உலகம்

சுவிட்சர்லாந்தில் புதிதாக பரவி வரும் மற்றொரு நோய்: மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

Quick Share

இப்போதுதான் கொரோனா வந்து மக்களை ஒரு வழி செய்துவிட்ட நிலையில், சுவிட்சர்லாந்தில் மற்றொரு நோய் பரவத் தொடங்கியுள்ளது. உன்னிகள் (tick) எனப்படும் சிறு பூச்சிகள் கடிப்பதால் ஏற்படும் என்செபலைட்டிஸ் என்னும் மூளை அழற்சி நோய் சுவிட்சர்லாந்தில் பெருகி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 215 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டை விட இது இருமடங்குக்கும் அதிகமாகும்.

அதிலும், 124 பேர் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெப்பமான சீதோஷ்ணமும் சமூக விலகல் விதிகளும் மக்களை மரங்களடர்ந்த மற்றும் புல்வெளிகள் பக்கம் திருப்பியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு வாழும் இந்த உன்னிகள் மக்களை கடிப்பதால் இந்த நோய் அதிகம் பரவுவதாக அதிகாரிகள் நம்புகிறார்கள்

Lyme disease அல்லது என்செபலைட்டிஸ் எனப்படும் இந்த பயங்கர நோய் மூளையை பாதிப்பதோடு, அதன் தாக்கம் நரம்பு மண்டலத்தில் நீண்ட காலம் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய்க்கு மருந்து இல்லையென்றாலும், அதற்கு தடுப்பூசி இருக்கிறாது. அபாயம் உள்ள இடங்களில் வசிப்போர், தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பான உடை அணிந்து பயணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

15 வயது மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை!

Quick Share

அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா- கனாவா கவுண்டியில் இருக்கும் ஆண்ட்ரு ஜாக்சன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் ரம்சே கார்பென்டர் பியர்ஸ் (29). கடந்த 2014-ஆம் ஆண்டு மிஸ் கென்டக்கி பட்டம் வென்றவர். கென்டக்கி யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்றுள்ளார். திருமணமான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு திடீரென்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் அழகியாக இருந்த இவரின் கைது அப்போது, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதன் பின் விசாரணையில், இவர் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.இதையடுத்து குறித்த மாணவனின் போனை பெற்றோர் எதிர்பாரதவிதமாக பார்த்த போது, அதில் ரம்சேயின் நான்கு மேல் ஆடை இல்லாத புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதை அவர் சமூகவலைதளமான ஸ்நாப் சாட் மூலம் மாணவனுக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து நடந்து வந்த விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.எனது செயல்களுக்கு நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன், நான் வருந்துகிறேன்.

நான் இதற்கு முன்பு இதுபோன்று எதையும் செய்ததில்லை, நான் ஒருபோதும், மீண்டும் இது போன்று செய்ய மாட்டேன் சத்தியம் செய்கிறேன், இந்த வழக்கின் காரணமாக மிகுந்த மனச்சோர்வு அடைந்துள்ள நான், விடா முயற்சியுடன் பணியாற்றி வந்த என் வேலையையும் இழந்துவிட்டதாக வேதனையுடன் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவுக்கு பதிலடி கொடுக்க உலகம் ஒன்றிணையும் – அமெரிக்கா சொல்கிறது!

Quick Share

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி இருந்தாலும் அமெரிக்காவை முற்றிலும் திணறடித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்கள் மற்றும் அதன் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வைரஸை சீனா தனது ஆய்வகத்தில் உருவாக்கியதாகவும், திட்டமிட்டு பிற நாடுகளுக்கு கட்டவிழ்த்து விட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

ஏற்கனவே வர்த்தக போர், தென்சீனக்கடல் பிரச்சனை போன்றவற்றால் அமெரிக்கா- சீனா இடையிலான உறவு மிகவும் மோசமாகியிருந்த சூழலில் தற்போது கொரோனா வைரஸ் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே தீரா பகையை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் அதேவேளையில் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வசைபாடியும் வருகிறது.

