உலகம்

காதலன் கண்முன் காதலிக்கு நேர்ந்த கதி: கதறி அழும் காதலன்!

Quick Share

கனடாவில் பனிப்பாறை ஒன்றைக்காண்பதற்காக சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தார்கள், பலர் படுகாயமடைந்தார்கள். இந்த விபத்தில் தன் காதலியை பறிகொடுத்த Devon Ernest (23), அந்த பேருந்தில் சீட் பெல்ட் மட்டும் இருந்திருந்தால் தன் காதலி உயிரிழந்திருக்கமாட்டாள் என்கிறார். தன் காதலி Dionne Jocelyn Durocher (24)உடன் North Battlefordஇல் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்ந்திருக்கிறார் Ernest.

மலைகளை பார்த்தே இராத தன் காதலியையும், தன் சகோதரி ஒருவரையும் அழைத்துக்கொண்டு, தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஆல்பர்ட்டா புறப்பட்டபோதுதான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு சரிவில் செல்லும்போது, திடீரென பேருந்தின் முன் பக்க சக்கரங்கள் தேயும் சத்தத்தைக் கேட்டதாக கூறுகிறார் Ernest. இத்தனைக்கும் மலைப்பாதையில் செல்வதற்கேற்ற வகையில் பிரமாண்ட சக்கரங்கள் கொண்ட பேருந்து அது.

அடுத்து, தூக்கி வீசப்பட்டு, தலை பேருந்தில் மேல் பகுதியில் மோதி நினைவிழந்து, பின் நினைவு வந்தபோது தன் அருகே தன் காதலி Dionne கிடப்பதைப் பார்த்திருக்கிறார் Ernest. அவருக்கு லேசாக மூச்சு வருவதைப் பார்த்ததும், தன் சகோதரியை தேடிச் செல்ல, அவர் பத்திரமாக இருப்பதை உறுதி செய்துகொண்டபின், மீண்டும் தன் காதலியைக் காணவந்த Ernestக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஆம், Dionne இறந்து கிடந்திருக்கிறார்.

நாடித்துடிப்பையும் மூச்சையும் பரிசோதித்து, அவருக்கு உயிரில்லை என்பது தெரிந்ததும், அவரது தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் கதறியிருக்கிறார் Ernest. அந்த பேருந்தில் சீட் பெல்ட் மட்டும் இருந்திருந்தால், தன் காதலி உயிரிழந்திருக்கமாட்டார் என்று கூறும் Ernest, எனக்கு என் காதலி வேண்டும் என கதறுவதைப் பார்த்தால் கல் மனமும் கரைந்துபோகும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட முயற்சித்தால் நசுக்கிவிடுவேன்: சீனா, ரஷ்யாவை கடுமையா...

Quick Share

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற சில அந்நிய நாடுகளின் தலையீடு இருப்பதாக ஜனநாயககட்சி வேட்பாளர் ஜோ பிடென் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு துறையும் விசாரணை நடத்தியது. இந்த குற்றச்சாட்டை டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் மறுத்தனர். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் திகதி நடக்க உள்ளது.

இதில், டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். இவர் நிகழ்ச்சி ஒன்றில், 2016-ல் பார்த்த அதே சம்பவம் மீண்டும் அரங்கேறுகிறது. இம்முறை ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் பிற அந்நிய நாடுகள் நமது ஜனநாயகத்திலும், நமது தேர்தல் நடைமுறைகளிலும் தலையிடுவதற்காக ஆயத்தமாகி வருகின்றன. இதுதொடர்பாக நம்பத்தகுந்த உளவு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அவர்கள் தேர்தலில் தலையிட விடாமல் தடுப்பதற்கான சிறந்த வழி, எந்த நாடு தலையிட முயற்சிக்கிறது என்பதை வெளிஉலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் டிரம்ப் நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது. நான் அடுத்த அதிபரானால், நமது தேர்தல் நடைமுறையில் தலையிடும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன். எனது முழு அதிகாரத்தை பயன்படுத்தி பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதிப்பேன். தலையிட்ட நாடுகள் அதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பெண்: குவியும் பாராட்டுக்கள்!

Quick Share

ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற இரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பதின் வயது பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறார். தமது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தமது குடும்பத்தின் ஏகே 47 துப்பாக்கியை கையில் ஏந்திய இந்தப் பெண், இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்ததாக கோர் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணின் தந்தை அரசாங்க ஆதரவாளர் என்பதால், தீவிரவாதிகள் அவர்கள் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் அந்தப் பெண்ணின் புகைப்படம் மிகவும் வைரலானது. இந்த சம்பவத்துக்குப் பிறகு க்ரிவா கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டைத் தாக்க மேலும் அதிக தீவிரவாதிகள் வந்துள்ளனர்.

