டுள்ளார் சமந்தா.

இதையடுத்து, சமந்தாவுக்கு ரசிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.. பலரும் சமந்தாவுக்கு ஆறுதலையும் சொல்லி வருகிறார்கள்.. சமந்தாவின் தந்தை இறந்த செய்தி, தமிழ், தெலுங்கு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சமந்தாவின் தந்தையின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

மாறி மாறி வாழ்த்து சொல்லும் அஜித் – உதயநிதி..

Quick Share

கடந்த சில வாரங்களுக்கு முன்பு துபாயில் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பதிலாக, நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்கு அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதி மற்றும் அஜித் இருவரும் மாறி மாறி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டதை கண்ட நெட்டிசன்கள், “இதன் பின்னணி என்ன?” என இணையதளங்களில் பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு துபாயில் நடைபெற உள்ள கார் பந்தயத்திற்காக அஜித் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கு வாழ்த்து கூறினார். மேலும், அஜித்தின் கார் பந்தய புகைப்படம் ஒன்று நேற்று வெளியானது. அந்த புகைப்படத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ காணப்பட்டு, அது கவனம் ஈர்த்தது.இந்நிலையில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது 47வது பிறந்த நாளை கொண்டாடினார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும், திரையுலக பிரபலத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்த அஜித், முதல் முறையாக உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அஜித்தின் நெருங்கிய நண்பர் விஜய், “தமிழக வெற்றி கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கி, திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வரும் நிலையில், திமுகவின் முக்கிய தலைவரான உதயநிதிக்கு அஜித் வாழ்த்து தெரிவித்திருப்பது பல்வேறு யூகங்களை சமூக வலைதளங்களில் எழுப்பி வருவதோடு, அஜித்தின் எதிர்கால திட்டம் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசின் லோகோ.. ரேஸ்க்கு தயாராகும் அஜித்.. குவியும் தமிழக ரசிகர்களின் வாழ்த்து!!!

Quick Share

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ உடன் நடிகர் அஜித் கார் ரேஸுக்கு தயாராகும் கார் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் அஜித் தற்போது “விடாமுயற்சி” மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. வரும் பொங்கல் தினத்தில் ’குட் பேட் அக்லி’ திரைப்படமும், அதனை அடுத்து சில மாதங்களில் ’விடாமுயற்சி’ படமும் வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐரோப்பியாவில் நடைபெறும் கார் ரேஸில் அஜித் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அவர் போர்ஷே 911 GT3 RS என்ற காரை தயார் நிலையில் வைத்துள்ளார்.

அந்தக் காரில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவும் உள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் மோட்டார் ரேஸிங் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அஜித் பெயரில் ஒரு அணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணி அஜித் தலைமையில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா 44 படத்திற்கு வந்த சிக்கல்!

Quick Share

சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன திரைப்படம் கங்குவா. இப்படம் வெளிவந்து நெகடிவ் விமர்சனங்களை சந்தித்ததால் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறாமல் தோல்வி அடைந்தது. அடுத்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதே நேரத்தில் சூர்யா ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து விட்டார். தற்போது சூர்யா 44 படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகின்ற நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகின்றது.

இந்நிலையில், சூர்யா 44 படத்தின் டைட்டில் விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வலம் வருகிறது. அதாவது, சூர்யா 44 படத்திற்கு “கல்ட்” என பெயர் வைக்க யோசித்துள்ளாராம் இயக்குனர்.

ஆனால், இந்த தலைப்பை நடிகர் அதர்வா, அவர் இயக்க போகும் படத்திற்காக பதிவு செய்துள்ளாராம். அதனால் படக்குழு அதர்வாவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள்.

ஆனால், அதர்வா தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், கார்த்திக் சுப்புராஜ் தற்போது வேறொரு டைட்டிலை தேடி வருகிறாராம்.

சீனாவில் 5 நாட்களில் மகாராஜா படம் செய்துள்ள வசூல்!

Quick Share

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் மகாராஜா. இப்படத்தை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். வித்தியாசமான திரைக்கதையில் உருவாகி இருந்த இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து, பிக் பாஸ் சாச்சனா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த ஜூன் மாதம் வெளிவந்த இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் டாப் 10 படங்கள் என்று லிஸ்ட் எடுத்தால், அதில் கண்டிப்பாக மகாராஜா படமும் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

கடந்த வாரம் மகாராஜா படத்தை சீனாவில் ரிலீஸ் செய்திருந்தனர். 40 ஆயிரம் திரையரங்கங்களில் வெளிவந்த இப்படம், 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகாராஜா படம் சீனாவில் 5 நாட்களில் ரூ. 4.15 கோடி வசூல் செய்துள்ளது.

வில்லன் நடிகருக்கு 47 வயதில் திருமணம்..

Quick Share

வில்லன் நடிகர் சுப்பாராஜு திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சுப்பா ராஜு. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இதற்கமைய தமிழில் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சமி, போக்கிரி, பில்லா ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படங்களில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டி ரசிகர்களை தன்வசப்படுத்தியிருப்பார்.

இதனை தொடர்ந்து பிரமாண்ட செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி 2 படத்தில் அனுஷ்காவின் முறைப்பையனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பிரபலங்கள் திருமணம் செய்து வருகிறார்கள்.

அந்த வரிசையில், 47 வயதாகும் சுப்பா ராஜுன் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

திருமண புகைப்பட பதிவில், “இறுதியில் வென்றது” என்ற கேப்ஷன் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website