மதுரை

மதுரையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் தீவிபத்து…

Quick Share

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடத்தில் மார்ச் 1ஆம் தேதி புதன்கிழமை பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மார்ச் 1ஆம் தேதி புதன்கிழமை அந்தக் கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். குறைந்தது நான்கு பேர் காயமடைந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

கடையை தாற்காலிகமாக மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மாதங்களில் கடை தீப்பிடித்தது. அந்த மனுவில், மதுரையைச் சேர்ந்த ஆர்வலர் ஹென்றி டிபக்னே, மற்ற பிரச்சினைகளுடன், அந்த நேரத்தில் கட்டிடத்தில் அவசரகால வெளியேற்றம் இல்லை என்று எடுத்துரைத்தார். CrPC (குற்றவியல் நடைமுறைச் சட்டம்) பிரிவு 133 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு இப்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, தீ விபத்து குறித்து புகாரளிக்கப்பட்ட உடனேயே, மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தின் விசாரணையை இன்னும் முடிக்கவில்லை என்று ஹென்றி கூறினார்.மதுரை மாநகர காவல்துறை ஆணையர் கே.எஸ்.நரேந்திரன் நாயர், கட்டிடத்திற்குள் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் டிஎன்எம் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் மேலும், இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது, ஆனால் விசாரணை நடந்து வருகிறது.

அம்மா -அப்பா அடிக்கடி சண்டை போடுவதால் மனமுடைந்து மகன் தற்கொலை..துக்கம் தாளாமல் தந்தையும...

Quick Share

மகன் தற்கொலை செய்துக்கொண்ட சோகத்தில், தந்தையும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம், மேலூர் அருகே சின்னகற்பூரம் பட்டியை சேர்ந்தவர் அழகன். இவர் மேலவளவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி நாச்சம்மாள்.

அழகன் – நாச்சம்மாள் தம்பதியினருக்கு தமிழ்வாணன் என்ற மகன். இவர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் மூவரும் மேலூர் காந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

அழகனுக்கும், அவரது மனைவி நாச்சமாளுக்கும்  இடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் மகன் தமிழ்வாணன் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். பலமுறை தமிழ்வாணன் தன் அம்மா மற்றும் அப்பாவை கண்டித்துள்ளார். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தாய் நாச்சம்மாள் மற்றும் தந்தை அழகன் இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். தேர்விற்கு படித்துக் கொண்டிருந்த தமிழ்வாணன் இதன்காரணமாக அதீத மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவர்களது வீட்டில் அங்கிருந்த கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் நாச்சம்மாள் மற்றும் அழகன் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும், அதிர்ச்சியும் துக்கமும் தாளாமல், அழகன் வீட்டினுள் சென்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் காவல்துறையினர் விரைந்துவந்து இருவரது உடலையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனஇருவரின் தற்கொலைக்கும் குடும்ப பிரச்சினை மட்டும்தான் காரணமா? வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

  

இறந்த பெண்ணிற்கு மீண்டும் உயிர்! மருத்துவம் படித்த மகன்களுடன் கணவன் செய்த காரியம்

Quick Share

உயிரிழந்த மனைவிக்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என நம்பி சடலத்தை வீட்டில் வைத்திருந்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் சடலத்தோடு 3 நாட்கள் வசித்த குடும்பம்

தமிழகத்தில் மதுரையில் வசித்து வந்த தம்பதி பாலகிருஷ்ணன் – மாலதி. இவரின் மூத்த மகன் ஜெய்சங்கர் மருத்துவ படிப்பை முடித்த நிலையில், இளைய மகன் சிவ சங்கர் மூன்றாமாண்டு மருத்துவபடிப்பு படித்து வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதம் மாறி பகுதி நேரம் போதக ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் மாலதி கடந்த 8ஆம் திகதி உயிரிழந்தார். அவர் இறப்பு குறித்து பாலகிருஷ்ணன் மற்றும் மகன்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்ததோடு சடலத்தை வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தனர்.

பொலிசாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

அக்கம்பக்கத்தினர் இது குறித்து கேட்ட போது ஏதேதோ கூறி சமாளித்த நிலையில் மூன்றாவது நாளும் சடலத்தை வைத்திருந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அங்கு வந்த போது தற்கொலை மிரட்டல் விடுத்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரின் மகன்கள் மாலதி மீண்டும் மூன்றாவது நாள் உயிர்த்தெழுவார் என நம்பி ஜெபம் செய்தது தெரிந்தது.

