Uncategorized

ஷேன் வார்னே மறைவிற்கு இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து இரங்கல்!

Quick Share

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக  இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே,  நேற்று மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட் மார்ஷ் உயிரிழந்தார்.
ஒரே நாளில் இரு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில்  மறைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்ன் மற்றும் ரோட் மார்ஷ் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இந்திய அணி வீரர்கள் இன்றைய நாள் ஆட்டத்தில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இந்த தகவலை பி சி சி ஐ தெரிவித்தது.

பாலா படத்தில் நடிக்கவுள்ள சூர்யா – ஜோதிகா ஜோடி!

Quick Share

தற்போது பாலா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சூர்யா. தனது 2டி நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் பாலாவின் இந்த கதையில் ஜோதிகாவும் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்குமுன் சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல், காக்க காக்க போன்ற பல படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் அறிமுகமாகிறார் இயக்குனர் பா.ரஞ்சித்..!

Quick Share

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் பா. ரஞ்சித். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது

தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் இந்தியில் திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு ‘பிர்சா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 
பிர்சா முண்டா 19-ம் நூற்றாண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த, பழங்குடி மக்களுக்காகப் போராடியவர். இந்த படத்தை நமா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஷரீன் மந்திரி, கிஷோர் அரோரா ஆகியோர் தயாரிக்கின்றனர். 

வேர்க்கடலை சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் …அளவுக்கதிகமான வேர்க்கடலை ...

Quick Share

வேர்க்கடலையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமான கொழுப்பின் மூலமாகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். 

இதில் மெக்னீசியம், ஃபோலேட், தாமிரம் மற்றும் அர்ஜினைன் போன்ற கனிமங்கள் உள்ளன. அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், உணவில் தொடர்ந்து வேர்க்கடலை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ளுதல் ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

அந்தவகையில் வேர்கடலையை எவ்வளவு எடுத்து கொள்ளலாம்? அதிகமாக எடுத்து கொண்டால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

ஒரு நாளைக்கு எத்தனை வேர்க்கடலை சாப்பிடலாம்?

  • வேர்க்கடலை வெண்ணெய் போன்ற பல வடிவங்களில் இதை உணவில் சேர்க்கலாம் அல்லது பருப்புகளை அப்படியே சாப்பிடலாம். காய்கள் இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதும். 

  • ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி ஆரோக்கியமான பரிந்துரைக்கப்பட்ட அளவாகும். மாலை நேரத்தில் சிற்றுண்டியாக சாப்பிடுவது சிறந்தது. 

அதிகம் எடுத்து கொண்டால்?

  • வேர்க்கடலையை அதிகளவு எடுத்து கொள்வது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.  

  • வேர்க்கடலையில் அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது. உணவுக் கட்டுப்பாட்டின் போது அதிகப்படியான வேர்க்கடலை சாப்பிடுவது உங்கள் எடை இழப்பு திட்டத்தை சிதைத்து, எடை அதிகரிக்க வழிவகுக்கும். 

  • ஒரே நேரத்தில் அதிகமாக வேர்க்கடலை உட்கொள்வது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கம் ஆகியவை வேர்க்கடலையை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்

  • வேர்க்கடலை ஒவ்வாமை மிகவும் பொதுவானது. குறிப்பாக குழந்தைகளிடையே இந்த ஒவ்வாமை காணப்படும். சிறிய அளவு வேர்க்கடலை கூட சிலருக்கு எதிர்வினையைத் தூண்டலாம் மற்றும் பல அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்: மூக்கு ஒழுகுதல், தொண்டை மற்றும் வாயில் கூச்ச உணர்வு, தோல் பிரச்சினைகள், மூச்சுத் திணறல் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். 