ஆனால், அக்கிராம மக்களும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் அவர்களை அடித்து விரட்டியதாகத் தெரிகிறது. தாலிபன்களை சுட்ட அந்தப் பெண்ணுக்கு 14ல் இருந்து 16 வயதுக்குள் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், அவரும், அவரது தம்பியும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்தியாவுடன் இருக்கும் ராணுவ உறவானது எங்களுக்கு முக்கியமானது – அமெரிக்க பாதுகாப்ப...

Quick Share

இந்தியாவுடனான ராணுவ உறவானது, தங்களுக்கு முக்கியமானது என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மாஸ்க் டி எஸ்பர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

இந்தியாவுடனான எங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இந்த உறவானது, 21ம் நூற்றாண்டில், அமெரிக்காவிற்கு முக்கியமானது. கடந்த நவம்பர் மாதம், இந்தியாவுடன் இணைந்து முதல்முறையாக கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டோம்.

இந்திய கடலில், இந்திய கடற்படையுடன், அமெரிக்க கடற்படை கப்பல் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது, வலிமையான கடற்படை ஒத்துழைப்பிற்கு எங்களது உறுதித்தன்மையை எடுத்துகாட்டுகிறது. இந்தோ பசுபிக் பகுதி சுதந்திரமானது என்பதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.

இந்தியா சீனா இடையில் நிலவும் சூழ்நிலை, எல்லை கட்டுப்பாட்டில் நடந்ததை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பதற்ற நிலையை குறைக்க வேண்டும் என இரு நாடுகளையும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.9,703 கோடி சொத்து மதிப்பை ஒரே நாளில் சம்பாதித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்…!!!

Quick Share

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து சாதனை படைத்துள்ளார். 13 பில்லியன் அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ.9,703 கோடி ஆகும்.

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்காவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் தொடர்ந்து பல்வேறு கட்டத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுத் தொற்றின் அளவை கட்டுப்படுத்தி வர முயற்சி செய்யப்பட்டாலும் தினமும் கொரோனாவால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனாவுக்கு அஞ்சி மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் தற்போது அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் அமேசானுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழல் அதிகமாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங்கில் கோலோச்சிவரும் அமேசான் நிறுவனத்தின் சொத்துமதிப்பு திடீரென்று உயர்ந்தது. அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

உலக அளவில் அதிகரிக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தால் இந்த ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 73% உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 74 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு தற்போது 189.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் அமெரிக்காவின் பொருளாதாரமே சரிந்துவரும் நிலையில் அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பானது அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது.

அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் ரஷியாவின் கொரோனா தடுப்பூசி: வெளியான தகவல்!

Quick Share

ரஷியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.71 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று 6,109 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ரஷியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 771,546 ஆக உயர்ந்துள்ளதாக நாட்டின் கொரோனா மறுமொழி மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜூலை 12 அன்று, ரஷியாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம், கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாகக் கூறியது, இது அரசால் இயங்கும் கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி உருவாக்கியது.

யுனைடெட் கோ ருசால் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுக்கும், கோடீஸ்வர அதிபர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு ஊசிகளை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமலே மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் முன்னதாக, தடுப்பூசி அடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்கள் பெருமளவில் உற்பத்தியைத் தொடங்கலாம் என்றும் கூறினார்.

சோதனைத் தடுப்பூசி ரஷ்ய உயரடுக்கினருக்கு வழங்கிய தன்னார்வத் திட்டம் சட்டபூர்வமானது, இருப்பினும், பங்கேற்பாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இது ரகசியமாக செய்யப்பட்டுள்ளது என்று அந்த முயற்சியை நன்கு அறிந்த ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

புதிய சிக்கலில் சிக்கிய இளவரசர் வில்லியம், ஹரி தம்பதி – நடந்தது என்ன?..

Quick Share

பிரித்தானிய இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் கிட்டத்தட்ட 300,000 பவுண்டுகள் தொண்டு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தொகையானது இளவரசர் ஹரி முன்னெடுத்து நடத்தும் ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆராயுமாறு அறக்கட்டளைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. வில்லியம் மற்றும் கேட்டின் ராயல் பவுண்டேஷன் கடந்த ஆண்டு ஹரி மற்றும் மேகனின் இலாப நோக்கற்ற அமைப்பான சசெக்ஸ் ராயலுக்கு மொத்தம் 290,000 பவுண்டுகளுக்கான இரண்டு மானியங்களை வழங்கியது.