இந்த நிலையில் உலகத்துக்கு எதிராக சீனா முன்வைத்துள்ள சவாலுக்கு பதிலடி தர வேண்டிய நேரம் வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது அந்நாட்டின் வெளியுறவு மந்திரி பாம்பியோ இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

சீன கம்யூனிஸ்டு கட்சி முன்வைத்த சவாலுக்கு எதிராக உலகம் பதிலடி தரும் நேரம் வந்துவிட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் அச்சுறுத்தலை புரிந்து கொண்டுள்ளன. அமெரிக்கா இந்த அச்சுறுத்தலை நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கும், சுதந்திரத்தை நேசிக்க மக்களுக்கும், நம் அனைவருக்கும் எதிராக சீனா முன்வைக்கும் சவாலுக்கு நாம் பதிலடி தர வேண்டியது அவசியம்.

கடந்த 40 ஆண்டுகளாக அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்கள் வேறு வழியின்றி அமெரிக்காவை சீனா பலவீனப்படுத்த அனுமதித்தன. ஆனால் இனி அது நடக்காது என ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவுக்கு தப்பி வந்த ஹாங்காங்கைச் சேர்ந்த டாக்டர் யான் லிமெங்கின் கூற்றுப்படி கொரோனா வைரஸ் பரவல் தொடங்குவதற்கு 3 வாரங்களுக்கு முன்பாகவே அது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவும் என்பதை சீன அரசு அறிந்திருந்தது.

இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க தேவையான அறிவை உலகிற்கு மறுப்பதற்கான முயற்சியில் உலக சுகாதார அமைப்பும் சீனாவுக்கு ஒத்துழைத்தது. இதை மூடிமறைத்ததற்காக சீனாவை பொறுப்பேற்கவைக்க உலகம் ஒன்றுபடும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பாம்பியோ கூறினார்.

எளிமையான முறையில் நடைபெற்ற இங்கிலாந்து ராணி பேத்தியின் திருமணம்!

Quick Share

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், இளவரசர் ஆண்ட்ரூவின் மகளுமான இளவரசி பீட்ரைசுக்கு (வயது 31) நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. கோடீஸ்வரரும், பிரபல தொழிலதிபருமான எடோர்டோ மாபெல்லி மோஷியை (37) அவர் கரம் பிடித்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த மே மாதம் பிரமாண்டமான முறையில் திருமணம் நடக்க இருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இளவரசி பீட்ரைசுக்கும் எடோர்டோ மாபெல்லி மோஷிக்கும் ரகசியமான முறையில் மிகவும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண விழாவில் ராணி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் பிலீப் மற்றும் மகன் ஆண்ட்ரூவுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இந்த திருமண விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரியாதையா சுருட்டு !! முக்கிய மீட்டிங்கில் புகுந்து வால் ஆட்டிக்கொண்டு அட்டகாசம் செய்த ...

Quick Share

உலகம் முழுவதும் குரானின் தாக்கம் பல கோடி கணக்கான மக்களின் வாழ்க்கைமுறையை மாற்றி விட்டது. பல தரப்பு மக்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆன்லைன் மட்டும் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துகின்றனர். முக்கியமான ஆலோசனைகள் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் இணையதளம் மூலமாகவே நடக்கிறது.

இந்நிலையில் லண்டனில் லண்டன் பாராளுமன்ற குழுவின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறைகளின் செயல்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எம்.பி ஜான் நிக்கல்சன் வீடியோ கான்ப்ரன்சிங்கில் பேசிக்கொண்டிருந்தார். செய்தியாளர்களிடம் Zoom வீடியோகால் மூலம் பேசிக்கொண்டிருந்த எம்.பி நடுவே அவர் வளர்க்கும் rocco என்னும் பூனை ஒன்று குறுக்கிட்டு கேமரா முன் வால் ஆட்டி அவருக்கு இடைஞ்சல் செய்துள்ளது.

இப்படி வீட்டில் இருந்து பல அரசியல்வாதிகளும், செய்தியாளர்கள் வீடியோ காண்பிரென்சிங்-ல் அடிக்கடி வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகள் குறுக்கே புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறது பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக உள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமி...