நாட்டு கோழி ரசம் |Nattu Kozhi Rasam Recipe

Quick Share

தேவையான பொருள்கள்:
சின்ன  வெங்காயம்  | small onion – 150 gram
தக்காளி / Tomoto – 4
கருவேப்பிலை ,மல்லி இலை – சிறிதளவு 
நல்லெண்ணெய் / nallennai  – 4 spoon 
கொத்தமல்லி / coriander seeds – 4 spoon 
காய்ந்த மிளகாய் / dry chilli – 2
பூண்டு / poondu – 10 பல்
இஞ்சி  / ginger – சின்ன  துண்டு
மிளகு /pepper – 2  ஸ்பூன்
சீரகம் / cuminseeds – 1 ஸ்பூன்

நாட்டு கோழியை மஞ்சள்தூள் போட்டு நன்கு கழுவி கொள்ளவும்.
பின்பு கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் ,பூண்டு ,இஞ்சி ,மிளகு ,சீரகம் ,கருவேப்பிலை ,மல்லி இலை  அனைத்தையும் போட்டு ஒன்றிரண்டாக இடித்து வைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும் .
மண்பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளியும் சேர்த்து வதக்கி அதனுடன் நாட்டு கோழியும் போட்டு 5 நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விட வேண்டும் 
நன்கு வெந்தவுடன் இடித்த மசாலா போட்டு 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் சூடான நாட்டு கோழி ரசம் ரெடி.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்-ஊசி போட்டு கொலை செய்த மருத்துவ கணவர்.

Quick Share

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ராமேஸ்வரா கிராமத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் சன்னேசப்பா(45). இவரது மனைவி சில்பா(36). இருவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மருத்துவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் அவர் கடந்த பல மாதங்களாக மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். .இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் மனைவி ஷில்பாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது .அப்போது அவரது கணவர் வீட்டில் வைத்தே தனது மனைவிக்கு ஊசி போட்டு சிகிச்சையளித்துள்ளார்.

அந்த ஊசி போட்டதும் ஷில்பா மயக்கமாகி பின் இறந்தார் .உடனே பெண்ணின் பெற்றோர் தகவல் அறிந்து மகளை பார்க்க வந்தனர் .அப்போது அவர் கணவர் செலுத்திய ஊசியால் மகள் இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகமடைந்து போலீசில் புகாரளித்தனர். போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் மனைவிக்கு ஒரு மருந்தை அதிகமாக ஊசியில் செலுத்தி கொன்றதை ஒப்புக்கொண்டார். 

ஆண்களே! ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

Quick Share

இன்றைய காலத்தில் தாடி வைத்துக் கொள்வது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு சோம்பேறித்தனத்தைக் காரணமாகக் கூறலாம். சில ஆண்களுக்கு சரியாக ஷேவிங் செய்யத் தெரியாது.

ஷேவிங் செய்யும் போது பல தவறுகளை செய்வார்கள். இதனாலேயே காயங்கள், எரிச்சல், அரிப்பு, வறட்சி போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.

எப்போதும் ஷேவிங் செய்யும் போது பொறுமை மிகவும் அவசியம். பொறுமையுடன் இல்லாவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும்.

இங்கு ஷேவிங் செய்யும் ஆண்கள் செய்யும் தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தவறுகளால் தான் அவர்கள் ஷேவிங் செய்த பின் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

பல நாட்களாக ஒரே ரேசரைப் பயன்படுத்துவது

பல நாட்களாக ஒரே ரேசரைப் பயன்படுத்தினால், சரியாக ஷேவிங் செய்யாதது போல் இருப்பதோடு, சில நேரங்களில் காயங்களையும் சந்திக்க நேரிடும். மேலும் பழைய ரேசரில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். இதை மீண்டும் பயன்படுத்தும் போது, காயம் ஏற்பட்ட இடத்தில் அந்த பாக்டீரியாக்கள் நுழைந்து மோசமாக்கும். எனவே அடிக்கடி ரேசரை மாற்ற வேண்டியது அவசியம்.