பின்னர், இளவரசர் ஹரி 75 சதவீத பங்குதாரராக உள்ள டிராவலிஸ்ட் என்ற தனியார் நிறுவனத்திற்கு இதில் 145,000 பவுண்டுகள் வழங்கப்பட்டது. இதனிடையே ஹரி மற்றும் மேகன் தம்பதி பிரித்தானிய அரச கடமைகளை விட்டுக்கொடுத்ததால் சசெக்ஸ் ராயல் என்ற அறக்கட்டளை மூட வேண்டியிருந்தபோது, அதன் நிதிகள் அனைத்தும் டிராவலிஸ்டுக்கு மாற்றப்பட்டன.

இளவரசர் வில்லியம் மற்றும் ஹரியின் இச்செயல் தொண்டு நிறுவனங்களுக்கான சட்டத்தை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டியுள்ள கிரஹாம் ஸ்மித் என்பவர், இளவரசர் ஹரிக்கு மறைமுகமாக உதவும் வகையில் இளவரசர் வில்லியம் செயல்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், ஹரியின் தனிப்பட்ட நிறுவனத்திற்கு நிதி அளித்தது மூலம் ராயல் அறக்கட்டளை கிட்டத்தட்ட, 300,000 பவுண்டுகளை இழந்துள்ளது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டுமின்றி, பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து ஹரி விலகி இருப்பதால், அவரது சொந்த தொண்டு நிறுவனங்களும் தற்போது மூடப்பட்டு வருகிறது,

மேலும் அவர் தொண்டு நிறுவனத்தின் பணத்தை தமது தனிப்பட்ட நிறுவனங்களுக்கு அளிப்பதன் வாயிலாக, அதை அவருடன் எடுத்துச் செல்வதாகத் தெரிகிறது என்கிறார் கிரஹாம் ஸ்மித். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டின் ராயல் அறக்கட்டளை, சசெக்ஸ் ராயலுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் அனைத்தும் அந்த தொண்டு நிறுவன பணிகளுக்கு உதவுவதற்காகவே என குறிப்பிட்டுள்ளது.

உங்கள் விருப்ப திபரான என்னை விட யாரும் அதிக தேசப்பற்றுமிக்கவர் இல்லை – டிரம்ப்!

Quick Share

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பரவியவர்களின் சுவாசக்காற்று மூலமாகவும் வைரஸ் பரவுவதால் முகக்கவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது, செய்தியாளர்களை சந்திக்கும் போது என அனைத்து நேரமும் முக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தார்.

அவருடைய நெருங்கிய அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டபோதும் டிரம்ப் முகக்கவசம் அணியவில்லை. ஆனால், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையடுத்து கடந்த 12 ஆம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது டிரம்ப் முகக்கவசம் அணிந்து கொள்கிறார். இந்நிலையில், முகக்கவசம் அணிவதை டொனால்டு டிரம்ப் தேசப்பற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.

இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ நாம் அனைவரும் இணைந்து கண்ணுக்குத் தெரியாத சீன வைரசை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழ்நிலையில் முகக்கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் என பலர் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் உங்கள் விருப்ப அதிபரான என்னை விட யாரும் அதிக தேசப்பற்றுமிக்கவர் இல்லை’ என்றார்.

2100-ம் ஆண்டுக்குள் போலார் பனிக்கரடிகள் இனம் முழுவதுமாக அழிந்து விடும்: ஆய்வில் அதிர்ச்...

Quick Share

ஆர்ட்டிக் பனிப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் அரிய வகை விலங்குகளில் ஒன்று போலார் பனிக்கரடிகள். இந்த வகை கரடிகளுக்கு மீன்கள் மற்றும் கடல் சீல்கள் முக்கிய உணவாக உள்ளது. அரிய வகை விலங்கினமான பனிக்கரடி உலக அளவில் மொத்தமாக 26 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே உயிருடன் உள்ளது. இவற்றை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தற்போது உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பிரதேசங்கள் அனைத்தும் வேகமாக உருகி வருகின்றன. இதனால் பனிப் பிரதேசங்களில் வாழும் பல்வேறு உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. குறிப்பாக பனிக்கரடி அந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

பனிப்பிரதேசங்கள் வேகமாக உருகி வருவதால் பனிக்கரடிகள் தங்கள் வாழ்விடங்களையும், உணவுகளையும் இழந்து வருகின்றன. மேலும், அவை மனிதர்கள் வாழும் நிலப்பரப்பு நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் நிலை இப்படியே தொடர்ந்தால் ஆர்ட்டிக்க் பகுதியில் இருந்து உணவு, தங்குமிடத்திற்காக இடம்பெயர்தலை சந்தித்து வரும் போலார் பனிக்கரடி இனம் 2100-ம் ஆண்டில் முழுவதும் அழிந்து விடும் என கனடாவின் டோரோண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தை தடுக்க தவறும் பட்சத்தில் கூடிய விரைவில் பல்வேறு அரியவகை உயிரினங்கள் முற்றிலும் அழிந்து விடும் என இந்த ஆராய்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 தளத்தில் பெரும் குறைபாடு – உண்மையை ஒப்புக்கொண்டது மைக்ரோசாப்ட் நிறுவனம்!