இதை கேட்ட பொலிசார் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் பொலிசார் வீட்டுக்குள் சென்று சடலத்தை மீட்டு மாலதி சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். மருத்துவ படிப்பு படித்த மகன்களுடன் சேர்ந்து பாலகிருஷ்ணன் இவ்வாறு செய்தது அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தொடரும் தற்கொலை!! செல்போன் தராததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

Quick Share

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த குதிரைசாரி குளம் பகுதியை சேர்ந்தவர் தில்லையப்பன். இவரது மகள் முத்து பிரியா (17). இவர் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், முத்துபிரியா படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி செல்போனில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்து படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அவரிடம் இருந்து செல்போனையும் வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர். 

இதனால் மன வேதனையடைந்த முத்துபிரியா, பெற்றோரிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தரவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட முத்துபிரியா, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு பெற்றோர் மற்றும் உறிவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து, வாளியில் சடலத்தை மறைத்து வைத்த தாய்!! அதிர்ச்ச...

Quick Share

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள சோலை அழகுபுரம்பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து, பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து அதே பகுதியில் தையல் கடையில் டெயிலராக வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் வேலை செய்கிறார். 

கடந்த செப்.23ம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது 8 வயது சிறுமி, கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் கடந்த சில வருடமாக காளிமுத்து அவரது மனைவி பிரியதர்ஷினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, 2 வாரமாக தலைமறைவாக இருந்த காளிமுத்துவை, போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை மகளிடம் சொல்லி புலம்பியதாகவும், அதற்கு மகள் நாம் சாகலாம் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மகளின் பேச்சை கேட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சடலத்தை வாளியில் வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தார். பிறகு ரயிலில் விழுந்துசாகலாம் என புறப்பட்ட அவர், பயத்தில் சாக முடியாமல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு: முதலிடம் பிடித்து மதுரை மாணவன் சாதனை!

Quick Share

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. நீட் தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், 9.03 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை மதுரையை சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா நீட் நுழைவுத் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று அகில இந்தியா தரவரிசையில் 30ஆவது இடத்தையும், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் திரிதேவ் விநாயகா. “நீட் தேர்வில் வெற்றி பெற 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தேன். அப்போது கருத்துகளைப் புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றியதால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.” என்றார்.

கேள்வி வங்கிகளை ஆன்லைனில் கூர்ந்து படித்ததாக தெரிவித்துள்ள மாணவர் திரிதேவ் விநாயகா, தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்த மெய்நிகர் ஊக்க அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டதாகவும், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோர் ஆதரவு காரணமாக தான் இந்த நிலையை எட்ட முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குடிக்க பணம்தர மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்…

Quick Share

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீசவலு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்ற சுப்பையா (30). மனைவி செல்வியுடன் வசித்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முருகன் குடிகாரனாகத் தோன்றுகிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன், குடிப்பழக்கத்திற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து மனைவி பணத்தை தர மறுத்துவிட்டார். குடிபோதையில் முருகன் தனது மனைவி செல்வியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில், பலத்த காயமடைந்த திரு.செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கணவர் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தற்போதைய விசாரணை மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்பு நடந்தது. இதையடுத்து முருகன் என்ற சுப்பையா மீதான குற்றச்சாட்டுகள் வாதங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

கோவிலில் அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்த பக்தர் பலி!

Quick Share

அம்மனுக்கு காய்ச்சிய கொதிக்கும் கூழில் தவறி விழுந்து பக்தர் பலியானார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

இந்த கோவிலில் கடந்த வெள்ளியன்று பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களை வைத்து அம்மனுக்கு கூழ் காய்ச்சும் பணி நடைபெற்றது. அப்போது முத்துக்குமார் என்கின்ற முருகனுக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு வந்ததால் நிலைதடுமாறி கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார். 

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 65 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

ஒருதலைக்காதலால் தற்கொலை செய்த மகனுக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்த...

Quick Share

மதுரை அருகே ஒருதலைக்காதலால் தற்கொலை செய்த மகனுக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கீரைத்துறை ஆதி மூலம் பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது ஒரே மகன் சிவானந்த மணி(வயது 21). இவர் திருப்பாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சில வருடங்களாக சிவானந்த மணி அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் அந்தப் பெண் அவரது காதலை ஏற்கவில்லை. இதனால் விரக்தியிலிருந்த சிவானந்த மணி கடந்த சில நாட்களாக யாருடனும் சரியாக பேசவில்லை. எதையோ இழந்தது போல் இருந்துள்ளார். கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்த சிவானந்த மணியிடம் பெற்றோர்கள் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர். 

ஆனால் அவர் எதுவும் இல்லை எனக்கூறி மறுத்துவிட்டார். இந்த நிலையில் காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சிவானந்த மணி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிவானந்த மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஒரே மகன் என்பதால் கணேசனும் அவரது மனைவியும் அதிக பாசம் வைத்து சிவானந்த மணியை வளர்த்தனர்.