ரேசரை பகிர்ந்து கொள்வது

ஆண்களிடம் உள்ள ஓர் கெட்ட பழக்கம் என்றால் அது தங்களுடைய பொருட்களை நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது தான். இப்படி ரேசரைப் பயன்படுத்தினால், அவர்களின் சருமத்தில் உள்ள கிருமிகள் ரேசரின் வழியே உங்கள் சருமத்திற்கும் நுழைந்து பிரச்சனைகளை ஏற்படுத்தி, முக அழகைக் கெடுக்கும்.

ஷேவ் செய்யும் பகுதியை நீரில் ஊற வைக்காமல்

இருப்பது ஷேவிங் செய்த பின் அப்பகுதி மென்மையாக இருக்க வேண்டுமானால், முதலில் சிறிது நேரம் அப்பகுதியை நீரால் நனைத்து ஊற வைக்க வேண்டும். நேரமில்லாமையால் இந்த காரியத்தை பெரும்பாலான ஆண்கள் செய்வதில்லை. வேண்டுமானால் நீங்கள் குளித்து முடித்த பின், இறுதியில் ஷேவிங் செய்யலாம். இதனால் ஷேவிங் செய்வதும் சுலபமாகும்.

இறந்த செல்களை நீக்குவதில்லை

ஷேவிங் செய்த பின், அவ்விடம் மென்மையாக இருக்க, ஷேவிங் செய்யும் முன் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும். அதற்கு அப்பகுதியை கடலை மாவால் சிறிது நேரம் தேய்த்து கழுவி, பின் 5 நிமிடம் கழித்து ஷேவிங் செய்தால், இறந்த செல்கள் ரேசரில் அடைப்பை ஏற்படுத்துவதைத் தடுத்து, காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கலாம்.

சோப்பைப் கொண்டு ஷேவ் செய்வது

சில ஆண்கள் வீட்டில் ஷேவிங் க்ரீம் இல்லை என்று அவசரத்திற்கு சோப்பைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி சோப்பைக் கொண்டு ஷேவிங் செய்தால், அப்பகுதியில் வறட்சி இன்னும் அதிகரித்து, கடுமையான அரிப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே அவசரத்திற்கு சோப்பைப் பயன்படுத்தாமல், கண்டிஷனரை வேண்டுமானால் பயன்படுத்துங்கள்.

நீரில் அலசுவதில்லை

நேரமாகிவிட்டது என்று சில ஆண்கள் ஷேவிங் செய்யும் போது ஒவ்வொரு முறையும் நீரில் அலசாமல் அப்படியே ஷேவ் செய்வார்கள். இப்படி செய்தால் ரேசரில் முடி, க்ரீம், இறந்த செல்கள் போன்றவை அதிகம் சேர்ந்து காயங்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே ஒவ்வொரு முறையும் தவறாமல் நீரில் ரேசரை அலசி ஷேவிங் செய்யுங்கள்.

அதிக அழுத்தம்

கொடுப்பது தாடி முழுமையாக நீங்க வேண்டுமென்று சில ஆண்கள் அதிக அழுத்தத்தைக் கொடுத்து ஷேவிங் செய்வார்கள். இப்படி செய்வதால் ஷேவிங் செய்த பின் எரிச்சலும், அரிப்பும், சில நேரங்களில் காயங்களும் தான் ஏற்படும். நீங்கள் அழுத்தம் கொடுத்தால் தான் தாடி முழுவதும் நீங்கும் என்பதில்லை. மென்மையாக செய்தாலே ரேசரில் உள்ள பிளேடால் முடி முழுமையாக நீக்கப்படும்.

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதில்லை

ஷேவிங் செய்த பின் அப்பகுதியில் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டியது அவசியம். இச்செயலைத் தவறாமல் செய்தாலே ஷேவிங் செய்த பின் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

உனக்கு எதுக்கு குழந்தை – பெற்ற குழந்தையை உதறிவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் ...

Quick Share

மதுரையை அடுத்த பனங்காடியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கும், ஜெயஸ்ரீ (வயது 24) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2019-ம் ஆண்டில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். பல மாதங்கள் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார், என்ன ஆனார் என தெரியாமல் குடும்பத்தினர் இருந்தனர்.