Quick Share

சீனா – அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் மோதல் போக்கை தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் அமெரிக்காவில் நுழையத் தடை விதிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அமெரிக்கா, சீனா இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என கூறி வரும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிரான பல்வேறு நவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக சீனர்களுக்கு விசா கட்டுப்பாடு, சீன மாணவர்கள் அமெரிக்காவில் பயில கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட பல்வேறு தடாலடி நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

இதனால் இரு நாடுகளும் இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைதுள்ளது. இதனிடையே ஹாங்காங்கிற்கான தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் வகையிலான பாதுகாப்புச் சட்டத்தை அன்மையில் சீனா நிறைவேற்றியது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி சீனா சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விவாதத்தில் உள்ள இந்த திட்டம், அமலுக்கு வரும் போது சீன அதிகாரிகள் வர தடை விதிக்கப்படுவதோடு அமெரிக்காவில் இருப்பவர்களையும் வெளியேற்ற வகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சீன ராணுவம் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள நிர்வாகிகளுக்கும் அமெரிக்காவிற்கு வர கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. திட்டத்தின் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

ஏற்கனவே ஹாங்காங் தன்னாட்சி மீதான அத்துமீறலுக்கு சீனாவை தண்டிக்கும் சட்டத்திலும், நிறைவேற்றும் ஆணையிலும் நேற்று முந்தினம் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள நிலையில், சீன அதிகாரிகளை தடை செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களை வியப்பில் ஆழ்த்திய வைரம் பதித்த முகக்கவசம்!

Quick Share

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை கவர பல்வேறு வண்ணங்கள் மற்றும் பிரபலங்களின் படங்களுடன் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படும் செய்திகளை பார்த்து வருகிறோம். ஆனால், சூரத்தில் உள்ள நகைக்கடை இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வைரம் பதித்த இந்த முகக்கவசங்கள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் நகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறும்போது, வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் வைத்து நடைபெறும் திருமணத்திற்காக எங்கள் கடைக்கு வந்து, மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்துவமான முகக்கவசங்கள் வேண்டும் என கோரியதைத் தொடர்ந்து, தனக்கு இந்த யோசனை வந்ததாக கூறினார்.

இதே போல் மராட்டிய மாநிலம், புனே சிஞ்ச்வாடை சேர்ந்த சங்கர் என்பவர், 2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தங்கத்தில் முக கவசம் செய்து அணிந்து கொண்டிருந்தார் என்பது நினைவில் இருக்கலாம்.

“சூப்பர் ஹீரோவான சிறுவன்”, தனது உயிரை பற்றி கவலை படாமல் சிறுவன் செய்த செயல்

Quick Share

அமெரிக்கா Cheyenne, Wyoming பகுதியை பிரிட்ஜர் வாக்கர் என்னும் ஆறு வயது சிறுவன் ஒருவன், தனது தங்கையை துரத்திய நாய் ஒன்றின் முன்பு விழுந்து கடிப்பதை தடுத்து நிறுத்தி தனது தங்கையை நாயிடம் இருந்து காப்பாற்றியுள்ளான். இந்த விபத்தில், அந்த நாய் சிறுவன் வாக்கரின் இடது கன்னத்தில் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு மொத்தம் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்த விபத்திற்கு பின்னர் பேசிய சிறுவன், ‘எங்களிடையே முதலில் ஒருவர் உயிரிழப்பதாய் இருந்தால் அது நானாக தான் இருக்க வேண்டும்’ என சிறுவன் கூறியுள்ளான்.

Nikki Walker என்ற பெண்மணி சிறுவன் மற்றும் சிறுவனின் தங்கையின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிந்துள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை பற்றி முழுவதுமாக விளக்கியுள்ளார்.

இணையதளங்களில் இந்த பதிவு வைரலாகிவருகிறது. ஆபத்து காலத்திலும் மோசமான சூழ்நிலையிலும், தனது தங்கையை காத்துக் கொள்ள சிறுவன் எடுத்துக் கொண்ட ஆபத்தான முயற்சியால் பல பிரபலங்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஒரே நாளில் இச்சிறுவன் உலக அளவில் பேமஸ் ஆகியுள்ளான்.

View this post on Instagram

There are no words. We are so, so thankful.

A post shared by Nikki Walker (@nicolenoelwalker) on

இந்தியர்கள் மீது நம்பிக்கை இருக்கு.., இந்த நிலைமையில் கொரோனவை சமாளிக்க இந்தியாவால் தான்...

Quick Share

இந்திய மருந்தியல் துறை இந்தியாவுக்கு மட்டுமின்றி மொத்த உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை வழங்க முடியும் என நான் எதிர்பார்க்கிறேன் என மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மைக்ரோ சாப்ட் நிறுவனரும் உலகின் கோடீஸ்வரர்களின் ஒருவரான பில்கேட்ஸ் சமீபத்தில் செய்தியாளர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்தித்தார். அதில் பேசிய அவர் பேசிய பில்கேட்ஸ், ‘இந்தியாவில் பல முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இப்போது உள்ள நிலைமையில் இந்திய மருந்தியல் துறை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான உதவிகளை சிறப்பாக செய்து வருகின்றது. அவர்கள் மற்ற நோய்க்கும் மருந்துகளை கண்டுபிடித்துள்ளனர்’ என தெரிவித்தார்.

