உலகம்

படித்து வரும் பணக்காரக சீன மாணவர்களை கடத்தும் மர்ம கும்பல்!

Quick Share

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் சீன மாணவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

சீனாவின் போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இந்த கும்பல் போனில் தொடர்பு கொள்ளும். பிறகு , நீங்கள் சீனாவில் குற்றமிழைத்து விட்டு இங்கே தப்பி வந்துள்ளீர்கள் ; உங்களை மீண்டும் நாடு கடத்தப் போகிறோம் என்று கூறி அந்த மாணவர்களை மிரட்டுவார்கள். இதனால், பயந்து போகும் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வர சொல்லும் அந்த கும்பல் அவர்களை காரில் கடத்தி சென்று ஏதாவது ஒரு அறையில் அடைத்து வைத்து விடும்.

கடத்தப்பட்ட மாணவர்களை அரை நிர்வாணமாக்கி கயிற்றில் கட்டிப் போட்டு , மாணவரின் செல்போனிலேயே அந்த காட்சியை வீடியோவாக இந்த கும்பல் பதிவு செய்யும். பிறகு, அந்த வீடியோவை சீனாவில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடத்தப்பட்டவரின் செல்போனிலிருந்தே அனுப்பி வைக்க கூறுவார்கள். பிறகு, இரு நாள்களுக்கு , கடத்தப்பட்டரின் செல்போனை இந்த கும்பல் ஆப் செய்து வைத்து விடும்.

இதனால், தங்கள் பிள்ளைகளுக்கு என்னவோ… ஏதோவென்று பெற்றோர்கள் பயந்து போவார்கள். இரு நாள்களுக்கு பிறகு, கடத்தல் கும்பல் மீண்டும் மாணவனின் செல்போனில் இருந்தே பெற்றோரை தொடர்பு கொண்டு இவ்வளவு பணம் கொடுத்தால் விட்டுவிடுவோம் என்று மிரட்டுவார்கள். இந்தச் சூழலில் கேட்கும் பணத்தை கொடுக்க மாணவர்களின் குடும்பத்தினர் தயாராக இருப்பார்கள். இப்படி , சீன மாணவர்களை 8 பேரை கடத்திய மர்மக்கும்பல் இந்த ஆண்டில் மட்டும் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை கறந்துள்ளது.

இதையடுத்து , சிட்னியில் படித்து வரும் சீன மாணவர்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அந்த நகர போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். போனில் உங்களுக்கு ஏதோவது மிரட்டல் வந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டுமென்று சீன மாணவர்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

“உலகத்தில் இனிமேல் போர் நடக்காது”, ஆச்சரியப்பட வைத்த வட கொரிய அதிபர் கிம் ஜ...

Quick Share

ஜூன் 25-ந் தேதி 1950 -ம் ஆண்டு வடகொரியா தென்கொரியா மீது தாக்குதலை தொடுத்தது. 1953- ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி இந்த போர் முடிவுக்கு வந்தது. இந்த போரில் வடகொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்தன. இந்த போரில் எந்த நாடும் வெற்றி பெறவில்லை.

கொரியப் போர் முடிவுக்கு 67 ஆண்டுகள் முடிவைடைந்ததை யொட்டி இந்த போரில் பங்கேற்ற வடகொரிய முன்னாள் ராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி தலைநகர் பியாங்கியாங்கில் நேற்று அதிபர் கிம் ஜோங் உன் முன்னிலையில் நடைபெற்றது. கொரிய போர் முடிவைடைந்ததையடுத்து நேற்று தலைநகர் பியாங்கியாங்கில் நிகழ்ந்த வான வேடிக்கையை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

வடகொரியாவின் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த விழாவில் பூரண ராணுவ உடை தரித்து பங்கேற்றனர்.
அதிபர் கிங் ஜாம் உன் வயதான மூத்த ராணுவ தளபதியை கௌரவிக்கும் வகையில் மேடைக்கு அழைத்து வந்து தன் அருகில் அமர வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கிம் ஜாங் உன், ‘இனிமேல் உலகத்தில் போர் ஏற்படாது. மேலும், வடகொரியா எதிரி நாடுகளிடத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே அணுஆயுதங்களை தற்கோப்பு நோக்கத்துடன் தயாரித்திருப்பதாகவும் வட கொரிய அதிபர் தன் அதிபர் பேசினார்.

வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் இப்படி பேசியது உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் விசாவில் அமெரிக்காவிற்குள் நுழைந்த சீன ராணுவத்தினர்!

Quick Share

அமெரிக்கா – சீனா இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஆராய்ச்சி மாணவர்கள் என்ற பெயரில் வந்த, சீன ராணுவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, 25 நகரங்களில் எப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. அமெரிக்கா – சீனா இடையே ஏற்கனவே வர்த்தக விவகாரத்தில் மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஹூஸ்டனில் உள்ள சீன துாதரகத்தை மூடும்படி அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் உள்ள அமெரிக்க துாதரகத்தை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்காக மாணவர் விசாவில் வந்த நான்கு பேருக்கு சீன ராணுவத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் மூன்று பேரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீன துாதரகத்தில் தஞ்சமடைந்தவரும் கைது செய்யப்பட்டார்.