இந்தநிலையில் தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் சரவணன் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால் ஜெயஸ்ரீ எங்கு இருக்கிறார் என போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் சமீபத்தில் அவர் சென்னையில் ஒரு ஓட்டலில் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

பின்னர் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய பள்ளித்தோழியான துர்காதேவியுடன் வாடகை வீட்டில் வசிப்பதாக தெரிவித்தார்.

அப்போது நடந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஜெயஸ்ரீ படித்தார். அங்கு சக மாணவி துர்காதேவியுடன் நெருங்கி பழகியுள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் காதலன்-காதலியை போல இருந்துள்ளனர். பள்ளிப்படிப்பு முடிந்த பின்பும் அவர்களின் பழக்கம் தொடர்ந்தது. இந்த விஷயம் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் திருமணத்திற்கு பின்பும் அவர் துர்காதேவியை மறக்க முடியாமல் தவித்தார்.

கர்ப்பிணியாக இருந்ததால் அவரால் அப்போது தோழியை தேடி செல்ல முடியவில்லை. குழந்தை பிறந்த உடன், சில மாதங்களிலேயே குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு துர்காவை பார்க்க சென்னைக்கு சென்றுவிட்டார். பின்னர் தோழி துர்கா தேவிக்காக சிகை அலங்காரத்தையும், உடையையும் ஆண் போல் மாற்றியுள்ளார். அங்கு அவர்கள் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ஜெயஸ்ரீ தனது தோழியுடன் வசிக்க விரும்புகிறேன். கணவர், குழந்தையுடனோ, பெற்றோருடனோ செல்ல விரும்பவில்லை. தன்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றார். அவருக்கு உரிய வயதாகிவிட்டது என்பதால் அவரின் விருப்பப்படி செல்லலாம் என கோர்ட்டு தெரிவித்தது.

இதையடுத்து கோர்ட்டுக்கு வெளியில் வந்த ஜெயஸ்ரீயை, குடும்பத்தினர் தங்களோடு வந்துவிடுமாறு கெஞ்சி அழைத்தும், அவர் மனம் இறங்கவில்லை. அவர் பெற்றெடுத்த குழந்தையை காண்பித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவர் தன் தோழியுடன் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து தரையில் அடித்து கொடூரமாக கொன்ற இளைஞன்!

Quick Share

7 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்து, பலமுறை தரையில் தூக்கிப்போட்டு அடித்தே கொன்ற 25 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் பெயர் ஒமர் பின் ஹாசன் (25). ஹாசன் கடந்த செவ்வாய்க்கிழமை தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 7,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மே 8-ஆம் திகதி 2019-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சம்பவம் நடந்த அன்று, ஹாசன் ஒரு 7 வயது சிறுவனை சாக்லேட் கொடுத்து கவர்ந்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுவன் கத்தி உதவிகேட்க முயன்றபோது, ​​ஹாசன் அச்சிறுவனை பல முறை தரையில் தூக்கி அடித்துள்ளார். இதனால் பலத்த காயங்கள் ஏற்பட்டு சிறுவன் அங்கேயே உயிரிழந்தான்.

இதற்கிடையில், உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்தக் குளத்தில் கிடந்த குழந்தையைப் பார்த்தனர். அவர்கள் ஹாசனை பிடிக்க முயன்றனர், ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர், கடத்தல், இயற்கைக்கு மாறான பாலியல் மற்றும் கொலை குற்றச்சாட்டில் ஹாசனை பொலிஸார் கைது செய்தனர். இந்நினையில், இந்த வழக்கில் ஹாசனை குற்றவாளி என கண்டறிந்த நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இறந்துபோன குழந்தையின் குடும்பத்திற்கு விரைவாக நீதியை உறுதி செய்த அதிகாரிகளை ராச்சகொண்டா பொலிஸ் கமிஷனர் மகேஷ் பகவத் பாராட்டினார்.