ஆனால் மகனின் திடீர் தற்கொலை அவர்களை கதிகலங்க செய்துவிட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவரின் உடலை குடும்பத்தினரும் போலீசார் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்குகள் நடந்தது. சுடுகாட்டில் தான் பாசமாக வளர்த்த மகனின் உடலுக்கு கணேசன் மனதை கல்லாக்கி தீ வைத்தார். அப்போது அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 

இதைத் தொடர்ந்து உறவினருடன் வீட்டுக்கு வந்த கணேசன், சிறு வயதிலேயே மகன் இறந்து விட்டானே என்று புலம்பியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த கணேசன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். 

மகன் இறந்த சோகம் தீராத நிலையில் தந்தையும் மாரடைப்பால் இறந்தது குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவல் அறிந்த கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் சம்பவ இடத்துக்கு வந்து கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காதல் தோல்வியால் மகன் தற்கொலை செய்து கொள்ள, மகனின் சாவை தாங்கிக் கொள்ளாத தந்தை மாரடைப்பால் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்களிடம் பாலியல் மோசடி…!

Quick Share

மதுரையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்களை ஏமாற்றிய 2பேர் கைது செய்யப்பட்டனர். கே.புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அனுப்பானடி கவிபாலனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கிப் பழகியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், மாணவி அளித்த புகாரின் பேரில் கவிபாலன் கைது செய்யப்பட்டார். 

சிவகங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக மதுரை முகமது பைசல் என்பவ ர் மீது புகார் கொடுத்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

சொத்துக்காக கூலிப்படையை வைத்து தந்தையை கொலை செய்த ‘கொடூர’ மகள்..!

Quick Share

மதுரையில் சொத்துக்காக கூலிப்படையை வைத்து தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

மதுரை மாநகர் சின்ன சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணாராம்- பங்கஜவள்ளி. இவர்கள் இருவரும் தங்களது வளர்ப்பு மகள் நிவேதாவுடன் வசித்து வந்தனர். இதற்கிடையே, மகள் நிவேதா, ஹரிகரன் என்பவரை காதலித்துள்ளார். இந்த காதலில் சொந்த மகளை போல வேண்டியதை செய்து கொடுத்த கிருஷ்ணாராம், மகள் ஆசைபட்ட நபருக்கே அவரை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு நிவேதா – தந்தையுடன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டது. இதனால் நிவேதா தனது கணவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

இந்நிலையில், நேற்று காலை வீட்டின் மேல் அறையில் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணாராம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதனையடுத்து மனைவி பங்கஜவள்ளி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல் துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் கொலையுண்ட கிருஷ்ணராமின் வளர்ப்பு மகளான நிவேதா, அவரது கணவர் ஹரிகரன் மற்றும் நண்பர் சுரேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து மேல் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணராமை கத்தியால் குத்தி கொலை கொடூரமாக செய்தது தெரியவந்தது. பின்னர், வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். 

இதையடுத்து வளர்ப்பு மகள் நிவேதா அவரது கணவர் ஹரிகரன், மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகிய 3 பேரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். 

சொத்து மற்றும் நகைக்காக குழந்தையிலிருந்து வளர்த்த தந்தையை, வளர்ப்பு மகளே படுகொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகளின் சண்டை… விசில் அடித்து கொண்டாடிய மாணவர்கள்… வைரல் வீடியோ

Quick Share

மதுரை பெரியார் பஸ் ஸ்டேண்டில் பள்ளி மாணவிகள் மோதிக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமீப காலமாக அரசு பள்ளி மாணவர்கள் பொது இடங்களில் அடித்து கொள்வதும், வகுப்பறையில் ஆசிரியர்களை மிரட்டுவதும் கை ஓங்குவதுமான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இப்படி பல மாணவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

இருப்பினும், ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் குஷியாக இருந்த மாணவர்களுக்கு சஸ்பெண்ட் நடவடிக்கை மேலும் குஷியை தான் தரும் என்கின்றனர் ஆசிரியர்கள். 

அது மட்டுமல்லாமல், மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் வழக்கம்போல தேர்வெழுதலாம் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருப்பது சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு போனஸ் கொடுத்ததை போல உள்ளது.

இந்த நிலையில், நாங்களும் சலித்தவர்களும் இல்லை என்று அரசு பள்ளி மாணவிகள் பஸ் ஸ்டேண்டில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுப்பட்ட சம்பவம் சில தினங்களாக வைரலாகி வருகிறது. மதுரையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதுரையின் முக்கிய பேருந்து நிலையமான பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவிகள் குழுக்களாக பிரிந்து அடித்துக்கொள்கின்றனர்.

அதை சக மாணவர்கள் விசில் அடித்து தியேட்டரில் படம் பார்பதைபோல கொண்டாடுகின்றனர். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ…. இந்த மாதிரியான அட்டூழியம் அன்கொன்று இங்கொன்றாக நடந்து வந்த நிலையில் ஊரடங்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்துதான் அதிகமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website