இதில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவிக்கையில், அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்காக மாணவர் விசாவில் வந்தவர்கள் குறித்த பின்னணி விசாரிக்கப்பட்டது. அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில் சீனாவைச் சேர்ந்த நான்கு பேருக்கு அந்த நாட்டு ராணுவத்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மாணவர் என்ற பெயரில் உளவு பார்க்கவும் அமெரிக்காவின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் இவர்களை சீன ராணுவம் அனுப்பியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளோம். ஒருவர் சீன துாதரகத்தில் தஞ்சமடைந்தார். அவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இதுபோல பொய் தகவல்களை கூறி அல்லது மறைத்து அமெரிக்கா வந்துள்ள சீனர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக 25 நகரங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சீனாவுக்காக உளவு பார்த்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த டிக்சன் யுயோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கே தகவல்களை பகிர்ந்து கொண்டதாக கூறும் அவர், ஆனால் சீனாவுக்காக உளவு பார்க்கவில்லை என மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவையும் விட்டு வைக்காத கொரோனா: முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு!

Quick Share

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவியது. உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவுக்கு 1 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங்க உன் உயராதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார். நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும், கொரோனா தொற்று பரவால் தடுக்க கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்ட நபர் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், இது ஒரு ஆபத்தான சூழ்நிலை. இது பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று அந்நாட்டுசெய்தி ஊடகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் கொரியாவில் தற்போது ஒரு நாளைக்கு 40 முதல் 60 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தனிநாடு கோரிய சீக்கியர்கள்: கனடா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Quick Share

காலிஸ்தான் அமைப்பு சீக்கியர்களுக்குத் தனிநாடு கோரி நடத்தும் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கப் போவதில்லை என கனடா அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்னும் அமைப்பு இந்தியாவில் இருந்து பஞ்சாபைத் தனியாகப் பிரித்துக் காலிஸ்தான் தனி நாடு கோருவது குறித்து வெளிநாடுவாழ் சீக்கியர்களிடம் வரும் நவம்பரில் பொது வாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்கக் கூடாது எனக் கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது. ஏனவே இந்த விவகாரத்தில் கனடாவின் முடிவு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கனடா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சலில் அளித்த பதிலில், இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிப்பதாகவும், சீக்கியர்களின் பொதுவாக்கெடுப்பை கனடா அங்கீகரிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.

60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்ப உதவிய 13 வயது சிறுமி!

Quick Share

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், 13 வயது சிறுமி மற்றும் தொழிலபதிபரின் உதவியால நாடு திரும்பியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகில் பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சொந்த நாட்டை விட்டு வேறொரு நாட்டிற்கு சென்ற ஏராளமான மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவர்களுக்காக சில சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொருளாதார நெருக்கடியால் பலரும் விமான டிக்கெட்டிற்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் Ananya Srivastava என்ற 13 வயது மாணவி மற்றும் தொழிலதிபரின் உதவியால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 68 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த 13 வயது சிறுமி ஷார்ஜாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தானும் உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன் படி தான் சேமித்து வைத்திருந்த ரூபாய் 61 ஆயிரம் பணத்தை வைத்து இரண்டு இந்தியருக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து உதவியுள்ளார்.

மேலும் துபாயை சேர்ந்த தொழிலதிபரான Amiruddin Ajmal 20 லட்சம் ரூபாய் செலவு செய்து 66 பேருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். இந்திய மக்கள் பலரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ளதை அறிந்து அவர்களுக்கு உதவுவதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். அவர்கள் மீண்டும் தனது குடும்பத்தினருடன் சேர்த்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்களின் விலையை குறைக்க 4 உத்தரவுகளில் கையெழுத்திட்ட டிரம்ப்!

Quick Share

அமெரிக்காவில் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்து பொருட்களின் விலையைக் கணிசமாக குறைக்கும் நோக்கில் 4 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மக்களின் மருந்து செலவுகளை பெருவாரியாக குறைக்க வழி வகுக்கும் 4 நிர்வாக உத்தரவுகளில் நான் கையெழுத்திட்டேன். முதல் நிர்வாக உத்தரவின்படி சமூக சுகாதார மையங்கள் இன்சுலின் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியை நோயாளிகளுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும்.

இந்த உத்தரவின் கீழ் நோயாளிகளுக்கு இன்சுலின் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். 2-வது நிர்வாக உத்தரவானது ஒரே மாதிரியான மருந்துகளின் விலைகள் குறைவாக இருக்கும் கனடா மற்றும் பிற நாடுகளிலிருந்து சட்டபூர்வமாக மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும்.

3-வது நிர்வாக உத்தரவின் கீழ் மருந்து தயாரிப்பாளர்கள் இடைத்தரகர்கள் மற்றும் மருந்தக மேலாளர்களுக்கு வழங்கும் தள்ளுபடிகள் நேரடியாக நோயாளிகளுக்கு கிடைக்க வழி செய்யும். இறுதியாக 4-வது நிர்வாக உத்தரவு மத்திய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிறநாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் மருந்துகளை வாங்க வழிசெய்யும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

கொரோனா உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது!