சர்க்கரையை எடுத்து கொள்ளும் போது அது பல உறுப்புகளை பாதிப்பதாக ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல் .

Quick Share

உண்மையில் சராசரியாக ஆரோக்கியமான ஒருவருக்கு ஒருநாளைக்கு 25 கிராம் அல்லது ஒரு நாளைக்கு சுமார் ஆறு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை விட அதிகமாக சர்க்கரையை ஒருவர் எடுத்து கொள்ளும் போது அது பல உறுப்புகளை பாதிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

  • பற்களை வரிசைப்படுத்தும் பாக்டீரியாக்கள் எளிய சர்க்கரைகளுக்கு உணவளிக்கும் போது பற்களின் சிதைவு ஏற்படுகிறது, இது பற்சிப்பினை அழிக்கும் அமிலத்தை உருவாக்குகிறது.
  • லெப்டின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும், இது நீங்கள் சாப்பிட போதுமானதாக இருக்கும்போது உங்கள் உடலுக்கு அதை தெரியப்படுத்துகிறது. சர்க்கரை அதிகம் சாப்பிடும்போது அது லெப்டின் தடையை உண்டாக்கும். இது எடை கட்டுப்பாட்டுக்கு ஒரு பெரிய தடையாக இருக்கிறது.
  • சர்க்கரை உணவுகள் கலோரிகளால் நிரம்பியுள்ளன, ஆனால் அவை உங்கள் பசியைத் தணிக்க சிறிதும் உதவாது. தற்போதைய அளவிலான உட்கொள்ளலில் இருந்து உணவு சர்க்கரைகளை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்பது பெரியவர்களில் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது.
  • சர்க்கரை இனிப்பான பானங்களை அதிகம் உட்கொள்ளுவதனால் நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.
  • அதிகப்படியான சர்க்கரை எடுத்து கொள்வதனால் உடல் பருமன் அதிகரிக்கும்.
  • அதிகப்படியான பிரக்டோஸ் என்பது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் வளர்ச்சிக்கு காரணமாக மாறும். இதனால் கல்லீரலில் கொழுப்பு குவியும்.
  • அதிக சர்க்கரை உணவுகள் கொடிய புற்றுநோய்களில் ஒன்றான கணைய புற்றுநோய்க்கான சற்றே உயர்ந்த ஆபத்துடன் தொடர்புடையவை. அதிக சர்க்கரை உணவுகள் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையதால் கணைய புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
  • நிறைய சர்க்கரை சாப்பிடுவதும் உயர் இரத்த அழுத்தத்துடன் அதிகரிக்கும்

தாயை பழிவாங்குவதற்காக பெண் அவருடைய 3 மாத குழந்தையை உயிருடன் புதைத்து கொடூர செயல்!

Quick Share

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தாயை பழிவாங்குவதற்காக பெண் ஒருவர் அவருடைய 3 மாத குழந்தையை உயிருடன் புதைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாசில்காவில் உள்ள அமீர் காஸ் காவல் நிலையத்தின் அதிகார வரம்பு பகுதிக்குள் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிசார் அளித்த தகவலின் படி, சம்பவத்தன்று Amandeep Kaur தனது 3 மாத குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வங்கிக்கு சென்றுள்ளார்.

வீடு திரும்பியது போது குழந்தையை காணவில்லை என்பதால் குடும்பத்தினர் அனைவரும் தேடியுள்ளனர். மறுநாள் காலை Amandeep Kaur கணவருடைய சகோதரரின் மனைவி Sukhpreet Kaur,குழந்தையின் கால்களை கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியில் பார்த்ததாக கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, குழந்தை சடலமாக கழிவுநீர் சேகரிப்பு தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் கழிவுநீர் தொட்டியில் தேடும் போது தென்படாத குழந்தை, எப்படி தற்போது இருந்தது என குடும்பத்தினருக்கு Sukhpreet Kaur மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து, Sukhpreet மீது Amandeep பொலிசில் புகார் அளித்துள்ளார். Sukhpreet-ஐ பிடித்து பொலிசார் விசாரித்த போது, குடும்ப பிரச்சினை காரணமாக Amandeep பழிவாங்க நான் தான் குழந்தையை உயிருடன் புதைத்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் Sukhpreet மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மிகக்கொடிய நோய்.! ”மனஅழுத்தம்” கட்டாயம் செய்ய வேண்டிய ”உடற்பயிற்சிகள்...