பில்கேட்ஸ் ஏற்கனவே பல மேடைகளில் எதிர்காலத்தில் வைரஸ் தாக்கம் ஒரு ஆயுதமாக மாறும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார் அதற்கான நடவடிக்கைகளை மற்றும் மருத்துவப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பில்கேட்ஸ் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்கேட்ஸ் ஏற்கனவே பல மேடைகளில் எதிர்காலத்தில் வைரஸ் தாக்கம் ஒரு ஆயுதமாக மாறும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார் அதற்கான நடவடிக்கைகளை மற்றும் மருத்துவப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பில்கேட்ஸ் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தடுப்புமருந்து வெளியாகும் என Bharat Biotech நிறுவனம் அறிவித்தது. ஆனால் பாதுகாப்பு கருதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சில காலம் எடுக்கும் என அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பில்கேட்ஸின் இந்த பேச்சு அவர் இந்தியர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது,

உலகளவில் கொரோனா பரிசோதனையில் 2-ம் இடத்தில் இந்தியா உள்ளது – வெள்ளை மாளிகை தகவல்&#...

Quick Share

உலக அளவில் கொரோனா பரிசோதனையில் அமெரிக்காவிற்கு அடுத்த அதிக பரிசோதனை மேற்கொண்ட நாடாக இந்தியா உள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதிகபட்சமாக அமெரிக்காவில் 36 லட்சத்து 95 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1.41 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடங்களில் பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு நாடுகள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்களிடையே அச்சம் நிலவினாலும், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதால் தான் பாதிப்பு எண்ணிக்கை கூடுவதாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கூறுகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி கூறியதாவது:

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் 4.2 கோடிக்கும் அதிகமாக செய்துள்ளோம். இரண்டாவது மிக அதிக சோதனை செய்த நாடாக இந்தியா உள்ளது. அங்கு 1.2 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையில் நாங்கள் (அமெரிக்கா, இந்தியா) உலகை வழிநடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கிழக்கு லடாக்கிலிருந்து படைகளை திரும்ப பெறுவது சிக்கலானது – இந்திய ராணுவம் தகவல்&...

Quick Share

கிழக்கு லடாக்கில் படைகளை திரும்பபெறும் செயல்முறை சிக்கலானது என்று இந்திய ராணுவம் தகவல் அளித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்றதால், எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. க

ல்வான் உட்பட பல இந்திய பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவி இருப்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், சீன படைகளை வாபஸ் பெற வைப்பது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளால், சீன ராணுவம் வாபஸ் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியா-சீனா இடையே 4வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த செவ்வாயன்று தொடங்கியது. செவ்வாயன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது.

இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இருநாட்டு ராணுவ தளபதிகளும் முதல்கட்டமாக வீரர்களை திரும்ப பெறுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்தனர். படைகளை வாபஸ் பெறுவதில், இரு நாடுகளும் உறுதியாக உள்ளன. கிழக்கு லடாக்கில் படைகளை திரும்பபெறும் செயல்முறை சிக்கலானது. அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளது.,’ என கூறப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை வெற்றி..! அடுத்த மாத மத்தியில் வருகிறது கொரோனாவை விரட்டும் மருந்து…

Quick Share

உலகை அச்சுறுத்திய கொரோனாவை விரட்ட தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும், அடுத்த மாத மத்தியில் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 1.36 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தின் உருவாக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் செசனோவ் மருத்துவ பல்கலை மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக தெரிவித்தது.

இது குறித்து ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கொரோனா தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனையில் பாதகமான நிகழ்வுகள், சுகாதார பிரச்னைகள், சிக்கல்கள் அல்லது பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக மீண்டனர். சோதனைகளின் முடிவுகள் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நல்ல சகிப்புத்தன்மை குறித்து நம்பிக்கையை அளித்துள்ளது.

தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது, ஆன்டிபாடிகள் உருவாக்கப்படுகின்றன. அது நம்மை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன. இம்மாத இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளதாக’’ தெரிவிக்கப்பட்டுள்ளது.




You cannot copy content of this Website