Quick Share

விண்டோஸ் 10 தளத்தில் பெரும் குறைபாடு இருப்பது உண்மை தான் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 தளத்தில் பெரும் குறைபாடு இருப்பதை உறுதி செய்து இருக்கிறது. இந்த இயங்குதளத்தில் இண்டர்நெட் கனெக்டிவிட்டி கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. விண்டோஸ் 10 பயன்படுத்தும் பலர் இந்த பிரச்சனை குறித்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பயனர்கள் நெட்வொர்க் செட்டிங்ஸ் பகுதியில் நோ இண்டர்நெட் என்ற தகவலை பார்ப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த கோளாறு விண்டோஸ் 10 வெர்ஷன் 2004 அப்டேட்டில் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஐகான் நோ இண்டர்நெட் என காண்பித்தாலும், வெப் பரிவுசர்களில் இணையம் பயன்படுத்த முடிவதாக சிலர் தெரிவித்தனர்.

மைக்ரோசாப்ட் இந்த கோளாறு இருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் இதனை சரி செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறது. விரைவில் இந்த கோளாறை சரி செய்யும் அப்டேட்டை மைக்ரோசாப்ட் வெளியிடும் என தெரிகிறது.

விண்டோஸ் 10 தளத்தில் பல்வேறு கோளாறுகள் இருந்த போதும், உலகம் முழுக்க இதனை பல கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

கர்பமாக இருந்த முன்னாள் காதலியை 21 படுக்கை அறையில் சிதைத்த காதலன்.., சாபம் விட்ட தங்கை !

Quick Share

பிரிட்டன் நாட்டில் லண்டனில் கெல்லி என்கிற பெண் தன்னுடைய புது காதலனுக்கு பரிசு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதை அறிந்த அவருடைய முன்னாள் காதலன் ஆரோன் என்கிற 26 வயது நபர் கோபத்தில் அவருடைய படுக்கையறைக்குள் நுழைந்து 21 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

கர்ப்பிணியாக இருந்த காதலியின் வயிற்றில் இருந்த குழந்தையை பிரசவ காலத்திற்கு இன்னும் 7 வாரம் இருக்கும் நிலையிலேயே குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளார்கள் மருத்துவர்கள்.

கெல்லி, உயிரிழப்பதற்கு முன்பு குழந்தைக்கு ரைலி என்கிற பெயரை வைத்துவிட்டு உயிரிழந்துள்ளார். ஆனால் 4 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து ஆதாரங்களின் அடிப்படையில் ஆரோனுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை தண்டனைக்குப் பிறகு நீதிபதியை பார்த்து கைகளை உயர்த்தி தம்ப்ஸ் அப் காட்டிவிட்டு சிறைக்குள் சென்ற அவரை பார்த்து கெல்லியின் குடும்பத்தினர் கதறி அழ, கெல்லியில் சகோதரி ஒருவர், கொலை குற்றத்தில் சிறைக்குள் நல்ல நேரம் கிடைக்கும்.. என கடுமையாக சாபம் விட்டுள்ளார்.

இந்தியர்களின் பேராதரவுடன் அதிபர் டிரம்ப் பிரச்சாரம், இவ்வளவு ஆதரவு உள்ளதா ?

Quick Share

அமெரிக்காவில், நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

டொனால்ட் டிரம்பின் பிரசார குழுவில் இடம் பெற்றுள்ள அல் மாசோன் பிரச்சாரவேலைகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அதிபர் டிரம்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான, ‘ஹிந்துஸ் பார் டிரம்ப்’ என்ற பிரசார கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நேற்று முன்தினம் நடந்தது.

அமெரிக்காவில் வசிக்கும், 30 ஆயிரம் இந்தியர்கள் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். நேரடி ஒளிபரப்பு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில், ‘ஆன்லைன்’ வாயிலாக, 70 ஆயிரம் இந்தியர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து, தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இந்தியர்கள் கடந்த, 1992 லிருந்து ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த ஏராளமான இந்தியர்கள் சமீப காலமாக, குடியரசு கட்சி பக்கம் பார்வையை திருப்பியுள்ளனர். இது டிரம்ப்-ற்கு சாதகமாக அமைந்துள்ளது.




You cannot copy content of this Website