Quick Share

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.63 கோடியை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 99 லட்சத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்காவில் டிரம்ப் தான் மறுபடியும் ஆட்சி அமைப்பார்: ஆய்வில் வெளியான தகவல்!

Quick Share

அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்கர்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.

2016 தேர்தலுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது டொனால்டு டிரம்பின் பிரச்சாரத்தில் இன்னும் உற்சாகம் இருப்பதாக குடியரசுக் கட்சி தங்களது ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளது. ஆனால் மறுபுறம் ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜோ பிடென் பிரச்சாரத்தில் குறிப்பிடும்படியான உற்சாகத்தை உருவாக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடந்த பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் தனது எதிராளியான ஹிலரி கிளிண்டனுக்குப் பின்னால் இருந்தார், ஆனால் பின்னர் வெற்றி பெற்றார் என்பதையும் அந்த அணி சுட்டிக்காட்டுகிறது. புளோரிடா, அரிசோனா மற்றும் மிச்சிகன் ஆகிய மூன்று சவால் மிகுந்த மாகாணங்களில் பிடன் முந்தியிருப்பதாக சிஎன்என் ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால் டிரம்ப் இந்த மூன்று மாகாணங்களையும் 2016 ல் வென்றிருந்தார். தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் பல வாரங்களாக பிடனுக்குப் பின்னால் இருக்கிறார். ஆனாலும், பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தெரிவு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.47 ஆயிரத்திற்கு ஏலத்தில் விலை போன அதிசய மீன்!

Quick Share

பொதுவாக மீன் என்றால் அசைவப்பிரியர்களுக்கு அலாதி பிரியம் என்றே கூறலாம். ஆம் மட்டன், சிக்கன் கறிகளை விட கடல் உணவுகளையே அசைவப் பிரியவர்கள் அதிகமாக விரும்புகின்றனர். இங்கு ஒரே ஒரு மீனை ஏலம் எடுப்பதற்கு கூட்டம் திரண்டதோடு, அதனை 47 ஆயிரத்திற்கு இறுதியில் ஏலம் எடுத்துள்ளனர்.

குறித்த மீனில் அப்படியென்ன ஸ்பெஷல் என்று நெட்டிசன்கள் தலையை பிய்த்துக்கொள்கின்றனர். சிலர் விளையாட்டாக இது தங்க மீனாக இருக்குமோ? என்று நகைச்சுவையாக தங்களது கருத்தினையும் பதிவிட்டுள்ளனர். குறித்த மீனின் பெயர் கத்தலை மீன். வயாகரா வகையைச் சேர்ந்த இந்த மீனின் காற்றுப்பைகள் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் என்பதால் இதன் விலை இவ்வாறு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

வடகொரியாவில் பதற்றம் !! கொரோனா பரவும் அச்சத்தில் எல்லைகள் மூடல்

Quick Share

வடகொரியாவில் கிட்டத்தெட்ட 2 லட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். வடகொரியாவின் எல்லைப்பகுதியான கேசாங்கில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், இதனால் கேசாங் நகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்நகரின் எல்லைகள் அனைத்தும் மூடி சீல் வைக்க அதிபர் கிம் ஜாங் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைத்ததுடன், முழு ஊரடங்கு பிறப்பித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது கொரோனா அறிகுறிகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரே வடகொரியாவின் முதல் கொரோனா நோயாளி ஆவார். இதுகுறித்து கொரியா செய்தி வட்டாரம் வெளியிட்ட செய்தியறிக்கையில், “பல ஆண்டுகளுக்கு முன் தென் கொரியாவுக்கு தப்பிச் சென்று, கடந்த வாரத்தில் மீண்டும் சட்ட விரோதமாக வடகொரியாவின் கேசாங் நகருக்குள் நுழைந்து வசித்து வரும் ஒருவருக்கு ரத்தப்பரிசோதனை செய்ததில் திடீரென கொரோனா அறிகுறிகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதனால் தான் வட கொரியாவில் பதற்றம் நிலவுவதாக தெரிவித்துள்ளது.

துரோகம் இழைத்துவிட்டு இப்போது அழைப்பா ? தமிழர்கள் என்னோடு கைக்கோர்க்க வேண்டும் – ...

Quick Share

இலங்கை தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலை நினைவு கூறும் விதமாக ஜூலை 23ஆம் தேதி தமிழர்களின் ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தி பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையில் முன்பு இருந்த நிலைமை தற்போது மாறிவிட்டதால் மக்கள் சுதந்திரமாக விருப்பமான இடங்களுக்கு செல்ல முடியும் என்றும், அந்த சுதந்திரத்தை வழங்க அர்ப்பணிப்பு செய்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்சே திருகோணமலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசினார்.

மேலும் இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்கள் நாட்டை முதன்மைப்படுத்த தன்னுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சியை சேந்த சஜித் – ரணில் தரப்பினருக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. உங்களுடைய பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் அரசாங்கத்திற்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே இலங்கை தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலை நினைவு கூறும் விதமாக ஜூலை 23ஆம் தேதியை அனுசரிக்கும் கருப்பு ஜூலை நாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.




You cannot copy content of this Website