Quick Share

நிறைய பேர் தங்கள் மன அழுத்தத்தை எப்படி நிர்வகிப்பது என்பது தெரியாமல் முழிப்பார்கள். ஆனால் அதை நிர்வகிக்க ஓர் எளிய வழி உடற்பயிற்சிகள். உடம்பை நீட்டித்து விடும் போது உங்க மனமும் ரிலாக்ஸ் அடைகிறது. இதை எப்படி செய்யலாம் என்பதை நாம் அறிந்து கொள்வோம். ரிலாக்ஸ் செய்ய :உங்க மனதை ரிலாக்ஸ் செய்யவும் அமைதிபடுத்தவும் உடற்பயிற்சி என்பது அவசியம் நீட்டிப்பு உடற்பயிற்சி உடலில் இருந்து பதற்றத்தை வெளியேற்ற நீட்டிப்பு உடற்பயிற்சி என்பது அவசியம். உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்களுக்கும், நிறைய வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இது மிகவும் நல்லது. இது உங்க மூட்டுகள் மற்றும் தசைகளில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மனதை அமைதிபடுத்தவும் நிதானப்படுத்தவும் உதவுகிறது. எனவே நீங்கள் தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே உடலை நீட்டி தெளித்து விடலாம். இந்த காலை நேர நீட்டிப்புகள் உங்களை உற்சாகப்படுத்தவும், படுக்கை நேர நீட்டிப்புகள் இரவில் நீங்கள் நன்றாக தூங்கவும் உதவுகிறது.
ஓடுதல் : இது உங்க மன அழுத்தத்தை போக்கும் ஒரு ஸ்ட்ரஸ் பஸ்டர் என்றே கூறலாம். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம் ஜாக்கிங் செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சி உடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். இது எண்டோர்பின்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் உங்களை தளர்த்தவும் உதவுகிறது.
டாய் சீ : இது ஒரு பண்டைய சீன தற்காப்புக் கலையிலிருந்து பெறப்பட்டது. உடல் இயக்கத்துடன் மூச்சுப்பயிற்சி மற்றும் தியானத்தை உள்ளடக்கியது. டாய் சி நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் உடலையும் மனதையும் புதுப்பிக்கிறது. இதன் மூலம் நல்ல ஆரோக்கிய உணர்வை பெறுவீர்கள். இரவில் நன்றாக தூங்கவும் உங்க மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
நடைப்பயிற்சி :நடைபயிற்சி செய்வது மிகவும் எளிதான ஒன்று. இது முக்கிய தசைக் குழுக்களிடமிருந்து பதற்றத்தை வெளியிடவும் மற்றும் நரம்பு மண்டலத்தை ஆற்றவும் உதவுகிறது. எனவே காலையில் காலார நடப்பது உங்க மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவி செய்யும். இருதய ஆரோக்கியம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கும் நல்லது. தினமும் 15 நிமிட நடைப்பயணத்துடன் தொடங்கி படிப்படியாக 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அதை பின்பற்றுங்கள்.
சுற்றுப்பயிற்சி :சிலருக்கு மன அழுத்தத்தை நிர்வகிக்க கார்டியோ எடை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த எடை பயிற்சி மூலம் எண்டோர்பின்களை ஊக்குவிக்க முடியும். இது உங்க மன நிலையை அதிகரிக்க உதவுகிறது. எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது இந்த உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். வொர்க் அவுட் செய்த பிறகு ஒரு அமைதியான உணர்வை பெறுவீர்கள்.




You cannot copy content of this Website